மகதம்
(பீகார்)
ஒரு காலத்தில்,
அந்தப் பகுதி எவ்வளவு அறிவார்ந்த மனிதர்களை படைத்தளித்தது.
கபிலவஸ்து எனும் நேபாளப் பகுதி இளவரசன் இங்கு வந்தல்லவா புத்தர் ஆனார். போதி
மரத்தடியில் ஞானஒளி பெற்றவன் வாழ்ந்த மண்ணின் மகிமையை எண்ணி மகிழ்ந்தான்.
உலகின் பல்வேறு நாடுகளின் இளைஞர்கள் இங்குவந்து நாளந்தா பல்கலைக் கழகத்தில்
பயின்று மேதைகளாக தங்கள் நாட்டிற்கு திரும்பிய காட்சிகள் எல்லாம் அவனுள் தோன்றி
களிப்பூட்டியது. பல்துறை பாடங்களை பயின்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு இன
மனிதக் கொழுந்துகள் மொட்டாகி மலர்ந்து மணம் வீசியதெல்லாம் அவன் மனதை தாலாட்டியது.
போர்க்கருவிகளை புதைத்துவிட்டு அமைதி தவழ ஆட்சிபுரிந்த அசோகனின் திறமையெல்லாம்
காட்சியாக கண்டு மகிழ்ந்தான். கல்லில் பொறித்த உலகிற்கு அவனைக் காட்சியது என்பதை
அறிந்து மனம் மகிழ்ந்தான். புத்தனின் கொள்கைகளைப் பரப்ப தன் புதல்விகளையும்
பயன்படுத்தினான் அசோகன். புத்தன் எனும் புது மனிதன் தந்த புத்தி சேர் புதுமைக்
கொள்கைகளை, அன்பு மயமான கோட்பாடுகளை நாடெங்கும் பரப்பி, கேடுதரும் மக்களை
கீழ்மைப்படுத்தும் இந்து மதத்தை வெளியே தலைகாட்டாத அளவுக்கு முடக்கிய
சித்தார்த்தனின் சீர்மிகு கொள்கைகளை நடைமுறைப் படுத்திய மகதத்தை மனதிற்குள்
பாராட்டி மகிழ்ந்தான்.
கடும் சோதனைகளுக்குப் பின் புத்த பிக்குவாக மாறிய பின்னும் மனதில் ஆரிய
விஷயத்தை வைத்திருந்த ஒரு பார்ப்பனக் கயவனால் அறிவு ஒளிபரப்பிய நாளாந்தா பல்கலைக்
கழகம் எரிக்கப்பட்டு அங்கிருந்து அறிவுச் செல்வங்கள் கொழுத்தப்பட்ட காட்சிகளைக்
கண்டு மனம் வேதனைத் தீயால் வெந்தது. சமணமும்,
புத்தமும் உருவாக்கிய மாற்றங்களையும் மகத்தான சாதனைகளையும்
மண்ணுக்குள் புதைந்தது - நீரிலும் நெருப்பிலும் போட்டு மறைந்துவிட்ட கொடியவர்களை
எண்ணி கொதித்தவண்ணம் வங்கத்தின் வான்வீதியில் நடந்தான்.
வங்கம்
கங்கையாற்றில் புனல் பாய்ந்து தங்க நெல்லை விளைவித்து அத் தரணியை செழிப்பாக்கி
வைத்தக் காட்சி கண்ணுக்கு குழுமையூட்டியது.
தொண்மைக் காலத்தில் தமிழர்களாய் வாழ்ந்த மக்கள், இன்று வங்காளிகளாய் மருவி
இருக்கின்றனர். மங்கோலியர்களுடன் கலந்து புதுஉரு எடுத்து வாழ்கின்றனர்.
இந்திய துணைக்கண்டத்தில் எழுச்சிமிகுந்த சில இனங்களில் வங்காளிகள்
முதன்மையானவர்கள் மதத் துறையில் சிறந்து விளங்கிய இராமகிருஷ்ண பரமஹம்சர், அவரிடம்
தன் மனதை பரிகொடுத்த விவேகாந்தர்,
நோபல் பரிசுபெற்ற இரவீந்திரநாத் தாகூர், உள்ளத்தை
ஈர்க்கும் உணர்ச்சிமிகு நாவல்கள் வடித்த சரத்சந்திரர் ஆணுக்கு அடிமையாகி அவன்
இறந்தால் இவளும் அத்தீயில் உடன்கட்டை ஏற வேண்டும் எனும் கட்டாயத்தால் தன் உயிரை
மாய்த்துக் கொண்ட பெண்ணினத்திற்கு பெரும் தொண்டாற்றிய இராஜாராம் மோகன்ராய், இந்தியாவிற்கு
வீரமிகு சுதந்திரம் வேண்டி பார்புகழ படைநடாத்திய நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், மற்றும்
பல மாமணிகளை உலகிற்கு வழங்கிய வங்கத்தாயை நோக்கி தொழுதான், சமயச்
சங்கடங்களால் பிளவுற்ற அப்பெருநிலம் இணைத்திடம் நாள் வராதா? அதன்
துவக்கால, தொண்மைக்கால வரலாறு அம்மக்களின் நெஞ்சத்தில் ஒளிப் படமாய் தோன்றாதா? எனும்
ஏக்கங்களோடு உத்தரபிரதேசம் எனும் வடபுலத்தின் மீது தன் கவனச் சிறகை பறக்க
விட்டான்.
7. புத்துலகம் கண்ட புதுமனிதன்
உ.பி.
கால்வாய் எனும் பெயர் தாங்கிய நேருகுடும்பம் (நேரு என்றால் கால்வாய் என்று
பெயர்) நெடுநாள் செல்வாக்குப் பெற்ற மாநிலம்,
துணைக்கண்ட அரசியலில் சூழ்ச்சிமிக்க மனிதர்களை
தோற்றுவிக்கும் திறன் பெற்ற மண். ஆதிக்க மனப்பான்மை கொண்ட பார்ப்பன - பனியாக்
கூட்டம் மிகுந்த பகுதி. துணைக் கண்ட மாநிலங்களில் மக்கள் தொகையும் அதிகமாவுள்ள
இடம் உத்திரபிரதேசம். இந்தியப் பிரதமராவதற்கு எங்களை விட்டால் வேறு யார் வருவது? முடியாது, நாங்களேதான்
இருப்போம் எனகிற வகையில் அவர்களே துணைக் கண்டத்தை ஆளப் பிறந்தவர்கள் என்கிற அதிகார
மமதையும், அரசியல் சாணக்கியமும் (சூழ்ச்சி,
வஞ்சகம்) நிறைந்தவர்கள். முகலாயப் பேரரசின் சின்னங்கள்
அந்தப் பகுதியில் மிகச் சிறப்பாக விளங்குகிறது. ஷாஷகான் தன் மனைவியின் நினைவாக
கட்டிய தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. டில்லியில் முகமதியர்கள் எவ்வளழு
வல்லமையுடன் ஆண்டான் என்பது விளங்குகிறது.
உலக அதிசயங்களில் தலைசிறந்த தாஜ்மகாலை பார்த்தபோது ஒரு கணவன் தன் மனைவியின்
மீது எத்தனை அன்பு வைத்திருந்தான் என்பது விளங்கியது.
மாலையிட்டாள்,
மஞ்சத்தில் விருந்தளித்தாள், மக்களையீன்றாள், மடிந்து
விட்டாள். நானும் மறந்து விட்டேன் மற்றொருத்திக்கு மாலையிட்டு மகிழ்ச்சியுடன்
வாழ்கிறேன். இன்னும் இதுபோன்று எத்தனையோ சுவைதரும் சுளைகள், எனக்குண்டு
என்ற இலக்கணதில் வாழுகின்ற மன்னர் குலத்தில் இப்படியொரு மனிதனா? உண்மையில்
ஷாஜகான் அவன் உள்ளத்தில் உயர்ந்தே நின்றான். என் இதயத்தில் குடியேறியவள் மீது நான்
கொண்ட காதலை இந்த உலகம் ஒவ்வொரு நாளும் எண்ண வேண்டும் என்று ஒரு நினைவுச்
சின்னத்தை உருவாக்கிய,
அதவும் ஈடு இணையற்ற எழில்மிகு கலை ஆலயத்தை கட்டியவனை
வாழ்த்தியவாறு உ.பி.யின் வானில் பறந்தான்.
டில்லியை ஆண்ட அக்பரின் அரசவையில் நாட்டியமாடும் இளநங்கை அனார்கலி. உலகின்
அழகு அனைத்தையும் அபகரித்து தன் அங்கத்தில் சேர்த்துக் கொண்டவள். அவள் ஆடும்போது
தோன்றும் அழகோ இன்னும் அதிசயமானது. அசையும் அவள் விழியோ மன ஆவலைத் தூண்டும்
வகையில் அமைந்தது. ஏங்கினர் எத்தனையோ பேர் இடம் கிடைக்காதா அவள் மனதில் என்று. எதையும்
இழப்பேன் அவள் இதயம் என்னை நினைத்தால் போதும் என்றனர் பலர். ஆனாலும் அந்த அழகு
மயில் அக்பரின் மகன் சலீமின் இதயத்தில்தான் ஆடியது. ஏழையாயிற்றே அவள் என்ற ஏளன
உணர்வுகள் ராசாங்கத்தார் மனதில் ஓடியது. அந்தஸ்து பார்த்தார் அக்பர் மகராசா.
காதலைக் கொல்ல தன் கணைகளை ஏவினார். எடுபிடிகள் ஓடினர். அவளை மிரட்டினர். மன்னன்
மகன் சலீம் அவனை மறந்துவிடு என்றார் மான்சிங் எனும் அக்பரின் மைத்துனர் ப்ளஸ்
மந்திரி. கன்னி தன் காதலை துறக்க மறுத்தாள். மனதில் நினைத்தவனை மறப்பது மங்கைக்கு
அழகல்ல என்றாள். மனம் மாறவில்லை என்றால் உயிர்விட நேரிடும் என்றார் மந்திரி.
உம்மால் முடிந்ததை செய்யும் என்றாள் உறுதியுடன்
அப் பேரழகி. இழுத்து வந்தனர் அக்பரின் அரசவைக்கு, பார்த்தார்
அக்பர் அந்த அழகு ரதத்தை. அவர் மனதை என்னவோ செய்தது. தன் மகன் மட்டும்
நேசிக்கவில்லை என்றால் அவருடைய அந்தப்புரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட
அழகிகளில் ஒருத்தியாக அவள் அடைக்கப்பட்டிருப்பாள்.
தன் பத்தினியரைவிட மற்றொருத்தி அழகாக இருக்கக் கூடாது என்று கருதினாரோ என்னவோ
அவளை உயிருடன் வைத்து கல்லறை கட்டுமாறு ஆணையிட்டார். மலர்போன்ற பெண்களை கசக்கி
சுவை கண்ட அக்பருக்கு கலவியில் மட்டுமே சுகம் கண்ட அக்பருக்கு காதல்நயம் தெரியாது
போலும். அதனால்தான் ஒரு காதல்குயிலை கல்லறைக்குள் உயிருடன் புதைத்தார். ஆனால்
அனார்கலி - சலீம் காதல் காலம்தோறும் பேசும் நிலை கண்டான் சுந்தரலிங்கம்.
இந்துக்கள் என்போர் முகமதியருக்கு எப்படியெல்லாம் அடங்கி நடந்தனர். அடிமையாய்
கிடந்தனர் அவர்களுடன் கலந்தனர் என்பதையெல்லாம் வரலாறு விளம்புகிறது. கஜினிமுகமதுவை, கோரிமுகமதுவை, பாபரை
எதிர்த்து வெற்றி காண முடியாத கோழைகள். அவர்களுக்கும் அவர்களின் வழிவந்தோருக்கும்
குற்றேவல் செய்து கிடந்தவர்கள் மனம் மாறி,
மதம் மாறியவர்கள் என்றெல்லாம் அம் மண்ணின் சரித்திரம் வாய்
விட்டு அழுகிறது. புத்த மதத்தை இம் மண்ணில் புதைத்தவர்கள், அயல்
நாடுகளில் அக்கொள்கை செழித்து வளர்கின்றபோது பிறந்த இடத்தில் காய்ந்து கருக
விட்டவர்கள், முஸ்லீம்களுக்கு முடிவுகட்ட முயன்றபடியே இருக்கிறார்கள் என்பதற்கு
உத்திரபிரதேசம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. முஸ்லீம்கள் மதம் மாறியவர்களே
அன்றி இந்த மண்ணுக்குரிய உணர்வு மாறியவர்கள் அல்ல! இந்த மண்ணுக்கு உரிமையுள்ள
மைந்தர்கள் என்பதை உணர்த்தும் உணராதவர்கள் போல் விஷத்தை உமிழ்ந்த வண்ணம்
இருக்கிறார்கள்.
இந்து மதத்தின் கொடுமை தாங்காமல் மதம் மாறியவர்களே எனும் உண்மையை புரிந்தும்
புரியாதவர்களாக புலிப்பாய்ச்சல் காட்டுகிறார்கள். இதில் வேதனை என்னவென்றால்
முஸ்லிம்களும் தாம் யார் என்பதை மறந்து தம்மை ஓர் அராபியராகவே வரித்துக்
கொள்வதுதான். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் இங்கு வழங்கும் மொழிகளும் இயற்கை
கூறுகளும் எங்கள் குருதியில் கலந்தவவை. கருத்துக்கள் வேறாக இருந்தாலும் நாங்கள்
உங்கள் உறவினர்தான் என்று ஓங்கி முழங்காதது ஒரு பெரும் குறைதான்.
மதங்கள் அனைத்தும் கூறுகின்ற ஆண்டவனோ அவன் சக்தியோ இல்லையென்று அறிவியல்
நிரூபித்த பின்னரும் அதற்காக தன் வாழ்வினை அழித்துக் கொள்ளும் அறியாமையை
என்னவென்று சொல்வது. வாழ்க்கை உயர்விற்கு மார்க்கங்கள் தேவைதான். வழி காட்ட
தலைவர்கள் தேவைதான். அவர்கள் வழி நடக்க மனதில் நெறிமுறைகள் தோன்றுதல் மிக மிகத்
தேவைதான். அதற்காக ஒருவரை ஒருவர் பகைத்துத்தான் ஆக வேண்டுமா? உத்திரப்பிரதேசத்தில்
உள்ளோர் இதை சிந்திப்பார்களா?
இப்படியெல்லாம் எண்ணியவாறு சுந்தரலிங்கம் மத்தியப்
பிரதேசத்திற்குள் பிரவேசித்தான். தாயைப்போல் பிள்ளை நூலைப்போல சேலை எனும் பழமொழி
உத்திரப்பிரதேசத்திற்காகவே பிறந்திருக்கும் போல் தோன்றுகிறது. பல்வேறு நிலைகளில்
உத்திரப்பிரதேசம் அம்மா என்றால் மத்தியப்பிரதேசம் பிள்ளையாக இருக்கிறது.
ம.பி.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு, சமஸ்தானங்களின்
கொடுமைகள் கொடூரங்களெல்லாம் மனதில்தோன்றி மறைய சம்பல் கொள்ளையர்களின் உணர்வுகளை
எல்லாம் அவன் எண்ணிப் பார்த்தான். அவர்களின் செயல்கள் கொடூரமானதாக இருக்கலாம். அப்படியொரு
கொடுமையாளர்கள் தோன்றுவதற்கும் அவர்கள் வழிவழியாய் வளர்வதற்கும் காரணம் என்ன? இந்துமதம்
தோற்றுவித் நடைமுறைப்படுத்திய ஏற்றதாழ்வான தீண்டாமைக் கொள்கையே காரண். பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார்
போராட்டமே அவர்களை கொடுமையாளர்களாக, கொள்ளைக்காரர்களாக உருவாக்கியது என்று ஸ்டேட்மேன்
நிருவர் அருண்குமார் தாத்தா கூறுகிறார். மதக் கொடுமைகள் நிகழும் இடமாக நாகரிகம்
மலர்ந்த காலத்திலும் இப்பகுதி நிலவுகிறது. மத்திய நிலப்பகுதியில் இருந்து
இராஜஸ்தானத்திற்பு பறந்தான்.
No comments:
Post a Comment