தீதும்
நன்றும் பிறர் தர வாரா!
தமிழின் வாழ்வும் வரலாறும் அவற்றின் செழுமையும் சீர்சிறப்பும்
தமிழர்களின் அரசும் ஆளுமையும் அறம் பொருள் கலை சார்ந்த வாழ்வியல் நிலைகளையும் அவர்களின்
அறிவியல் சார்ந்த பல்வேறு படைப்புகளையும் இன்று வரைக்கும் கூட ஆய்வாளர்கள், அறிவாளர்கள்
இதயங்களில் இனிமை சேர்த்துக் கொண்டிருப்பதை காணக்காண மனதில் மகிழ்ச்சி நிலைகொள்கிறது.
மேற்கண்டவற்றிற்கு வேறாகவும் மாறாகவும் முரணாகவும் முளைத்து
வளர்ந்த ஆரியம் சார்ந்த வேதமதச் சிந்தனையும் அதன் செயல்வடிவமும் ஆரியமத வேத எழுத்தாளர்களின்
பல்வேறு படைப்புகளும் பரப்புரையும் இந்தியத் துணைக்கண்டத்தை இருட்டறையில் அடைத்து வைத்தது என ஆய்வாளர்கள் அறிவாளர்கள் மட்டும் ஆய்ந்து
அறைந்து வந்ததாக அறிகிறோம்.
மதம் சார்ந்த உணர்வுகளை மனிதகுல மூளையைச் சலவை செய்து ஒளி மறைக்கும்
படலங்களால் இந்த எழுத்தாளர்களும் அதை எடுத்துச் சென்று பரப்பிவர்களும் மிகப்பெரும்
மக்கள் கூட்டத்தை மடைமைக்கு ஆழ்த்தி மயக்கமுறச் செய்து ஆக்கமிகு சூழல் அரும்பாமலேயே
அமுக்கி விட்டார்கள். காரணம் என்ன? மிகச் சிறுபான்மையான வேதமோதிகளும் அவர்களின் குடும்பங்களும்
உறவுகளும் உழைக்காமல் உல்லாசம் பெற வேண்டும் எனும் அறமீறிய அவலச் சிந்தனைதான்.
உணர்வையும் அதை வளைக்கும் மறைமுக செயல்களையும் சிந்திப்போரின்
மனதை சிக்கலில் ஆழ்த்தி பரப்புரை பேசுபவர்களையும், மனப்பாடம் செய்து அதை மறக்காமல்
எல்லா இடங்களிலும் சிதறடிப்பதில் மிகவல்லவர்களாக திறமை காட்டினார்கள் இந்த வேதப் பிராமணர்கள்.
இவர்களுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களை இவர்களை இழித்த போதும்
கூட அதற்காக வெட்கமோ வேதனையோ கொள்ளாமல் தங்கள் நச்சிக்கருத்துக்களை நிலைப்படுத்த நேர்மையற்ற
நிலைகளில் நின்று கொண்டே இருப்பார்கள். தங்கள் கருத்துக்களில் வெற்றிபெற சில நூற்றாண்டு
காலம் கூட காத்திருந்து காரியத்தில் வெற்றி காண்பார்கள்.
அதன் நிலைகளை இந்தியக் துணைக் கண்டத்தில் நூற்றாண்டு தோறும்
ஆராய்ந்து அறிவது எளிதாகும். அய்ரோப்ப்பியர்களால் உருவான அறிவியல் சார்ந்த விஞ்ஞான
காலத்தில் இவர்கள் வீணாண கொள்கைகளை விதைத்துக் கொண்டே இருப்பதை காணலாம்.
உடல் சார்ந்த, உறவியல் சார்ந்த நல்லவைகளில் உட்புகுந்து அதனுடன்
இருந்த அந்த நல்லவைகளில் தங்கள் நலன் சார்ந்தவைகளை அடையாளம் தெரியாத வகையில் சாயமேற்றி
அவற்றை சாகடித்து விடுவார்கள். எடுத்துக்காட்டாக சமணம், புத்தம் தமிழ் இலக்கியம் சார்ந்த
சிதைவுகளையும் சீரழிவுகளையும் உற்று நோக்கினால் உணர்ந்து கொள்ளலாம்.
இப்போதும் கூட பாருங்கள், இருவேறு நிலைகொண்ட இந்திய உணர்வுகளில்,
சங்க் பரிவாளர்களும் அதன் அரசியல் அமைப்பான பாஜக-வும் பல்வேறு நிலைகளில் கடந்த வேதம்
பாப்பனர்களின் நஞ்சை பல்வேறு வழிகளிலும் தங்கள் எதிரிக்கும் ஊட்டி உயிரை எடுக்க முனைகிறார்கள்.
வேதப் பார்ப்பன அறிவுஜீவிகளாலேயே சாதி அழுக்குகள் உருவாக்கப்பட்டது.
தொழில் முறைப் பெயர்களாக இருந்ததை பிறவிச் சாதியாக ஆக்கியவர்கள் இவர்கள்.
கீதையில் கிருஷ்ணன் சொன்னதை மனிதர்களை பிறவியிலேயே பல்வேறு பகுப்புகளாக்கி
நால்வகைச் சாதிகளையும் அதன் கீழ் நாலாயிரம் சாதிகளையும் கட்டி இந்திய சமூகத்தை சிதறடித்து
விட்டார்கள்.
No comments:
Post a Comment