போராட்ட
உணர்வில் புகைமூட்டம்
அரசியல் என்பது எல்லாத்துறைகளையும் இணைக்கின்ற சந்திப்பு. ஓரிடத்தில்
முடிகின்ற முடிச்சு என்றார் அறிஞர் அண்ணா அவர்கள். அதில் பயனோ, பாதிக்கப்பட்டோர் எல்லாரும்
அடைந்து தீர வேண்டும் என்று விளக்கினார்.
அந்த அரசியலில் நல்லவர்கள் நிறைந்திருந்தால் நாடும் சமூகமும்
நலன் பெறும். நச்சு மனக் கருத்தாளர்களின் கைப்பிடியில் சிக்கினால் எல்லாமே நாசமாகும்.
ஆகவே நல்லவர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டியது கடமையாகும் என்று விவரித்தார் அண்ணா
அவர்கள்.
ஆனாலும் நல்லவர்களும் நாட்டு மக்களும் அரசியலே அவலம் என்ற மனநிலையிலிருந்து
மாறவில்லை மீளவில்லை என்றே தோன்றுகிறது.
அரசியலில் ஈடுபாடு கொண்ட மிகச்சிறுபான்மையான நல்லவர்கள் கூட
அறிக்கைகள் பரப்புரைகளோடு அமைதியாக விடுவதாகவே தோன்றுகிறது.
பெரியார் தலைமையிலிருந்த திராவிடர் கழகமும் அண்ணா தலைமையிலிருந்த
தி.மு.க-வும் பி.இராமூர்த்தியும் ஜீவாவும் இருந்த பொது உடைமை கட்சிகளும் மாங்குயில்
கூடிவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை எனும் புரட்சிக் கவிஞரின் பாடலோடு
சிறைகளை நிரப்பிய காலம் இருந்தது.
பின்னர் கலைஞர் தலைமையில் மிசாவில் தொடங்கி 1989 வரை சிறைகள்
நிரப்பும் கூட்டமாகவே தி.மு.க விளங்கியது. 1996க்கு பின்னர் அதன் வேகமும் அடர்த்தியும்
குறைந்து விட்டது என்றே தோன்றுகிறது.
சிறை நிரப்பினால் அந்த தியாக உணர்வால் தொண்டர்கள் திட மனதை பன்மடங்கு
பெறுவார்கள்.
அரசியல் வீதியில் இறங்கிப் போராடி சிறை செல்லும் உணர்வெல்லாம்
ஜெயலலிதா போன்றோரின் சிந்தையில் பதியாது. காரணம் உல்லாச வாழ்விலேயே ஊறித் திளைத்தவர்கள்.
ஆனால் தி.மு.க வைத் தவிர மற்றவர்களெல்லாம் அறமோ அரசியில் ஆக்கமோ
இல்லாத போராட்ட உணர்வோ பொதுவாழ்வுப் பொறுப்பு கிஞ்சிற்றும் இல்லாத ஜெயலலிதாவை திரைப்பட
இரசிக உணர்வால் அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்து விட்டு போராட்ட உணர்வை தனிநபர்
ஆதாயத்திற்காக எனும் புகைமூட்டத்தில் மறைத்து விட்டார்கள்.
ஆனால் ஜெயலலிதாவும் சிலமுறை வாழ்வைச் சந்தித்து விட்டார். பொதுமக்களுக்கு
ஓர் அரசியல் கட்சியின் தலைவர் பொதுமக்கள் நலனுக்கோ, போராடுவது ஒரு சில இலக்கணத்திற்கு
சான்று கூடிய சிறைவாழ்வை காணத்தான். செய்த ஊழலுக்காக சென்னையிலும், பெங்களூருவிலும்
சிறைச் சென்றார். உண்டு தரையில் உறங்கினார். இதையெல்லாம் தாண்டி தி.மு.கவைத் தவிர மற்றவர்கள்
தமிழ்நாட்டை தலைகவிழச் செய்திட ஆதரவு தந்திருக்கிறாள். ஆனால் இவரிடம் பட்ட கடனுக்கு
நன்றி கூறவே ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
No comments:
Post a Comment