உன்னத
உயர்வல்லவா...
ஊடகவியலாளர்களின் விழிவாசலில்
கீழ்க்காணும் செய்திகளை நிறுத்தி வைத்து மகிழ்வடைகிறேன்
கீழ்க்காணும் செய்திகளை நிறுத்தி வைத்து மகிழ்வடைகிறேன்
1967
முதல் 1969 வரை
* மெட்ராஸ் ஸ்டேட்
என்பதை தமிழ்நாடு என்ற பெயர்.
* சுயமரியாதை திருமணச்
சட்டம்.
* தமிழ், ஆங்கிலம்
மட்டுமே என்ற இரு மொழித் திட்டம்.
* அரசு ஊழியர்கள்
தங்கள் விடுப்பைச் சரணளித்து ஈடான ஊதியம் பெறும் ஈட்டிய விடுப்புச் சரணளிப்பு திட்டம்.
* அரசு அலுவலகங்களில்
மதச் சின்னங்கள் இருக்கக்கூடாது என்ற ஆணை.
1969
முதல் 1971 வரை
* பேருந்துகள்
நாட்டுடைமை.
* போக்குவரத்துக்
கழகங்கள் உருவாக்கம்.
* அனைத்துக் கிராமங்களுக்கும்
மின் இணைப்புத் திட்டம்.
* 1,500 மக்கள்
தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைகளோடு இணைக்க இணைப்புச் சலைகள் திட்டம்.
* குடிசை மாற்று
வாரியம்.
* குடிநீர் வடிகால்
வாரியம்.
* கண்ணொளி வழங்கும்
திட்டம்.
* பிச்சைக்காரர்கள்
மறுவாழ்வுத் திட்டம்.
* கை ரிக்ஷாக்களை
ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்.
* ஊனமுற்றோர் நல்வாழ்வுத்
திட்டம்.
* கை ரிக்ஷாக்களை
ஒழித்து இலவச சைக்கிளை ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம்.
* ஊனமுற்றோர் நல்வாழ்வுத்
திட்டம்.
* தாழ்த்தப்பட்டோர்க்கு
இலவச கான்கிரீட் வீடுகள்.
* குடியிருப்பு
மனை மற்றும் பண்ணைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டங்கள்.
* இந்தியாவிலேயே
முதன்முதலாக காவலர் ஆணையம் (கணிடூடிஞிஞு இணிட்ட்டிண்ண்டிணிண) அமைத்தது.
* பிற்படுத்தப்பட்டோருக்கும்,
தாழ்த்தப்பட்டோருக்கும் தனித்தனியாக அமைச்சகம்.
* பிற்படுத்தபட்டோர்
நலக்குழு அமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும்,
தாழ்த்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டை 16 விழுக்காடாகவும் உயர்த்தியது.
* புதுமுக வகுப்பு
வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி
* மே தினத்திற்கு
ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை.
* நபிகள் நாயகம்
பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை.
1971
முதல் 1976 வரை
* இந்தியாவிலேயே
முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக் கழகம்.
* அரசு ஊழியர்
குடும்பப் பாதுகாப்புத் திட்டம்.
* அரசு அலுவலர்
இரகசியக் குறிப்பேட்டு முறை ஒழிப்பு.
* மீனவர்களுக்கு
இலவச வீட்டுவசதித் திட்டம்.
* சிறார்களுக்கு
ஆலயங்களில் கருணை இல்லங்கள்.
* சேலம் உருக்காலைத்
திட்டம்.
* 15 ஸ்டாண்டர்ஸ்
ஏக்கரா என்று நில உச்சவரம்புச் சட்டம்.
* நெய்வேலி நிலக்கரி
இரண்டாவது சுரங்கம் - மின் திட்டம்.
* தூத்துக்குடி
ரசாயண உரத் தொழிற்சாலை.
* சிறுதொழில் வளர்ச்சிக்
கழகம் (சிட்கோ).
* சிப்காட் வளாகங்கள்.
* தமிழ் பேசும்
முஸ்லீம்களைப் போலவே உருது பேசும் முஸ்லீம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
* புன்செய் நிலவரி
அறவே நீக்கம்.
* மக்கள் குறை
தீர்க்கும் மனுநீதித் திட்டம்.
* பூம்புகார் கப்பல்
போக்குவரத்துக் கழகம்.
* கொங்கு வேளாளர்
சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
* பசுமைப் புரட்சித்
திட்டம்.
1989
முதல் 1991 வரை
* வன்னியர், சீர்
மரபினர் உள்ளிட்டோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து, அவர்களுக்கு 20 விழுக்காடு
தனி இட ஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்டோர்க்கு
மட்டும் 18 விழுக்காடு, பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு.
* மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்க்கும், வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு
வரை இலவசக் கல்வி.
* தாழ்த்தப்பட்ட
வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பெண்ணுக்கும் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி.
* வேளாண்மைக்கு
இலவச மின்சாரம்.
* பெண்களுக்குச்
சொத்துரிமை வழங்கும் சட்டம்.
* அரசுப் பணிகளில்
பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.
* ஆசியாவிலேயே
முதன் முதலாக கால்நடைப் பல்கலைக் கழகம்.
* ஏழைப் பெண்களுக்குத்
திருமண உதவித் திட்டம்.
* விதவைகளுக்கு
மறுமண உதவித் திட்டம்.
* கலப்புத் திருமணத்தை
ஊக்குவிக்க நிதியுதவி.
* நேரடி நெல் கொள்முதல்
நிலையங்கள்.
* விவசாயிகளிடமிருந்து
கொள்முதல் செய்ய ஊக்கத்தொகை வண்டிச்சத்தம்.
* நுகர்பொருள்
வாணிபக் கழகத்தை நிறுவியமை.
* கருவுற்றப் பெண்களுக்கு
நிதியுதவி.
* மத்திய அரசு
அலுவலர்களுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்ததோடு, அதனை முன்
தேதியிட்டு வழங்கியது.
* 10 இலட்சம் மகளிர்
பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம்.
* மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைத்தது.
* பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைக்கழகம் அமைத்தது.
* டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவப் பல்கலைக்கழகம் அமைத்தது.
* காவிரி நடுவர்
ஆணையம் அமைந்திட முயற்சித்தது.
1996
முதல் 201 வரை
* ஆட்சிப் பொறுப்பையேற்ற
ஆறு மாதங்களுக்குள் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப் பெறாமலிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும்
கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.
* உள்ளாட்சி அமைப்புகளில்
பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு.
* இரண்டு பெண்
மேயர்கள் உட்பட 44 ஆயிரத்து 143 பதவிகளில் பெண்கள் பதவி ஏற்பு, இரண்டு மேயர்களில் ஒருவர்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி.
* மெட்ராஸ் என்பதற்கு
சென்னை என்ற பெயர்.
* பொறியியற் கல்லூரிகள்,
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஒற்றைச் சாளர முறை.
* வெளிப்படையான
புதிய தொழில் கொள்கை.
* தொழில் தொடங்கிடத்
தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கிட ஒற்றைச் சாளர முறை.
* மேம்படுத்தப்பட்ட
சாலைகள், புதிய புதிய பாலங்கள்.
* கிராமங்களில்
கான்கிரீட் தெருக்கள் அமைக்கும் திட்டம்.
* ஆறுகள், குளங்கள்,
கால்வாய்களில் வரலாறு காணாத அளவுக்கு தூர்வாருதல் திட்டம்
* 24 மணிநேரமும்
இயங்கிவரும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள்.
* சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டுத் திட்டம்.
* அனைத்து கிராமங்களுக்கும்
பாதுகாக்கப்பட்ட குடிநீர்.
* கிராமப்புற மாணவர்களுக்குத்
தொழில் கல்லூரிகளில் 15 விழுக்காடு இடஒதுக்கீடு.
* சாதிப்பூசல்களை
அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்.
* கிராமப்புறங்களுக்கு
மினி பஸ் திட்டம்.
* அம்பேத்கார்
பெயரில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம்.
* சேலத்தில் பெரியார்
பல்கலைக்கழகம்.
* உலகத் தமிழர்களுக்கு
உதவிடத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.
* உருது அகாடமி.
* சிறுபான்மையினர்
பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.
* சென்னை - திரைப்பட
நகருக்கு ஜெ.ஜெ. திரைப்பட நகர் என்றிருந்ததை மாற்றி டாக்டர். எம்.ஜி.ஆர். திரைப்பட
நகர் என்று பெயர் மாற்றம்.
* உழவர் சந்தைகள்
திட்டம்.
* வருமுன் காப்போம்
திட்டம்.
* வாழ்ந்து காட்டுவோம்
திட்டம்.
* கால்நடைப் பாதுகாப்புத்
திட்டம்.
* பள்ளிகளில் வாழ்வொளித்
திட்டம்.
* தென் குமரியில்
133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை.
* சென்னையில் டைடல்
பூங்கா.
* அரசுக் கல்லூரி
மாணவர்களுக்குக் கணினிப் பயிற்சித் திட்டம்.
* அரசுக்குத் தேவைப்படாத
புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டிக் குடியிருந்து வருவோர்க்கு வீட்டுமனை உரிமையாக்கும்
சிறப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைகள்.
* 10ஆம் வகுப்பு,
12 ஆம் வகுப்பு படித்து முடித்துச் செல்லும் போதே சாதிச் சான்றிதழ், வாழ்விடச் சான்றிதழ்,
வருமானச் சான்றிதழ் வழங்கும் திட்டம் 1999-2000 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
* 10ஆம் வகுப்பு,
12ஆம் வகுப்புத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப்
பெறும் மாணவர்களது உயர் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் திட்டம் 1996 முதல்
நடைமுறை.
* ஆசியாவிலேயே
மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னைக் கோயம்பேட்டில் நிறுவிட வழிவகை செய்தது.
* தென் மாவட்டங்களில்
பொருளாதார வளர்ச்சிக்குச் சிறப்புத் திட்டம்.
* சேமிப்புடன்
கூடிய மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்.
* விவசாயத் தொழிலாளர்களுக்குத்
தனிநல வாரியம்.
* அமைப்புச்சாரா
தொழிலாளர்களுக்கு நலவாரியம்.
* தமிழச் சான்றோர்களுக்கும்,
தியாகிகளுக்கும் மணிமண்டபம்.
* பள்ளிச் சிறார்களுக்கு
சத்துணவோடு முட்டை வழங்கியது.
* இருபதுக்கும்
மேற்பட்ட அணைக்கட்டுகள் கட்டியது.
* ஒன்பது மாவட்டங்களில்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களுக்குப் புதிதாகக் கட்டடங்கள்.
* மதுரை மாநகரில்
முதன்முறையாக உயர்நீதிமன்றக் கிளை அமைத்து அதற்கான கட்டங்களையும், வேறு பல மாவட்டங்களில்
புதிய நீதி மன்றக் கட்டடங்களையும் கட்டியது.
* மாணவர்களுக்கு
இலவச பேருந்து பயண அட்டை.
* அண்ணா மறுமலர்ச்சித்
திட்டம்.
* நமக்கு நாமே
திட்டம்.
* நலிந்தோர் குடும்ப
நலத் திட்டம்.
* சென்னை பொது
மருத்துவனைக்கு 104 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்.
* 13 ஆயிரம் மக்கள்
நலப் பணியாளர்களை மீண்டும் நியமனம் செய்தது.
* முதன்முதலாக
10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம் செய்தது.
* தமிழ்ச் சான்றோர்
எழுதிய நூல்களை அரசுடைமையாக்கியது.
* சென்னை நகரில்
ஒன்பது மாநராட்சி மேம்பாலங்கள் அமைத்தது.
* ரூபாய் 1500
கோடி செலவில் 350 துணை மின் நிலையங்கள்.
* ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு
ஓய்வூதியத் திட்டம்.
* வேலூர், தூத்துக்குடி
கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.
2006
முதல் 2011 வரை
* ஒரு ரூபாய்க்கு
ஒரு கிலோ அரசி வீதம் 20 கிலோ அரிசி, ஒரு கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.
* மாதந்தோறும்
குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப்பட்ட
கோதுமை மாவு.
* மானிய விலையில்
மளிகைப் பொருட்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருட்கள்.
* 22 இலட்சத்து
40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிர் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
* விவசாயிகளுக்கான
பயிர்க்கடன் வட்டி ரத்து.
* சாதா ரக நெல்
கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 1050 ருபாய், சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்.
* வீடுகள் தோறும்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.
* எரிவாயு இணைப்புடன்
இலவச எரிவாயு அடுப்புகள்.
* மீண்டும் புதுப்பொலிவுடன்
177 உழவர் சந்தைகள், மேலும் புதிதாக உழவர் சந்தைகள் அமைப்பு.
* கரும்பு விவசாயிகளுக்குப்
போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து டன் ஒன்றுக்கு ரூபாய் 2000.
* மாநிலத்திற்குள்
பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம்.
* 369 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்.
* விவசாயத் தொழிலாளர்
நல வாரியம் உட்பட 31 அமைப்புச் சாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 2 இலட்சத்து
21 ஆயிரத்து 564 உறுப்பினர் சேர்ப்பு.
* 13 இலட்சத்து
6 ஆயிரத்து 492 அமைப்பு சாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 616 கோடியோ 43 இலட்சத்து
44 ஆயிரத்து 832 ரூபாய் உதவித் தொகை.
* ஒரு கோடியே
58 இலட்சத்து 8 ஆயிரத்து 288 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள்.
* காமராசர் பிறந்த
நாளில் கல்வி வளர்ச்சி நாள் என் பள்ளிகளில் கல்வி விழா.
* சத்துணவுடன்
வாரம் 5 நாள் முட்டைகள், வாழைப்பழங்கள்.
* ஆண்டு தோறும்
24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 2 இலட்சத்து 88 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு
இலவச பஸ் பாஸ்.
* தொழிற்கல்வி
படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.
* பத்தாம் வகுப்பு
வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடம் எனச் சட்டம் - தமிழில் படித்தவர்களுக்கு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
* நூற்றாண்டுக்
கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.
* 4724 திருக்கோயில்களில்
523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் மேலும் 1100 திருக்கோயில்களில் 100 கோடி ரூபாய் செலவில் குடமுழுக்கு.
* அர்ச்சகர்கள்
மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் 277 இலட்சம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
* மூவலூர் இராமாமிர்தம்
அம்மையார் திருமணத் திட்ட நிதியுதவி 10 ஆயிரம் என்பது 25 ஆயிரம் ரூபாய் என உயர்வு.
* ஏழை கர்ப்பிணிப்
பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 20 இலட்சத்து 11 ஆயிரத்து 517 ஏழை மகளிர்க்கு
நிதியுதவி.
* அரசு ஊழியர்களுக்கு
நான்காண்டுகளில் 2 இலட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத்
திட்டம்.
* வரும் முன் காப்போம்
திட்டத்தின் கீழ் இதுவரை 18 ஆயிரத்து 742 முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடியே 77 இலட்சத்து
5 ஆயிரத்து 8 பேர் பயன் பெற்றுள்ளனர்.
* இதய நோய், நீரிழிவு
நோய், புற்று நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உடல் பரிசோதனை செய்ய நலமான தமிழகம்
திட்டம்.
* உயிர்காக்கும்
உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக இதுவரை 2 இலட்சத்து 70 ஆயிரத்து
265 ஏழை மக்களுக்கு 702 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள்.
* மத்திய அரசின்
உதவியோடு அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத் திட்டம் வழியாக இதுவரை 8 இலட்சத்து
8 ஆயிரத்து 907 பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும் 42 ஆயிரத்து 232 நபர்களின் உயிர் காக்கப்பட்டுள்ளது.
* ஏறத்தாழ 2 இலட்சத்து
22 ஆயிரத்து 569 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான
25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கைகள்.
* 3 இலட்சத்து
5 ஆயிரத்து 801 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவித் தொகை
வழங்கப்பட்டுள்ளது.
* 4 இலட்சத்து
65 ஆயிரத்து 658 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள்.
* கோவை, திருச்சி,
மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் டைடல் பூங்காக்கள்.
* கடுமையான பாதிக்கப்பட்ட
மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய்
என உயர்த்தப்பட்டதால் கடும் மாற்றுத் திறனாளிகள் பத்தாயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
* கழக அரசு தொடங்கிய
மகளிர் திட்டத்தின் வழியாக இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின்
எண்ணிக்கை 4 இலட்சத்து 41 ஆயிரத்து 311. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்
ரூபாய் 6342 கோடி.
* 2,033 கோடி ரூபாய்
செலவில் 10 ஆயிரத்து 96 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ்
அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்.
* 12 ஆயிரத்து
94 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப்
பணிகளும், பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* 4 ஆயிரத்து
945 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழித் தடங்களாக அகலப்படுத்தப்பட்டுள்ளன.
* தலவரி, தலமேல்
வரி, தண்ணீர் தீர்வை அனைத்து ரத்து, நில உரிமையின் அடையாளமாக நிலவரி மட்டும் ஏக்கர்
ஒன்றுக்கு புன்செய் நிலங்களுக்கு 2 ரூபாய், நன்செய் நிலங்களுக்கு 5 ரூபாய்.
* கட்டணம் உயர்த்தப்படாமல்
12 ஆயிரத்து 137 புதியப் பேருந்துகளுடன் மேலும் 300 புதிய பேருந்துகள்.
* இசுலாமியர் சமுதாயம்
மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.
* அருந்ததியினர்
சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஓதுக்கீடு.
* சமத்துவ சமுதாயம்
காணும் நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்.
* சாதி பேதமற்ற
சமத்துவ சமுதாயத்தை உருவாக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன்
மேலும் 95 சமத்துவபுரங்கள்.
* சென்னை கோட்டூர்புரத்தில்
உலகத்தரத்தில் 171 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்.
* 1200 கோடி ரூபாய்
செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகம்.
* 100 கோடி ரூபாய்
செலவில் அடையாறு தொல்காப்பியப் பூங்கா.
* சென்னையின் மையப்
பகுதியில் செம்மொழிப் பூங்கா.
* வட சென்னை மூஞ்சூரில்
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
* தென் சென்னையில்
நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
* ஜப்பான் பன்னாட்டுக்
கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒக்கேனக்கல் கூட்டுக்
குடிநீர்த் திட்டம்.
* 630 கோடி ரூபாய்
செலவில் இராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றம்.
* டெஸ்மா, எஸ்மா
சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும்
வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம்
ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதிய குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன.
* 21 இலட்சம் குடிசை
வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்.
* பத்திரிக்கையாளர்கள்
ஓய்வூதியம் ரூபாய் 4000 லிருந்து 5000 ஆக உயர்த்தியும், அவர்கள் குடும்ப ஓய்வூதியம்
ரூபாய் 2000 லிருந்து 2500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* கோவையில் முதன்முதலாக
உலகத் தமிழ்ச் செம்மொழி நாநாடு 2010 ஜுன் திங்களில் நடைபெற்றது.
* 119 புதிய நீதிமன்றங்கள்
திறக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிக்காக ரூ.302 கோடி ஒதுக்கீடு.
* 10 ஆவது நிதிக்குழுவின்
பரிந்துரையின்படி மாலை நேர, விடுமுறை நாள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையிலுள்ள
வழக்குகளைக் கணிசமாகக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* அண்ணா பல்கலைக்கழகம்,
திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
* சிறுபான்மையினர்
நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களையும் 648 ஆசிரியரல்லாத
பணியிடங்களையும் நிரப்புவதற்கு ரூ.331 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளிக் கல்வியில்
கற்றல் முறையில் மாணவர்களை சம அளவில் மதிப்பீடு செய்யும் ஒரே சீரான பாடத்திட்டத்தையும்,
தேர்வு முறையையும் கொண்டு வந்து பள்ளிக் கல்வியில் சமச்சீர் கல்வி முறை.
* தனியார பள்ளிகளில்
அதிக்க கட்டணங்களை பெற்றோர்கள் மீது சுமத்துவதைத் தடுக்கும் வண்ணம் ஒரு நபர் நீதிபதிக்
குழுவினை அமைத்து கட்டண சீராக்கம் செய்யப்பட்டு வருகிறது.
* அரசு, அரசு சார்ந்த
நிறுவனங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் 6 இலட்சம் பேர் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்.
மத்திய
அரசில் தி.மு.க. இடம் பெற்று
தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள்
தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள்
* தேசிய நெடுஞ்சாலை
ஆணையத்தின் வழியாக 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் முக்கிய நகரங்கலை
இணைக்கும் நான்கு வழி, ஆறு வழிப்பாதைகளும், மிகப் பெரிய மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
* தமிழ் நாட்டில்
அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் விரைந்து சரக்குகளைக் கையாள்வதற்கு
23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் நிறைவேற்றப்பட்டுத் தொழில்
வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
* சேலம் உருட்டாலை
1553 கோடி ரூபாய் செலவில், தரத்தில் பன்னாட்டு அளவிற்கு உயர்த்தப்பட்டு புதிய உருட்டாலை
நிறுவப்பட்டுள்ளது.
* மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில்
நோக்கியா நிறுவனம் நிறுவப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
* ஓரகடத்தில்
1400 கோடி ரூபாய் செலவில் வாகன சோதனை ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.
* தமிழகத்தை Detroit
of South India ஐணஞீடிச் என பெருமை கொள்ளும் வகையில் கார் தொழிற்சாலைகளை உருவாக்கியமை.
* தேசிய சித்த
மருத்துவ ஆய்வு மையம் தாம்பரத்தில் அமைக்கப்பட்டு நோய் தீர்க்கும் பணிகளைத் தமிழக மக்களுக்கு
ஆற்றி வருகிறது.
* சென்னைக்கு அருகே
உத்தண்டியில் உலகத்தரம் வாய்ந்த தேசியக் கடல்சார் பல்கலைக்கழகம் (National Marine
University) அமைக்கப்பட்டு சிறந்த முறையில், இயங்கி வருகிறது.
* திருவாரூரில்
மத்திய பல்கலைக்கழகம் (Central University) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
* திருச்சியிலும்
கோவையிலும் இந்த மேலாண்மை நிறுவனம் (IIM) அமையவுள்ளது.
* நெசவாளர்கள்
பயனுறும் வகையில் சென்வாட் வரி நீக்கப்பட்டுள்ளது.
* சேலத்தில் புதிய
இரயில்வே மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.
* 120 கோடி ரூபாய்
செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
* சென்னை விமான
நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு அண்ணா பன்னாட்டு முனையம், காமராசர் உள்நாட்டு முனையம்
ஆகியவற்றில் நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது.
* சென்னை மாநகரில்
மெட்ரோ இரயில் திட்டத்திற்கான பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
* மத்திய அரசு
கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலே காணும் திட்டங்களின் வழியே அடுத்தடுத்து அரசுகள் காழ்ப்புணர்ச்சி
இன்றி செயல்பட்டிருந்தால் திட்டங்களை செயல்படுத்தி இருந்தால், செழுமைப் படுத்தியிருந்தால்,
இன்றுள்ள தமிழகமும் தமிழர்களும் உலக நிலைகளுக்கு மேலாகவே வளர்ந்திருக்கும், வளர்ந்திருப்பார்கள்.
ஒருமுறை ஒரு ஏடு எழுதியது இதய வாசலில் நிற்கிறது. ஆம் இந்தியாவின்
எல்லா மாநிலங்களும் மாநிலமாக வளர்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான் ஒரு நாடாக உயர்ந்து
வருகிறது என்று தி.மு.க.வின் ஆட்சித் திறத்தை வியந்து விளக்கி வாழ்த்தியது.
தி.மு.கவை அடுத்து வந்த அதிமுக அரசு, மேற்கண்ட திட்டங்களை சிதைத்து
விட்டது. ஆனால் இத்திட்டங்களில் இறுதி வளர்ச்சி அடைந்த போது திறப்பு விழாக்களை நடத்தி
தித்திப்பு அடைந்தது. திராவிடக் கட்சி என்று அதிமுகவை மற்றவர்கள் சொல்வது போல அதிமுக
தலைமை எண்ணுவதில்லை. மக்களை ஏய்ப்பதற்காக அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பயன்படுத்தும்
இந்த தலைமை திராவிட செழுமைகளை அழித்து ஆரிய சிந்தனைக்குள்தான் அகமகிழ்ந்து கிடக்கின்றது.
உண்மையில் திராவிடக் கட்சியாக இருந்ததில்லை. திமுக மீது காழ்சிந்தை,
கசப்புணர்வு கொண்டு பகைமனம், பாகுபாடு காட்டியிருக்கிறது. திமுகவை பல இடங்களில் பல
நேரங்களில் நகல் எடுத்து நடைபோட்ட அதிமுக அரசு திராவிட உணர்வு உள்ளதென்றால் திமுகவின்
திட்டங்களையும், ஆணைகளையும் நகல் எடுத்து அதன் வழியே செயல்பட்டிருக்கும். அப்படி செயல்பட்டிருந்தால்
தமிழகம் எந்த நாளும் இறக்க நிலை கண்டிருக்காது. மேலும் மேலும் உயர்வை கண்டிருக்கும்.
நடுநிலை ஊடகங்கள் என்று நாட்டுக்கு, ஊருக்கு சொல்வோர் உண்மையுடன் நடந்து கொண்டிருந்தால்,
ஆள்வோரின் தவறுகலை இடித்துக் காட்டியிருந்தால் இன்றுள்ள சிலபல இழிநிலைகளை இல்லாதிருந்திருக்கும்.
கொள்கை உடன்பாடு இல்லாத காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆண்ட மத்திய
அரசில் ஒரு குறைந்த அளவு செயல்திட்டத்தோடு இணைந்து திமுக இங்கே கொண்டு வந்த திட்டங்களின்
காட்சிகள் வெள்ளிடை மழையாக கண்களில் ஒளிர்கிறது. அகல ரயில் பாதைகள், சென்னை மெட்ரோ
ரயில்கள், 4 வழி, 6 வழி தரைச்சாலைகள் தோன்றிக் கொண்டிருக்கும். எண்ணற்ற தொழிற்சாலைகள்,
கல்வி சாலைகள், பல்கலைக்கழகங்கள் என்னும் பயன் நிறைந்த காட்சி நிலைகள் பசுமையாய் பார்ப்போர்
மனங்களின் பதிவாயிருக்கிறது.
இவைகளை எல்லாம் ஆய்ந்தாய்ந்து விளக்குவது என்றால் நாளும் கிழமையும்,
திங்களும் ஆண்டும் நடந்து கொண்டே இருக்கும். ஒளிவெள்ளத்தில் ஊடக நிகழ்வில் முகம் காட்டும்
இமில் கடல்சூழ் முத்தமிழ் செல்வர்களே இவற்றையெல்லாம் சிறிதளவாவது இதயத்தில் கொள்வதுதான்,
எண்ணிப்பார்ப்பது தான் கடமையாகும். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் திமுகவில்
ஈடுபாடு கொண்டோரின் உணர்வையும், உழைப்பையும், அதன் பயன் விளைவுகளையும், உள்ளத்தில்
உள்வாங்கி உறைய வைப்பது தான் உள்ளமிருப்போருக்கு அழகாகும். அதைத்தான் தந்தை பெரியார்
அறிவு நாணயம் என்றார்.
ஓர் அரசியல் கட்சி அன்றாட தேவைக்கான பொருட்களை பெற்றுத் தருவதைத்
தாண்டி பற்பல துறைகளில் பயன்களை விளைவித்து சாதனைகள் நிகழ்த்தியிருக்கின்றார்கள். இவர்களின்
திட்டங்கள், சாதனைகள் போல இங்கு யாராவது செய்திருக்கிறார்களா. இந்த சாதனையின் தலைவன்
தலைவர் கலைஞரின் பெயரை நாளும் நாளும் நாட்டு மக்களுக்கு நினைவு படுத்துங்கள். உண்மைகளை
ஊருக்குச் சொல்வதுதான் ஊடக அறமாகும். அதுதான் அறிவின் செழுமையாகும். அதுதான் ஒரு நாட்டின்
வளர்ச்சித் தரவுகளாகும். நெஞ்சில் கொண்டு நிறைவு காணும் வழியாகும்.
******
இதில் கீழே காணும் கலைஞரின் படைப்புகளோடு, அவர் தீட்டிய திரை
உரையாடல்கள் கொண்ட படங்களின் பெயர்களையும், தமிழ், தமிழக தரவுகள் கொண்ட காட்சிகளையும்,
நினைவகங்களையும் மற்றும் பல அவர் கொடுத்த கொடைகளையும், முழுமையாக பட்டியலிட என்னால்
இயலவில்லை. இதைக்கொண்டு என் இதயம் நிறைவு கொள்கிறது.
காதல் கொலை, கற்பளித்துக் கொலை, கருணைக் கொலை, பகை கொண்டு சாதிய
மோதல், அதனால் ஏற்படும் கொலை, தூக்கில் தொங்கவிட்ட கொலை, தற்கொலை, கொள்ளை, களவு, திருட்டி,
வழிப்பறி, செயின்பறிப்பு, பாலியல் தொந்தரவு, ஆள்மாறாட்டம், கடத்தல், நடுத்தெருவில்
குடிகார சண்டை, ஜாதி சச்சரவு சண்டைகள், பீப் பாடல்கள், வெட்டிப்பேச்சு விவாதங்கள்,
பிற திரைப்பட நட்சத்திரங்களின் கிசுகிசுப்பு, ஆள் கடத்தல், மனமுறிவு, ஊழல், மோசடி,
காலையில் காட்டும் ஆலய சங்கதிகள் மற்றும் பல மனத்தூய்மையற்ற இருட்டறையில் அடைத்து வைக்க
வேண்டிய செய்திகளை ஒளிக்காட்சிகளாக, ஊடக செழுமைகளாக, பத்தி பத்தியாக, காட்டுவதை விட
கலைஞரின் செழுமைகளை, ஏறத்தாழ 75 ஆண்டுகளாக அரசியலிலும், பொதுவாழ்விலும், மற்றமற்ற கலை
இலக்கியத் துறைகளிலும் சூடு குறையாமல், சுவை குன்றாமல், பல திருப்புமுனைகளை கடந்து
பல்வேறு பாதகநிலைகளை தாண்டி தமிழ் மக்களோடு இணைந்து நிற்கின்ற கலைஞரின் செழுமைகளை வெளியிட
இசைவு தந்தால் பார்ப்பவர்கள், படிப்பவர்கள், உள்ளத்தில் நாட்டு தேவையென்ன, நமது நிலையென்ன
என்று தரவுகள் நெஞ்சில் நினைவு கொள்ளும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது ஊடக பணியாளர்கள்,
ஊடக உரிமையாளர்களின் கடமையாகும். உள்ளத் தூய்மையும் ஆகும்.
கலைஞர்
தீட்டிய சமூகப் புதினங்கள்!
1. வெள்ளிக்கிழமை
2. சுருளிமலை
3. வான்கோழி
4. புதையல்
5. ஒரே ரத்தம்
6. ஒரு மரம் பூத்தது
7. அரும்பு (குறும் புதினம்)
8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)
9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
10. நடுத்தெரு நாராணன் (குறும் புதினம்)
கலைஞர்
தீட்டிய வரலாற்றுப் புதினங்கள்!
1. பலிபீடம் நோக்கி
2. ரோமாபுரிப் பாண்டியன்
3. பொன்னர் - சங்கர் (அண்ணன்மார் வரலாறு)
4. பாயும் புலி பண்டாரக வன்னியன்
5. தென்பாண்டிச் சிங்கம்
கலைஞர்
தீட்டிய நாடகங்கள்
1. சாந்தா (அல்லது) பழனியப்பன் (நச்சுக்கோப்பை)
2. மகான் பெற்ற மகன் அம்மையப்பன்
3. மணிமகுடம்
4. தூக்குமேடை
5. இரத்தக் கண்ணீர்
6. உதயசூரியன்
7. ஒரே ரத்தம்
8. திருவாளர் தேசியம் பிள்ளை
9. சிலப்பதிகார நாடகக் காப்பியம்
10. பரதாயணம்
11. புதின இராஜ்யம்
12. நான்மணி மாலை (குறு நாடகங்கள்)
13. காதிதப்பூ
14. பரப்பிரம்மம்
15. நானே அறிவாளி
16. அனார்கலி
17. சாக்ரடீஸ்
18. உன்னைத்தான் தம்பி
19. சேரன் செங்குட்டுவன்
கலைஞரின்
உரை ஓவியங்கள்
1. குறளோவியம் (குறு நூல்)
2. தேனலைகள் (கவிதை நடை கதைகள்)
3. சங்கத்தமிழ் (கவிதை நடை விளக்கம்)
4. திருக்குறல் கலைஞர் உரை
5. தொல்காப்பியப் பூங்கா
கட்டுரை
நூல்கள்
1. உணர்ச்சி மாலை
2. பெருமூச்சு
3. விடுதலைக் கிளர்ச்சி
4. களத்தில் கருணாநித
5. பேசும் கலை வளர்ப்போம்
6. பூந்தோட்டமும், இன முழக்கமும்
7. யாரால்? யாரால்? பாரால்?
8. இலங்கைத் தமிழா, இது கேளாய்
10. திராவிட சம்பத்து
11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார்
12. உரிமையின் குரலும் உண்மையில் தெளிவும்
13. இருளும் ஒளியும்
14. சரித்திரத் திருப்பம்
15. உண்மைகளின் வெளிச்சத்தில்
16. மயிலிறகு
உடன்பிறப்பு
கடிதங்களின் தொகுப்பு
1. கலைஞர் கடிதம் - தொகுதி 1
2. கலைஞர் கடிதம் - தொகுதி 2
3. கலைஞர் கடிதம் - தொகுதி 3
4. கலைஞர் கடிதம் - தொகுதி 4
5. கலைஞர் கடிதம் - தொகுதி 5
6. கலைஞர் கடிதம் - தொகுதி 6
7. கலைஞர் கடிதம் - தொகுதி 7
8. கலைஞர் கடிதம் - தொகுதி 8
9. கலைஞர் கடிதம் - தொகுதி 9
10. கலைஞர் கடிதம் - தொகுதி 10
11. கலைஞர் கடிதம் - தொகுதி 11
12. கலைஞர் கடிதம் - தொகுதி 12
கலைஞரின்
சிறுகதைகள்
1. சங்கிலிச்சாமி
2. கிழவன் கனவு
3. பிள்ளையோ பிள்ளை
4. தப்பிவிட்டார்கள்
5. தாய்மை
6. கண்ணடக்கம்
7. நாடும் நாடகமும்
8. பழக் கூடை
9. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
10. முடியாத தொடர்கதை
11. 16 - கதையினிலே
12. நளாயினி
13. வாழ முடியாதவர்கள்
14. Flame and other stories (Translation)
கலைஞரின்
கவிதைகள்
1. கவிதையல்ல
2. கலைஞரின் கவிதைகள்
3. வாழ்வெனும் பாதையில் (கவியரங்கக் கவிதை)
4. கவியரங்கில் கலைஞர்
5. கலைஞரின் திரை இசைப் பாடல்கள்
6. அண்ணா கவியரங்கம்
7. Pearls (Translation – A Collection of Poems)
கலைஞரின்
பயணநூல் வரலாறு, தன் வரலாறு, நேர்காணல்
1. இனியவை இருபது
2. இந்தியாவில் ஒரு தீவு
3. ஆறுமாதக் கடுங்காவல்
4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)
6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்)
7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)
8. நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)
9. கையில் அள்ளிய கடல் (பேட்டிகளின் தொகுப்பு)
கலைஞரின்
பொன் மொழிகள் சிந்தனைக் கருத்துகள்
1. சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்
2. வைரமணிகள்
3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள்
4. கலைஞரின் நவமணிகள்
5. சிந்தனை ஆழி
6. கருணாநிதியின் கருத்துரைகள்
7. கலைஞரின் கருத்துரைகள்
8. கலைஞரின் உவமைக் களஞ்சியம்
9. கலைஞரின் சொல் நயம்
10. கலைஞரின் சின்னச் சின்ன மலர்கள்
11. கலைஞரின் முத்தமிழ் சிந்தனைத் துளிகள்
12. கலைஞரின் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
13. கலைஞரின் உவமை நயங்கள்
கலைஞரின்
உரை ஓவியங்கள்
1. மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று
2. போர் முரசு
3. அறப்போர்
4. இராவண காவிய நிறைவு விழாப்பேருரை
5. இலக்கிய விருந்து
6. இளைய சமுதாயம் எழுகவே
7. உறவும் உரிமையும்
8. உதயக் கதிர்
9. உதய ஒளி
10. ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!
11. சூளுரை
12. கோவையில் கருணாநிதி
13. தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு
14. பொங்கி வரும் புதுவெள்ளம்
15. பொன்னகரம்
16. மே தின முழக்கம்
17. விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி விழாப் பேருரை தொகுப்பு
18. கயிற்றில் தொங்கிய கணபதி
19. வழிமேல் விழி வைத்து
20. பூந்தோட்டம்
21. முல்லைக்கொல்லை
22. கண்ணீர்த்துளிகள்
23. ஆறுபிணங்கள்
24. சொல்லோவியம்
25. மதுரைப் பல்கலைக் கழக நான்காவது பட்டமளிப்பு விழாப் பேருரை
26. கலைஞரின் போர் முழக்கம்
27. பெரியார் பிறவாமலிருந்தால்
28. நீதிகேட்டு நெடிய பயணம்
29. ஊழல் நாயகன்
30. சென்னை இசைக் கழகம்
31. சென்னைப் பல்கலைக் கழக 118 ஆவது பட்டமளிப்பு விழாப் பேருரை
32. As we March on (Speeches)Translation
சொற்பொழிவுகள்
- தி.மு.க. இளைஞர் அணி வெளியீடுகள்
1. தொடங்கினோம் தொடர்வோம்
2. இன உணர்வு
3. கொள்கையில் கோகினூர்
4. முக்கனி
5. பாபர் மசூதி
6. களம் புக வாரீர்
7. இலக்கிய முழக்கம்
8. சொல்லும் செயலும்
9. தியாக வரலாறு
கலைஞரின்
சொற்பொழிவுகள் அரசு வெளியீடுகள்
1. நமது விளக்கம்
2. பிள்ளை ஒரு செல்வம் - தமிழக அரசு குடும்ப நலத்துறை
3. நமது நிலை
4. நமது குரல்
5. இலட்சியப் பயணம்
6. நம்பிக்கை வாக்கு
7. நமது கோரிக்கை
8. நமது காவலர்
9. கருத்தோவியம்
10. நிலை விளக்கம்
11. இருளும் ஒளியும்
12. மாநில சுயாட்சி
13. உரிமைக் குரல்
14. சொன்னதைச் செய்வோம்
15. எழுச்சிக் கோலம் காண்போம்
16. அடித்தட்டு மக்களுக்கான அமைதிப் புரட்சி
17. நமக்கு நாமே
18. குடும்பத்தின் நல்விளக்கு - தமிழக அரசு குடும்ப நலத்துறை
வெளியீடு
19. யார் பொறுப்பு?
20. வறட்சியை வெல்வோம்
21. உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்
22. இருபது அம்ச திட்டம்
23. வெற்றி நமதே!
24. அரவிந்தர் நூற்றாண்டு விழா
25. கலைஞர் அரசு காவலர்களின் காவலன்
26. கல்லணையிலிருந்து கழனிக்கு
27. மனித உரிமை காப்போம்
28. முன்னேற்றப் பாதையில் பிற்பட்ட வகுப்பினர்
29. அக்னிப் பிரவேசம்
கலைஞரின்
சொற்பொழிவுகள் தி.மு.க. தலைமை நிலைய வெளியீடுகள்
1. தி.மு.க. கேட்பது என்ன?
2. வாளும் கேடயமும்
3. எம்.ஜி.ஆர். மீது ஊழல் குற்றச்சாட்டுகள் (இன்னா நாற்பது)
4. கலைஞர் தொடுத்த கணைகள் (சட்டமன்றப் பேச்சு)
5. இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது?
6. எம்.ஜி.ஆர். ஆட்சியில் உள்ளாட்சி மன்ற ஊழல்களும் உதவாக்கரை
ஆணைகளும்
7. தமிழனுக்கு ஒரு நாடு - தமிழ் ஈழ நாடு
8. அக்கினிக் குஞ்சு
9. எட்டப்பர்கள்! எச்சரிக்கை!
10. ஓர் இனமானப் போர்
11. வீரமணி வென்றிடுக, வெள்ளி மணி ஒலித்திடுக.
12. தலைவர் கலைஞர் மே தின முழக்கம்
13. புள்ளிகள்
14. எம்.ஜி.ஆர். ஆட்சியில் அண்ணா அறிவாலத்துக்குத் தடையா?
15. திசைதிருப்பும் படலம்
16. கடவுள் மீது பழி
17. ஒதுக்கிய நிதியினை ஒதுக்கியது எவரோ?
18. கொழும்பு ஒப்பந்தம்
19. சீறாப்புராணம்
20. உண்மையில் உரத்த குரல்
21. மதுப்பழக்கம் ஒரு சமூகப் பிரச்சினை
22. நாட்டு விடுதலையும் நமது சமுதாய விடுதலையும்
23. கண்ணீர், வியர்வை, இரத்தம்
24. கேரளத்து வள்ளலார் (நாராயண குரு)
25. டாக்டர் அம்பேத்கார்
26. வரலாறு படைப்போம் வாரீர்!
27. இந்தியா? இந்தியாவா?
28. மணவிழா வாழ்த்து
29. அன்றும் - இன்றும்
30. தலைவர் கலைஞர் - மேலவைப் பேருரை
31. வரலாற்றுச் சுவடு
32. தி.மு.க. ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம்
33. மறுசிந்தனை மலர
34. கடற்கரைப் பேருரை
35. உண்மைகளின் வெளிச்சத்தில்
36. அமைதிப் படையா - அமளிப் படையா?
37. ஆகஸ்ட் 7 நவம்பர் 7
38. அன்றும் இன்றும்
39. ஆந்திராவும் இந்திராவும்
40. இதய ஒலி
41. இது ஒரு தொடக்கம்
42. இளைஞர் அணிக்குக் கலைஞர் வேண்டுகோள்
43. எச்சரிக்கை தேவை - எழுச்சி தேவை
44. ஐ.நா. சபைக்குத் தலைவர் கலைஞர் முறையீடு
45. கலைஞர், பேராசிரியர் உரை
46. கழகத்துப் பரணி
47. தலைவர் கலைஞர் திருச்சி மாநில மாநாட்டுப் பேரூரை
48. மாநில உரிமைகளைத் தி.மு.க. காத்திடும்
49. மொழிப்போர் முரசம்
50. வேரில் வேந்நீர்
51. கடிதங்கள் - கடிதங்கள் - கண்ணீர்க் கடிதங்கள்
52. மழை, பெருமழை, தமிழ்மழை
53. தியாக பூமியின் தீரர் வரலாறு
54. Trumpet in Dawn
(Speeches) Translation
55. Social
Liberation – A call to the
people
56. D.M.K. on state
Autonomy, (First Edition – 1983)
57. Sword and Shield
(Translation)
58. கலைஞரின் காலச் சுவடுகள் (ஆல்பம்)
59. மீசை முளைத்த வயதில்
60. கல்லக்குடி களம்
61. மொழிப்போரில் ஒரு களம்
62. இங்கே தென்றல் வீசும்
63. முத்துக் குவியல்
64. இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்
65. கழக மகளிர் கருத்தரங்கம்
66. நெஞ்சைப் பிழியும் நெசவாளர் துயரம்
67. பணப் புழக்கம்
68. எழுமின் இளைஞர்கள்
69. துரோகத்தைப் பற்றி இவர்களா பேசுவது?
60. இயக்கத்தின் தாக்கமும் இளைஞர் எழுச்சியும்
61. பஞ்ச பாண்டவர்களும் பட்ஜெட்டும்
62. அணி வகுப்போம் அறப்போருக்கு நடந்து வந்த பாதை
63. புதியகல்வித் திட்டத்தில் இந்தித் திணிப்பு ஏழைகளின் புறக்கணிப்பு
74. முத்துக்குவியல் -1
75. முத்துக்குவியல் -2
76. தி.மு.க. திறந்த புத்ககம்
77. ஒருதலைக்காதல்
78. கலைஞரின் போர் முரசு
79. மறக்க முடியுமா?
80. கலைஞரின் கவிதை மழை
81. கலைஞரின் - தாய்- காவியம்
82. கலைஞரின் - மனோகரா
83. கலைஞர் சொன்ன கதைகள்
84. கலைஞரின் தேர் சென்ற பாதை
85. கலைஞரின் பசுமை நினைவுகள்
86. மக்களைத் தயார்படுத்துவோம்
87. செம்மொழி
88. வீரப்ப புராணம் - ஆரண்யா காண்டம்
89. கலைஞரின் -தாய் (ஆங்கிலம்)
90. துள்ளி வரும் வேலாக ஆதாரங்களை அள்ளிவரும் பதில்
91. சேதுகால்வாய்த் திட்டம்
92. வேலூர் சூளுரை
93. தலைநகரில் தமிழன் குரல்
94. குற்றவாளிக் கூண்டில் சாகரட்டீஸ்
95. வெற்றிக்கனி பறிப்போம்
96. கலைஞரின் காலச் சுவடுகள்
97. குணிஞிடிச்டூ ஃடிஞஞுணூச்tடிணிண ச் இச்டூடூ tணி tடஞு கஞுணிணீடூஞு
98. அ ஈணூஞுச்ட் இணிட்ஞுண் கூணூதஞு
99. சிந்தனையும் செயலும்
100. காலப்பேழையும் கவிதை சாவியும்
101. தொல்காப்பியர் விருதும்! தூயவர் பாராட்டும்!
102. காவல்! காவல்!
103. தொழில் புரட்சி தொடர்வோம்
104. கோப்புகள் இங்கே கோடிகள் எங்கே?
105. வான்புகழ் கொண்ட வள்ளுவம்
106. சிவகங்கை முழக்கமும் சென்னையில் விளக்கமும்
107. ஐந்தருவி
108. இளைய சமுதாயம் எழுகவே
109. கலைஞர் காவியம் (அட்டை)
110. கலைஞர் காவியம்
111. கலைஞரின் சட்டமன்ற உரைகள்-1
112. கலைஞரின் சட்டமன்ற உரைகள்-2
113. கலைஞரின் சட்டமன்ற உரைகள்-3
114. கலைஞரின் சட்டமன்ற உரைகள்-4
115. கலைஞரின் சட்டமன்ற உரைகள்-5
116. கலைஞரின் சட்டமன்ற உரைகள்-6
117. சட்டப்பேரவையில் கலைஞர் பொன்விழா மலர்
118. Time Capsule of
Kalaignar
119. கருவறை வாசனை
120. பார்வைகள்
121. ஒரு மரம் பூத்தது
122. கலைஞரின் பல்சுவைகள்
123. கலைஞரின் குட்டிக்கதைகள்
124. பேசும் கலை வளர்ப்போம்
125. சேது
126. Sethu
127. இளைஞர்களுக்கு வழிவிடுவோம்
128. திரும்பிப்பார்
129. குறைகுடம் கூத்தாடும்
130. இராவண காவியம்
131. நீதி களஞ்சியம்
132. பலசரக்கு
133. நாண்
134. எனக்குப் பிடித்த கவிதை கட்டுரை எது?
135. என் தம்பி வைரமுத்து
136. கலைஞர்
சட்டமன்ற நினைவு கட்டுரை
No comments:
Post a Comment