Thursday, 12 January 2017

8 & 9 புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…

8. புத்துலகம் கண்ட புதுமனிதன் தொடர்ச்சி…
ராஜஸ்தான்
இராஜபுதனம் வீரர்கள் நிறைந்த மண். போர்த் தொழிலில் தன் பொழுதைக்கழித்த புதல்வர்களை பெற்ற மண், இந்து மத இழிவுகளும் இங்கே ஏராளம். பல்வேறு போர்க்களங்களில் தம்குகள்ளேயே மோதிக்கொண்டு மாற்றாரிடம் போரிட வலுவின்றி அவர்களிடம் அரச பீடத்தை வழங்கியதும் உண்டு, அக்பர் எனும் மாமன்னனை தன் உறவினராக ஆக்கிக்கொண்டு அக்பரது அரசவையில் அங்கம் வகித்ததுண்டு. பார்ப்பதற்கு வியப்பூட்டும் பல்வேறு அரண்மனைகள், கண்கவர் வள மனைகள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு பஞ்சாபிற்குள் பறந்து சென்றான் சூப்பர்மேன் சுந்தரலிங்கம்.
பஞ்சாப்
பஞ்சாப்,ஐந்து நதிகள் பாய்ந்து அம்மண்ணை செழிப்பாக்குவதால் அது பஞ்சாப் என்று வழங்கப்படுகிறது. அறிவும், திருவும், வீரமும் விளைகின்ற மண், இந்துமத இழிவிலிருந்து விடுபட தன் மக்களுக்கு சுயமரியாதையை வழங்க குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தை குருகோவிந்தசிங், அர்சூன்சிங், ராணா பிரதாப்சிங், ஆகியோர் வளர்த்து பஞ்சாப் மக்களை படை வீரர்களாய் மாற்றினர். இன்றுவரை இந்தியாவின் எடுத்துக்காட்டிற்கு விளக்கமாக விளங்குகிறார்கள். வேளாண்மையிலும், தொழிலிலும் சிறந்து விளங்குகிறார்கள் இந்தியாவில் வளர்ந்த முதல் மக்களை படைவீரர்களாய் மாற்றினர். இன்றுவரை இந்தியாவின் எடுத்துக்காட்டிற்கு விளக்கமாக விளங்குகிறார்கள். வேளாண்மையிலும், தொழிலிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவில் வளர்ந்த முதல் தரமானவர்களாக திகழ்கிறார்கள். திராவிட இயக்கத்தை ஒரு பகுத்தறிவு இயக்கமாக இல்லாது ஒரு மத அமைப்பாக ஆக்கியிருந்தால் அப்பகுதியின் உரிமைக்கொடி உயர்ந்து பறந்திருக்கும் என்றெல்லாம் மனதில் எண்ணமிட்டன் சுந்தரலிங்கம். கட்டுப்பாடு மிக்கதோர் கடமைவீரர்களாக அவர்களை மாற்றிய அந்த இனத்தின் தலைவர்களை மனதிற்குள் வாழ்த்தினான். தன் மானம் காக்க தலையைக் கொடுக்கவும், எடுக்கவும் தயார் நிலையில் தன் இதய உணர்வுகளை பக்குவப்படுத்தி வைத்திருக்கும் அவர்களை வாழ்த்தியும், பிறக்கும் குழந்தைக்கும் வீரமூட்டும் அவர்களது பொற்கோவிலைக் கண்டுகளித்தும் தன் பயணத்தை காஷ்மீரில் தொடர்ந்தான்.
காஷ்மீர்
விண்முட்டும் மலைமுகடுகளும் விரிந்த இயற்கைக் காட்சிகளும் இனிய உணர்வுகளை இதயத்தில் தோற்றுவித்தது. பரந்த டால் ஏரியும் அதில் மிதக்கம் எழில்மிகு படகு வீடுகளும் தொங்கும் ஆப்பிள் கனிகளும் அதையொத்த மங்கையர் கன்னமும் கண்கவர் மலர்க் கூட்டமும், கழிப்பூட்டும் மாதரின் அழகும் அவனுள் மேலும் மகிழ்ச்சியை விளைவித்தது.
குளிக்காத மேனியே இத்தனை பேரழகு என்றால் உடல் நனைந்து ஒப்பனைகள் வேறு செய்து விட்டால் அவர்களின் அழகினைப் பாட ஓராயிரம் கவிகள் போதாது என்று எண்ணத் தோன்றியது.
எழில் பூத்துக் குலுங்கும் அந்த இனிய மண்ணில் எரிமலைகள் சிதறுவதைக் கண்டான். எங்கும் வெடி முழக்கம் எழும்புவதைக் கேட்டான். கடத்தல், கற்பழித்தல், கொல்லுதல் எனும் கொடூரங்கள் நிகழுவதைக் கண்டான். இமாலயச் சாரலில் இதயத்தை இதப்படுத்தும் எழில் தவழ் பகுதிகளை இமை விரித்து பார்த்தவாறு பறந்தான் தமிழ்மகன் சுந்தரலிங்கம். இம்பால், மணிபுரி, சிம்லா, டார்ஜலின் என்று குளிரூட்டி சுகப்படுத்தும் பல்வேறு பகுதிகளை பார்த்தவாறு பறந்தபடியே, இந்திய துணைக் கண்டத்தை மீண்டும் தன் இதயத் திரையில் போட்டுப் பார்த்தான்.
9. புத்துலகம் கண்ட புதுமனிதன் 
இந்தியத் துணைக் கண்டம்
எத்தனைக் கலாச்சாரங்கள், எத்தனை மாமனிதர்கள், மகத்தான அரசுகள், போர்க்களத்தில் மடிந்த பொன்னுடல்கள், இதயத்தை அள்ளும் இயற்கையின் இனிய கோலங்கள், வானத்தைத் தொடும் மலைகள், குன்றுகள், மலைகளுடன் போட்டியிடும் கட்டிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், வாகனங்கள், வசதிகள் இவை ஒருபுறம், இயற்கை வளம் இருந்தும் ஒண்டக் குடிலின்றி வானமே கூரையாக வாழ்வோர் பகுதி ஒருபுறம், பல்வேறு கலாச்சார அழுத்தங்களால் மன அமைதியற்று வீட்டிற்குள் முடங்கி மக்கள் தொகையை பெருக்கும் வேலையும், மக்கள் தொகைப் பெருக்கத்தால் நல்வாவ்வு கிடைக்காது நலிவுற்று நோய்கள் பெருகி நோயாளிநாடு இந்தியா எனும் அவலமும் இங்கே நிலவுகிறது. உயர்ந்த காவியங்கள், இலக்கியச் செல்வங்கள், நிறைய இருந்தாலும் இந்துமத சட்டங்களால் எல்லாருக்கும் கல்வி கிடைக்காததால் எல்லாரும் இலக்கிய சுவையை, காவிய உணர்வுகளை பெற முடியவில்லை. கல்வியில்லாத காரணத்தால் முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்க முடியவில்லை. படித்தவர்களே கூட பழமைச் சாக்கடையில் குளிக்கும் காட்சி, பெரும்பான்மையோர் வழியில் இவர்களும் என்று எண்ண வைக்கிறது. பத்தினித் தன்மை பற்றி பலகாலம் பேசப்படும் நாட்டில் விபச்சார விடுதிகள், ஏன் விபச்சார தெருக்கள், ஏன் ஊர்மக்களே ஏராளமாய் உருவாகிவிட்டது. பழம் பெருமை பராம்பரிய பெருமை என்றெல்லாம் பறைசாற்றும் நாட்டில், கற்புநெறி என்றும் கற்பின் வலிமை என்றும் கதைகள் வழங்கும் இந்த மண்ணில் எத்தனை இனங்கள் கலந்துவிட்டன. யார் எந்த இனம் என்று அறுதியிட்டு சொல்லமுடியாக அளவுக்கு எல்லாரும் உருமாரி விட்டனரே இங்கு.
ஆங்கிலேயர் இங்கு வரா முன்னர் எத்தனை மதங்கள், எத்தனை பிரிவுகள், எத்தனை சாதிகள், எத்தனை இழிவுகள், எத்தகைய அவலங்கள் (பார்க்க, தென் இந்திய குலங்களும் - குடிகளும்) இருந்தன என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தான். ஆங்கிலேயர் வந்து அறிவியல் பரவி, நாகரீகத் தோற்றம் கண்ட பின்பும் கூட அந்த இழிவுகளை அந்த அவலங்களை தங்கள் தலையில் கிரீடமாக வைத்துக் கொண்டும் கேவலத்தை எண்ணி வருந்தினான். நெடுங்கால அடிமைத் தனமும், ஆதிக்க சிந்தனைகளும் முழுமையாக அழியாத நிலையை எண்ணி நெஞ்சம் கலங்கக் கண்டான். ஆண்டாண்டு காலமாக இருந்த அவலங்களை அறிவியல் கோலோச்சும் இந்நாளில் இருப்பது முறைதானா? அடாவடிகாரர்களும், அக்கிரமத்தை இயல்பாக கொண்டவர்களும், அயோக்கியர்களும் அரசியலில் நுழைந்து மக்கலை ஆட்டிப்படைப்பதை அனுமதிப்பது முறைதானா? இதையெல்லாம் எண்ணிப்பார்த்தான்.
குமரி முதல் இமயம் வரை ஒன்று என்று கூறுவோர் இந்திக்காரர்களுக்கு மட்டும் முதலிடம் முதல் மரியாதை என்பது நீதியாகுமா என்று எண்ணினான். குறிப்பாக தென்னியந்தியர்களை ஒரு பொருட்டாக மதிக்காததை எண்ணி இதயம் நொந்தான். இதையெல்லாம் பெரும்பான்மை மக்களும் அவர்களது பிறதிநிகளும் உணர வில்லையே என்று வேதனையுற்றான். காட்டுவாசிகளை, ஆதிவாசிகளை நாகரீக குடிமக்களாக மாற்றியது உலகில் உள்ள பல மதங்கள். ஆனால் நாகரீக மனிதர்களை காட்டுவாசிகளாக பழங்குடினராக, மலைவாழ் மக்களாக மாற்றி கொடுமையை இங்குள்ள இந்துமதமே செய்தது. பல்வேறு காலக்கட்டங்களில் நகரத்தில் வாழ்ந்தோரை காடுகளுக்கு துரத்தியவர்கள், இந்துமத கொடுமையாளர்களே! என்று எண்ணியவாறு இலங்கை நோக்கிப் பறந்தான் இனியவன் சுந்தரலிங்கம்.
ஈழம் (இலங்கை)
எங்கும் பசுமை படர்ந்து எழில் கொஞ்சும் இடமாகி உலக சுற்றுலாப் பயணிகளின் இதயத்தை ஈர்த்திடும் அழகு அரசோச்சிய அம்மண், அரசாண்டவர்களின் ஆதிக்க மனோ பாவத்தால், வெடிகுண்டுக் கிடங்காக மாறியதை எண்ணி மனம் நொந்தான். சேகுவாரா, பின் விமுக்தி பெருமுணா, விடுதலைப் புலிகள் என்று தங்கள் மக்களின் நல்வாழ்விற்கு எதேச்சாரிகளை எதிர்த்துப் போராடி தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததை, இழந்து வருவதை வேதனையோட எண்ணிப் பார்த்தான். இலங்கைத் தீவின் நெடுங்கால வரலாறு அவன் நெஞ்சில் காட்சியானது. அம் மண்ணுக்கு உரிமையுள்ள தமிழர்கள் வந்தேறிகளான சிங்களர்களிடம் வதைபட்ட - வாழ்வழிந்த காட்சியெல்லாம் அவன் கண்ணை நீரூற்றாக்கியது. உரிமைக்காக உயரிய முறையில் வீரத்தோடு போராடி மடிந்துவரும் விடுதலை புலிகளை உலகம் கண்திறந்து பார்க்க மறுக்கிறதே என்று மனம் நொந்தான். மனிதாபிமானம் மிக்க மக்களாட்சி அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அரசுகள் எல்லாம்கூட தமிழர்கள் என்றால் தலைதிருப்பிக் கொள்வதேன் என்று வேதனையுற்றான். இலட்சிய நோக்கோடு போராடும் விடுதலைப் புலிகள் ஒருநாள் வெற்றிபெற்று தமிழரசை தோற்றுவித்து இந்தியாவில் அடங்கிக் கிடக்கும் தமிழினத்திற்கும் ஒரு விடிவு காலத்தை வழங்குவார்கள் எனும் நம்பிக்கையோடு சிங்கப்பூரை நோக்கிப் பறந்தான்.

No comments:

Post a Comment