இணைந்து
செயலாற்றுவோம்
பேரன்புடையீர் வணக்கம், வாழ்த்துகள். கடந்த 5-1-2016 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் தங்களுடைய
வெளிப்பாடுகளைக் கண்டு கேட்ட நிலையில் அன்று தங்களுடன் அலைபேசியில் பேசியதை நினைவில்
நிறுத்தி வைத்து நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன்.
பல்வேறு கருத்துக்களை பரிமாறிக்கொண்ட மகிழ்வோடு நான் இணையதள
வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் கட்டுரைகள் சிலவற்றை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
உளவியல் திறத்தில் உலக மொழிகளிலேயே உயரிடத்தில் இருக்கின்ற தமிழ்
சிலபல வடிவங்களில் செய்திகளைச் சொல்லும் திறமுடையதாக விளங்குகிறது. என்றும் போடாத மகராசி
இன்று போட்டால் நித்தம் போட்ட தேவடியாளுக்கு இன்று என்ன வந்தது? என்று பிச்சைக்காரன்
சொல்வதாக இங்கொரு பாழ்பட்ட பழையமொழி ஒன்று உலவுவதைக் காணலாம்.
அதுபோல தமிழுக்கு எல்லாம் செய்த தி.மு.க.வைச் சாடுவது எதையும்
செய்யாதவர்களை ஏதும் சொல்லாதது மட்டுமல்ல சில நேரங்களில் பாராட்டிப் போற்றுவது என்பது
இங்கொரு நடைமுறையில் இருக்கிறது.
இது தொடர்பான ஓரிரு கட்டுரைகளை இத்தோடு தந்திருக்கிறேன். தமிழ்
அமைப்புகள் போன்ற பல்வேறு அமைப்புகள் பல்வேறு செய்திகளை குற்றங் குறைகளை எந்த ஆய்வும்
இல்லாமல் வெளிப்படுத்தக் காணலாம். சங்க காலத்தைத் தாண்டி நடைபோட்ட ஏறக்குறைய இரண்டாயிரம்
ஆண்டுகளாக ஆரிய, வேத, புராண இதிகாசங்களை விளக்குகின்ற
வடிவமாகவே தமிழும், தமிழ் அறிந்தவர்களும் இயங்கியதை உற்றுப் பார்த்தால் உணர்ந்து கொள்ள
முடியும்.
வளரும் அறிவியல் சூழல்களை சங்ககாலத்தில் இருந்த நாட்களிலேயே
சமாதியில் அடக்கம் செய்துவிட்டார்கள். மதவாதிகளும் அவர்கள் பிடியில் சிக்கியிருந்த
மன்னர்களும் தமிழ் உணர்வை தமிழ் தரவுகளை மேம்படுத்தும் நிலைகளை துளிகூட துளிர்விட செய்யவில்லை.
பலவேறு நிலைகளில் உலகின் பல பகுதிகள் உயர்ந்து ஓங்கி வரும் சூழலில்
தமிழும் தமிழர்களும் உலக மொழி அகராதிகளில் கூலி என்றே குறிப்பிடப்படுகிறார்கள்.
கொத்தடிமையாக வதிந்த தமிழர்களை திராவிட இயக்கமே இன்றுள்ள நிலைக்கு
ஏற்றிவிட்டிருக்கிறது. இதில் அரசியல் அமைப்புகளைச் சாடுகின்ற தமிழ் உணர்வாளர்கள் அவர்கள்
பங்கிற்கு தமிழுக்கு என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுமல்லவா? புதுமைப் பொருள்களுக்கு
புத்துயிர் ஊட்டும் சொல்வளக்களையோ கருத்துச் செறிவுகளையோ வடித்து வழங்கியிருக்கிறார்களா?
உழைத்தவனின் இன்னலைத் தீர்க்கும் எத்தனையோ கருவிகள் இன்று வந்து வாழ்வுக்கு வளம் கூட்டி
மகிழ்விக்கின்றது. அதற்கான தரவுகளை தமிழறிஞர்கள் செய்திருக்கிறார்களா?
பல்வேறு நிலைகொண்ட அரசியல் அமைப்புகளில் கலை, இலக்கிய பண்பாடு
சார்ந்த தரவுகளை அதிகமாக ஈடுபாடு காட்டி சாதித்தது இங்குள்ள சூழலில் அது இமாலய சாதனையாகும்.
இது தி.மு.க. வைத் தவிர வேறு அமைப்புகள் செய்ததாக சான்றுகள் ஏதுமில்லை. அரசியல் கட்சிகள்
முழுவதும் செய்யவில்லை என்பது ஆய்வுக்குப் பொருந்தாதது ஆகும்.
இதில் தமிழ் அமைப்புகள் தமிழறிஞர்கள், தமிழ் படித்த ஆசிரிய,
பேராசிரியர்கள் பங்களிப்பு எத்தகையது என்பதை இங்கே யாரும் விளக்குவதில்லை. ஊதியத்திற்காக
நேரத்தைச் செலவிடுவதைத் தவிர இவர்கள் சாதித்ததென்ன?
மதிப்புமிகு மணவை முஸ்தபா அவர்கள் இன்று அறிவியல் கலைச் சொற்களை
இரண்டு இலட்சத்திற்கு மேல் உருவாக்கியதைப் போல ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே உருவாக்கியிருந்தால்
அய்ரோப்பிய தொழிற்புரட்சியும் அறிவியல் ஆய்வு தன்மையும் இங்கேதான் தோன்றியிருக்கும்.
தமிழ் இயல்பான அறிவியல் மொழி, கண்டுபிடிப்புகளுக்கு பெயர் சூட்டுவதற்குரிய
சொல்வளம் கொண்ட மொழி. இங்கே தேரடியென்றவன் இரயில் வந்தபோது அதுபற்றி ஏதும் தெரியாமலேயே
அது நிற்கின்ற இடத்தை இரயிலடி என்றான். கண்டுபிடிக்கும் ஆர்வம் படித்தவர்களிடம் இல்லையென்பதை
விட படிப்பை இங்கே கிடைக்கவில்லை, படிப்பதற்கு பெரும்பாலோர்க்கு அனுமதியோ உரிமையோ கிடையாது
என்ற வேதம் சொல்லியதுதானே இங்கே சட்டம் இருந்தது. பின் எப்படி தமிழ் வியத்தகு விஞ்ஞான
மொழியாக வளர முடியும்? இதுபோல இங்கு பல்வேறு சூழல் பாதக நிலைகளை பட்டியலிட்டுப் பார்த்தால்
தி.மு.க. சாதித்தது வியக்கின்ற ஒன்றாக இருக்கிறது.
தி.மு.கவைப் பிழந்த திரு. எம்.ஜி.ஆரை தவறாகப் பயன்படுத்திக்
கொண்டு ஆரியமாலைவை அவரது கட்சிக்கு தலைவராக்கியபின் அது திராவிட கட்சி விளிப்பது எந்த
வகையில் சரியாகும்.
ஆகவே எதிர்வரும்
காலங்களில் நிறைய செய்தவர்கள் அதைத் தொடரவில்லை என்று சாடுவதை விட மற்றவர்கள் ஏன் செய்யவில்லை
என்று கேட்கும் அமைப்புகள் மொழி மட்டுமே ஒரு சமுதாயத்தைச் செழுமைப் படுத்தும் என்று
நம்புகின்றவர்கள் தாங்கள் என்ன சாதித்தோம் என்று தரவுகளை முன்வைப்பது தான் அறிவு நாணயமாகும்
அல்லது தி.மு.கவைத் தாண்டி, நிறைய சாதிப்பதற்கான தரவுகளை, நிலைகளை, உழைக்கும் உறுதியை
தருவதற்கு யார் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவிப்பது நல்லது.
No comments:
Post a Comment