2.
வளம் குவிந்து வாழ்க!
வண்ண
நிலவாய் முகிழ்த்து,
வைரமுத்தாய்
ஒளிர்ந்து,
வந்துதித்தாய்
பொன்மலரே!
வரலாற்றுப்
பேரொளியாய்!
வாசமிகு
பூங்காற்றாய்,
வானத்து
பெருவெளியாய்,
வையத்திருவிளக்காய்,
வருக!
வாழ்க! பல்லாண்டு!
இனிக்கும்
பொருளாய்,
இலக்கியத்
திருவாய்,
இதயத்தில்
நிறைந்தாய்,
இனிமைகண்டு
வாழ்க!
வீரத்தின்
விளைநிலமாய்,
சீர்நிறைந்து
செழுமை கொண்டு,
சிந்தனைச்
சுரங்கமாய்
செந்தமிழாய்
வாழ்க சிறந்து!
எந்நாளும்
புகழ் சிறக்க
ஏறுபோல்
நடை நடந்து,
எத்திசையும்
வாழ்த்தி நிற்க,
எழிற்கோவே
வாழ்க! வெல்க
வழி
வழி மறப்புகழ் சிறக்க,
வள்ளுவன்
குறள் வழி நடக்க,
வானம்பாடி
போல் பறந்து
கானம்பாடி
வாழ்க! வாழ்க!
வளமிகு
நிலையடைந்து
வரலாறு
பேசுகின்ற
வாழ்வினை
பெற்றிடுவாய
3.
வரலாறாகி வாழ்க!
வாழ்க! வாழ்க!
வரலாறாகி வாழ்க!
வரலாறாகி வாழ்க!
எழில்
சிறந்து வாழ்க!
தலைசிறந்து
வாழ்க!
இயற்கையின்
இயக்கம்!
ஒளியின்
பேராற்றல்!
காற்றின்
பயன்பாடு!
புவியின்
புகழ் பாடுவோம்!
விண்வெளியில்
விளையாடு!
ஆற்று
வழி அறிந்திடுவோம்!
கண்டங்களில்
கண் பதிப்போம்!
அரசுகளின்
நிலை அறிவோம்!
கவிதைகள்
காவியங்கள்!
மொழிகள்!
வரலாறு!
மனித
இனங்கள்!
பதினாறும்
பெற்று பெருவாழ்வுப்
பேறு
பெற வாழ்த்துகின்ற
பேரெழில்
வழக்கம் தமிழில் உண்டு!
பதினாறு
தலைப்புகளில்
பல்வேறு
செய்தி சொன்னேன்! மேலும்
பைந்தமிழில்
வாழ்த்து சொன்னேன்!
பாராட்டி
மகிழ்வடைந்தேன்!
நானென்ன,
நாட்டில் உள்ள
யார்
சொன்ன சொல்லானாலும்
எவர்
மொழிந்த கருத்தானாலும் உன்
இயல்பான
பகுத்தறிவால்
எண்ணிப்
பார்?
எதையும்
ஏன்? எதற்கு? என்று கேள்?
மெய்ப்பொருள்
காணும் மேதமையைப் பெற்று
மேதினியில்
சிறந்திட வாழ்த்துகிறேன்!
வளம்
சிறக்க வாழ்க வாழ்க!
எங்கெங்கும்
புகழ் மணம் வீச!
எழிலெல்லாம்
தழுவி நிற்க!
இலக்கிய
பேரழகாய்
எந்நாளும்
வாழ்க! வாழ்க!
புதிய
தலைமுறை புத்தெழில் மலர் தொடரும்....
No comments:
Post a Comment