Monday, 4 January 2016

வெள்ளத்துயர்

வெள்ளத்துயர்
கார்கால பெருவெள்ளம்
கன்னல்நிகர் தலைநகரை
கலங்கவைத்த நிலைகண்டார்
கண்களில் வெள்ளம் வருகிறது

புயலில்லை பொங்கும் அலையில்லை
பூகம்பம் பூமியைப் பிழக்கவில்லை
வெள்ளத் துயர் துடைக்கும்
அரசொன்று இங்கு இல்லை

பொறுப்பற்ற அரசில் இயங்கும்
பொதுப்பணித்துறையின் உறக்கம்
பொல்லாத நிலை காட்டி மக்களை
புண்படுத்தி புலம்ப வைத்தது

அக்கறை காட்டும் அரசொன்றை
ஆக்கும் திறன் இல்லையென்றால்
அழிவும் அழுகையும் அவலமும்
ஆட்சி செய்து அலைக்கழிக்கும்

மக்களின் பொருள்பறிக்க
மனிதநேயம் சிறிதுமில்லா
வணிகர்களின் செயல் சிறிதும்
மறக்கக் கூடியதல்ல

விளம்பரத்தால் பொருளீட்டும்
விற்பனை வணிகர் நிலை
வீதியில் நின்று தவிப்போர்க்கு
விழிநீரைத் துடைக்கவில்லை

No comments:

Post a Comment