கண்களின் கலை காணுவோம்
கண்ணன்
என்றால் வடமொழியில்
வெண்ணை
திருடியவனைக் குறிக்கும்!
தங்கத்
தமிழில் கண்ணன் என்றால்
கண்
ஒளி நிறைந்தவனைக் குறிக்கும்!
கண்
அவன் என்பதாலேயே
கணவன்
என்றார்கள்
என்பெயரும்
கண்ணன்தான்
எனினும்
இருவிழியிலும் ஒளி குறைந்து
ஊனமுற்று
ஊமை விழி ஆனது
விழியில்
ஒளிகாட்ட மருத்துவரை அணுகி
ஆய்வுச்
செய்யச் சொன்னேன்
ஒன்று
இரண்டு மூன்று நான்கு என
மருத்துவர்கள்
கருவியின் துணையுடன்
உற்றுப்
பார்த்து முடிவு சொன்னார்கள்
வயது
கூடுவதுடன் சர்க்கரையும் கூடியதால்
வழிகாட்டும்
விழிகள் பழுதாகியதாம்
கண்புரை
எனும் மூடுதிரை விழியை மறைத்ததாம்
மாசு
அழுக்கு என்று மற்றவர் கூறினார்
அறுவை
செய்து அழுக்குமாசுதனை
அகற்றிவிட்டு
ஒளி தருவோம் என்றனர்
சரிஎன்று
கூறி ஒரு கண்ணை கோவை
மருத்துவமனையில்
நலப்படுத்தினர்
ஒளியேற்றி
கலைகாட்டும் காட்சிகளை
காணவைத்து
களிப்பூட்டினர்
இன்னொரு
கண்ணிலும் இருள்சூழும்
இடர்நிலை
கண்டு கலங்கியது
மதுரை
கோவை நெல்லையில் உள்ள
மருத்துவமனைகள்
சிலவற்றில் விழியின்
மருள்நீக்கும்
ஆய்வுகளை மேற்கொண்டேன்
ஆய்வு
முடிந்தபின்னர் அறத்தன்மைக்கு மாறாக
நிபந்தனைகளை
கூறி நெஞ்சைப் புண்ணாக்கி
புலம்ப
வைத்தனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்
நியாய
மற்றதை என் நெஞ்சம் ஏற்கவில்லை
அதனால்
நெல்லை அகர்வால் மருத்துமனையை
அணுகினேன்
அறுவை செய்து
அன்பு
விழிக்கு ஒளியேற்றினேன்
நெல்லை
அகர்வால் கண் மருத்துவமனையில்
ஒளிர்ந்த
சொற்றொடர் ஒன்று என்
உள்ளத்தை
அள்ளியது உற்சாகமூட்டியது
“உங்கள்
கண்களின் மதிப்பை
நாங்கள்
அறிவோம் என்றும்”
கண்
தானம் செய்யுங்கள் காலமெல்லாம்
வாழ்வீர்கள்
என்னும் வாசகமும்
என்னில்
நுழைந்து இனிமையூட்டியது
அறுவைக்கு
ஒரு கிழமை இருந்த போது
கண்கள்
பற்றிய செய்திகளை
தித்திப்பு
உணர்வுடன் தேடினேன் திரட்டினேன்
அறிஞர்கள்
எழுதியதையும்
அறிவியல்
உருவாக்கியதையும்
கவிஞர்கள்
பாடியதையும்
தமிழ்த்தாய்
பாடிய தாலாட்டையும்
பார்புகழும்
பழமொழிச் சுவைகளையும்
ஓரிடத்தில்
குவித்து வைத்து
உங்கள்
முன் படைப்பதில்
உள்ளம்
நிறைவடைகிறேன்
கோவை
மருத்துவமனை பணியாளர்கள்
எனக்களித்த
உதவிகளைப் பாராட்டி
நன்றி
கூறி நல்வாழ்த்தை தரவும்
எட்டு
பக்கக் கவிதை சிமிழ் ஒன்றை
அவர்களுக்கு
அனுப்பி வைத்தேன்
அதுபோலவே
இதிலுள்ள செய்திகளையும்
அகர்வால்
மருத்துமனை தோழா-தோழியருக்கு
அனுப்பி
வைக்க முடிவெடுத்தேன்.
கண்ணின்
பெருமைகளை
கருத்தில்
கொள்வோம்
கண்கள்
ஒரு காவியப் பேரழகு
கண்கள்
ஓர் ஓவியச் சிறப்பழகு
கண்கள்
உடலின் ஒளிவடிவழகு
கண்கள்
பேசும் என்று பல கவிஞர்கள்
பாடி
மகிழ்ந்து பரவசமடைவதுண்டு
பேசு
கண்ணே பேசு என்று என்றும்
பிரிய
சகியே பேசு என்றும்
கட்டழகு
கண்ணா என் கண்ணே என்றும்
காதலர்கள்
கொஞ்சி மகழ்வதுண்டு
கண்ணே
உறங்கு கான மயிலுறங்கு
பொன்னே
உறங்கு பூமரத்து வண்டுறங்கு என
பெற்றவள்
தாலாட்டில் பெருமை பொங்குவதுண்டு
எண்ணென்ப
ஏனை எழுத்தெனப்
கண்ணென்ப
வாழும் உயிர்க்கு என
வள்ளுவன்
கண்ணை வாழ்த்தினான்
என்னும்
எழுத்தும் கண்ணெனத் தகும் என
அவ்வை
பெருமாட்டி அழுத்திச் சொன்னாள்
கண்ணகியின்
கனல் தெறிக்கும்
அவள்
நீள் விழியை காண மாட்டாது
நெடுஞ்செழியப்
பாண்டியன்
நிலத்தில்
வீழ்ந்தான் என்று சிலம்பு
விழியின்
வீரத்தை விளக்குகிறது
அண்ணலும்
நோக்கினான்
அவளும்
நோக்கினாள் என்று
வில்லொடித்து
மணப்பதற்கு முன்னரே
விழி
கலந்து காதலில் வீழ்ந்தனர்
இராமனும்
சீதையும் என்று
கம்பர்
இலக்கியசுவை கூட்டினார்
அண்ணலும்
அவரும் நோக்கியதை
அருகிலிருந்த
முனிவரும் நோக்கினார்
என்று
நமது அருமைக் கலைஞரும்
கம்பன்
பாடலுக்கு கலை மணம் தூவினார்
வேட்டையாடும்
வேடன் ஒருவன்
காட்டில்
கண்ட ஒரு சிலையை கடவுள் என்று
தன்
கண்ணெடுத்து அப்பியதால்
கண்ணப்பன்
நாயனார் ஆனார்
இலியட்-ஒடிசி
இனிய காவியங்களை
இசைக்கூட்டிய
கிரேக்கக் கவிஞன்
இருவிழியும்
இல்லாத குருட்டு ஹோமர்
எழுதிப்
படிக்க இயலவில்லை இது கொடுமைதானே
கண்களற்ற
திருதராஷ்டிரன்
தீமைகளை
தடுக்க இயலவில்லை
கண்ணற்றவனுக்கு
வாழ்க்கைப்பட்டதால்
கண்ணைக்
கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் காந்தாரி
ஒளி
படைத்த கண்ணினாய் வா என்றும்
உன்
கண்ணில் நீர் வழிந்தால் எனவும்
என
கண்ணின் பாவையன்றோ என்றும்
கண்ணம்மா
என் காதலி யென்றும்
பாடிப்
பரவசமடைந்த பாரதி
கண்ணில்லையோ
கருகத் திருவுளமோ
என்று
இரஷியப் புரட்சிக்கு துணைசெய்து
இலெனின்
எனும் மூடனுக்கு துணிவூட்டிய
தன்
மனம் நேசித்த பராசக்திக்கு
இந்திய
விடுதலைக்கு அவர் இதயம்
இரங்கவில்லை
என்று வருந்திச் சாடினான்
வற்றாத
புகழ்கொண்ட புதுமைப் பாரதி.
கண்ணிகடை
விழி காட்டி விட்டால்
மண்ணில்
குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்
வேல்
விழியாலே என விலாவைக் குத்தாதே
கண்ணடைத்து
அழைத்தால் கட்டழகி என்றும்
கடிகாரத்து
முள் போலே ஒரு
கண்ணல்ல
காலத்தை வெல்ல
கல்வியை
நாடு என்றெல்லாம்
கண்களை
கவிதையாக்கினார் பாவேந்தர்.
குண்டூசிபோலே
இரண்டு கண்ணும் உள்ளவளாம்
என்
கண்ணைக் கொஞ்சம் பாரு
உன்
கண்ண அதில்சேரு கண்ணாளா
என்
கண்ணாளா என்றெல்லாம்
மாறாத
புகழ் கொண்ட மருத காசி பாடினார்
விழியாலே
காதல் கதை பேசு
கண்ணில்
வந்து மின்னல் போல் தோன்றுதே
காவியக்
கலையே ஓவியமே
கண்ணுக்கு
மேலாடை காவல்தரும் இமைகள்
உவமைக்
கவிஞர் சுரதா ஊட்டினார் தமிழ் சுவையை
கண்விழிக்கும்
தாரகைகள் வெண்ணிலாவே
உனைக்
காவல் காக்கும் தோழியரோ
சின்னஞ்சிறு
கண்மலர் செம்பவழ வாய்மலர்
பட்டுக்
கோட்டையின் பார்வை இது.
கண்ணருகே
தோன்றினாள்
காதளவு
கண்கள் காலளவு கூந்தல்
கண்மலர்ந்த
வேளையிலே பெண் பிறந்தாளே
கண்ணான
கண்ணனுக்கு தெரியலையோ
கவிஞன்
கண்டாலே கவிதை
காண்பவர்
கண்டாலே காதல்
இமையும்
விழியும் எதிரானால்
இயற்கை
சிரிக்காதா?
கண்ணதாசன்
கவிதைச் சரம் கோர்தார்.
கண்ணருகே
பெண்மை குடியேற
கையருகே
இளமை தடுமாறப்
அத்தைமடி
மெத்தையடி
அல்லிவிழி
தூங்கம்மா என
வாலி
கவிதை வனப்பைக் காட்டினார்.
விழியில்
விழுந்து இதயம் நுழைந்து
உயிரில்
கலந்த உறவே என
வைரமுத்து
வர்ணித்தார்.
கண்களின்
வார்த்தை தெரியாதோ
கண்ணோரம்
காதல் வந்தால்
கண்ணும்
கண்ணும் பேசுது
காணாத
இன்பம் காணுவது என
கவிஞர்கள்
பாடி வைத்தார்கள்
கண்ணாயிரத்தின்
உலகம்
கபோதிபுரக்
காதல் என்பது
அண்ணாவின்
எழுத்தோவியம்
பூனைக்
கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகமே
இருண்டு போகுமா
வேல்
விழி மாதரை வீரர்கள் வென்றார்கள்
என்பதற்கு
சரித்திரத்தில் சான்றில்லை
இளவரசி
என்றும் கண்ணடக்கம் ஓவியம் எழுதி
தமிழுக்கு
அழகு சேர்ந்தார் கலைஞர் அவர்கள்
பேசு
கண்ணே பேசு என்று உரையாடலும் தீட்டினார்.
மூன்று
கண் மிருகம் ஒன்று வாழ்ந்ததாக
புவியியல்
ஆய்வுகள் கூறியதுண்டு
மூன்று
கண் கடவுளை வணங்குவதுண்டு
முக்கண்ணில்
ஒன்றிலிருந்து
முருகன்
பிறந்ததாக கதையுண்டு
மூளையின்
முகமே கண்கள் என்று
அறிவியலார்
ஆய்ந்த முடிவொன்று உண்டு
கள்ளப்பார்வை
கண்ணுக்கு இன்பம்
ஓரப்
பார்வை உயிரை உருக்கும்
உடல்
உறுப்பில் உயிருக்கு இணையானது
கலை
கொஞ்சம் இரு கண்கள் தானாம்
கண்ணில்லை
என்றால் கருத்துக்கள் இல்லை
கருத்து
இல்லை எனில் வாழ்வில்லை தானே!
விண்ணையும்
மண்ணையும் வேறுபடுத்தி
உணர்த்துவது
விழியின் ஆற்றல்தானே
கண்ணே
மணியே என்று தன் காதலியையும்
தன்
கைக்குழந்தையையும் கொஞ்சுவதுண்டு
விரிவானில்
தோன்றும் விண்மீன் ஒளியை
விழிகளின்றி
வேறது காட்டும்?
கறுப்பும்
சிவப்பும் கவரும் பச்சையும்
மஞ்சளலெல்லாம்
கண்ணன்றி வேறெது காட்டும்
பாடிப்
பறக்கும் பறவையையும் பசுமைக்கூட்டி
பரவசமூட்டும்
காட்சிகளையும் மனதில்
பதிய
வைத்தும் குடிவைப்பது கண்கள் தானே!
பெரிய
யானைக்கு கண்சிறிதென்றாலும்
பார்வையின்
ஆற்றல் பெரிதல்லவா?
முல்லைக்கு
தேர்தந்த பாரியின் கொடை
அந்தப்
பூங்கொடியைக் கண்டதால்தானே!
மயிலுக்கு
போர்வை தந்த பேகனும்
அந்தப்
பறவையின் முகத்தை கண்டதால்தானே!
தாய்மொழி
அழிந்தால் அது விழியிழந்த
நிலை
போன்றது என்பது உரிமைக்கும்
உவமை
காட்டுவது உணர்ச்சி மிகு விழிதானே!
அருள்பார்வை
என்பது பண்புகளின்
உச்சம்
என்றே உயர்ந்தோர் கூறுவர்
உடலின்
நோவுகண்டு உருகுவது கண்கள்தான்
கலை
கொஞ்சும் கண்கள் பேசும் என்றனர் கவிஞர்கள்
மூளையின்
வெளித்தோற்றம் கண்கள் என
வியந்து
சொன்னார்கள் விஞ்ஞானிகள்
கண்களைப்
பற்றிய காட்சிகளும் கருத்துகளும்
கலைவடிவமிக்கவிதை
செழுமைகளை
இங்கு
எழுதிட இடம் போதாது ஏடு கொள்ளாது
கருவிழியின்
ஒளிவட்டத்தில்
இடர்பாடுகள்
ஏற்படுவதுண்டு
ஊனமுற்ற
கண்கள் ஊமையானதுண்டு
கண்ணொளி
குறைந்து கவலை தருவதுண்டு
பேசாத
விழியால் பெருமைகள் குறைவதுண்டு
விழியின்
பெருமை அறிந்த விற்பன்னர்கள்
ஒளி
கூட்டுகின்ற கருவிகளாம் ஆடிகளை
உருவாக்கி
கண்களுக்கு மெருகூட்டினர்
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே
இரு
கண்களில் ஆடி அணிந்தனர் சீனர்கள் என
உலகப்
பயணி, மார்க்கோ போலோ எழுதி வைத்தார்
ஆயிரத்தில்
முன்னூரில் இத்தாலியர்கள்
விழியில்
ஒளிகூட்டும் கண்ணாடி அணிந்தனர் என்று
எழுத்தாளர்
ஒருவர் எழுதி வைத்தார்
ஜோகன்னஸ்
கெப்ளர் என்றும் விஞ்ஞானி
தூரப்பார்வை
கிட்டப் பார்வை என்பது
கண்களுக்கு
உண்டென கண்டு பிடித்தார்
ஆயிரத்து
எண்ணூற்று அய்ம்பதாம் ஆண்டு
கண்களுக்கான
முதல் நிறுவனம் தோன்றியது
அடுத்த
ஆண்டுகளில் கண்கல்லூரி உருவானது
அதற்கு
பின்னர் இங்கிலாந்து பள்ளி உருவானது
ஆயிரத்து
தொள்ளாயிரத்து நாற்பதில்
முதல்
குவி ஆடியை (காண்டக் லென்ஸ்) பொருத்தினர்
இன்று
கண்ணாடிகளும் சட்டங்களும் (பிரேம்)
கலை
காட்டும் வடிவிலெல்லாம்
காட்சியாக
களிப்பூட்டுகிறது.
என்
கண்களில் ஒளியேற்றிய
அகர்வால்
கண்மருந்துவமனையிருக்கும்
உண்டால்
கண்நோய்கள் வராது என்று
நேர்மையுடன்
எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
மருந்தே
உணவாகவும் உணவே மருந்தாகவும்
உண்டு
வாழ்ந்த தமிழர் வாழ்க்கை முறை
உயிரில்
உணர்வில் நிறைந்து மகிழ்வித்தது
கண்
நோய் கண்டு கலங்கி வருபவர்களை
கனிவுடன்
வரவேற்று அமர வைத்த
கண்கொள்ளாக்
காட்சி களிப்பூட்டுகிறது
கலைக்கூடத்தில்
ஒளிரும் மெழுகுச் சிலைகளாக
காட்சிதரும்
செவிலியர் தங்கங்களும்
கண்
நிறைந்த பிறபணியாளர்களும்
கண்ணன்
வாங்க, கண்மணி வாங்க, கவிதா வாங்க
கலையரசி
வாங்க பொன்முடி வாங்க
பூங்கொடி
வாங்க என சோலைக்குயிலாய்
இசையெழுப்பி
இருப்பவரை அழைத்து
ஆங்காங்கே
உள்ள அறைகளுக்கு
அழைத்துச்
சென்று சிகிச்சைக்கு
உட்படுத்தி
நலமளித்த காட்சிகள்
என்றென்றும்
இதயத்தில் நிறைந்திருக்கும்
எழிலார்ந்த
அழகிய காட்சியாகும்
எல்லோரையும்
போல என்னையும்
பலவித
பரிசோதனைகள் செய்து
கண்புரை
அகற்றி கலக்கம் தீர்த்தனர்
டாக்டர்
லயனெஸ்ராஜ் விழிகளில் நிறைந்து விட்டார்
முதல்
சோதனை செய்த அதுல்தாவன் நன்றிக்குரிய நல்லவர்
அறுவைச்சிகிச்சைக்குப்பின்
சோதனை செய்த
பூவிரித்த
இதழில் புன்னகையோடு
தாயன்பு
ஒளிரும் அருள் கண்களால்
மருத்துவர்
பிரீத்தி பார்க்கும் பார்வையால்
நோய்கள்
பறந்தோடும்.
நோயாளிகளை
அன்புடன் அணுகும்
அருமை
நிறைந்த மருத்துவர் பிரீத்தி
நினைவில்
நிரந்தரமாய் ஒளிர்கிறார்
அன்பின்
நிழலாய் அமைந்தவர்கள்
சுகன்யா,
உமா, சரண்யா, சுமி, முத்துலட்சுமி
சுப்புலட்சுமி,
கவுரி - கவுரி, கீதா, வனிதா
பியூலா,
செய்கீலி, நித்யா, பத்மா, தங்கராணி, இசக்கி மற்றும் மருத்துவமனை பணியாளர்களுக்கும்
மேலாளர் கார்த்திக் இராசா
அவர்
உதவியாளர் மனோகரன், கார்த்திக், சிவாவும்
பணியாளர்களுக்கும்
எமது நன்றி
கற்சிலைக்கு
கண் மலர் சாத்திய பிறகே
கடவுளாகும்
என்பது சிற்ப சாத்திரமாகும்
இருண்ட
கண்களுக்கு ஒளி தரும் வழிகளை
இயற்றிய
விஞ்ஞானிகள் எல்லாம்
எதிரில்
தோன்றும் கடவுள்கள் தானே
கண்களை
திறந்து பார்வை தந்தவர்கள்
கடவுளுக்கு
மேலானவர்கள் தானே ஆனால்
நான்
நாத்திகள் என்பதால் நன்றி காட்டும்
நல்ல
நெஞ்சத்தை இவர்கள் முன் காட்டுகிறேன்.
நன்றி வாழ்க நலம்.
No comments:
Post a Comment