Wednesday 25 February 2015

தமிழ்நாடு 100

1. உலகில் முதலில் உயிரினம் தோன்றியது தமிழ்நாடு
2. உலகில் மனித மொழி தோன்றிய இடம் தமிழ்நாடு
3. அறம் பொருள் இன்பம் வகுத்த தமிழ்நாடு
4. அன்பின் பொருள் சொன்ன தமிழ்நாடு
5. அறிவின் தொகை கண்ட தமிழ்நாடு
6. அறிவாளர் நிறைந்த இடம் தமிழ்நாடு
7. அய்வகை நிலம் வகுத்த தமிழ்நாடு
8. ஆய கலைகளை வளர்த்த தமிழ்நாடு
9. இயல் இசை கலை வடித்த தமிழ்நாடு
10. இரந்தும் உயிர் வாழாதே என்றது தமிழ்நாடு 
11. உயிரினும் மனம் பெரிதென்றது தமிழ்நாடு
12. ஊர் நாகரிகத்தை உருவாக்கியது தமிழ்நாடு
13. உலக நாகரிகத்தின் ஊற்றானது தமிழ்நாடு 
14. உழுதுண்டு வாழ்ந்தாரை தொழுதது தமிழ்நாடு
15. ஊன் பெருக்கம் உதாவது என்றது தமிழ்நாடு
16. உலகம் பெரிதே பேணுநர் பலரே என்றது தமிழ்நாடு
17. யாதும் ஊரே உறவே என்றது தமிழ்நாடு
18. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றது தமிழ்நாடு
19. உண்மை அறிவே ஊக்கம் தரும் என்றது தமிழ்நாடு
20. காதல் சூழ்ந்த பகுதியை கொண்டது தமிழ்நாடு
21. நஞ்சை வளம் செறிந்த தஞ்சையை தந்த தமிழ்நாடு
22. வஞ்சனை இல்லா வாழ்வியலை கொண்டது தமிழ்நாடு
23. இயற்கை வளம் நிறைந்தது தமிழ்நாடு
24. சுழன்று வருவது உலகம் என்றது தமிழ்நாடு
25. கடமை கண்ணியம் கொண்டது தமிழ்நாடு
26. ஒன்றே குலம் என்று ஓதியது தமிழ்நாடு
27. மாயமந்திர மயக்கம் சொல்லாதது தமிழ்நாடு
28. உலகில் முதல் அணையை(கல்லணை) கட்டியது தமிழ்நாடு
29. தூர தேசங்களை வென்றது தமிழ்நாடு
30. அகஸ்டஸின் முன் வணிகத் தூதனை அமர வைத்த தமிழ்நாடு 
31. போதி தருமரை சீனாவுக்குத் தந்த தமிழ்நாடு
32. போர், வணிகத்தில் கடலில் புதுமை செய்த தமிழ்நாடு
33. அறம் சார்ந்த இலக்கியங்களை அள்ளித் தந்த தமிழ்நாடு
34. அன்னை குலத்தை அறிவாளியாக்கிய தமிழ்நாடு
35. சூரியனின் துண்டுதான் இந்தப்பூமி என்றது தமிழ்நாடு
36. உலகில் சிறந்த கடற்கரை கொண்டது தமிழ்நாடு
37. கணினித் துறையில் புதுமை படைக்கிறது தமிழ்நாடு
38. மருத்துவத்தில் புரட்சி காண்கிறது தமிழ்நாடு
39. யாதும் ஊரே யாவரும் உறவு என்றது தமிழ்நாடு
40. தீதும் நன்றும் பிறர் தருவதல்ல என்றது தமிழ்நாடு
41. கவிதை உலகில் எழில்நிலா இனிய தமிழ்நாடு
42. காவியப் பனுவல்களை கண்ணில் வைத்து காத்தது தமிழ்நாடு
43. பெரியாரை தந்தது தமிழ்நாடு
44. பேரறிஞர் அண்ணாவை ஈன்றது தமிழ்நாடு
45. பேராளர் பெருமக்களை பெற்றது தமிழ்நாடு
46. வந்தோரை எல்லாம் வாழ வைத்த தமிழ்நாடு
47. வாடிய பயிரைக் கண்டு வருந்தியது தமிழ்நாடு
48. இயற்கை வழியில் வாழ்ந்தது தமிழ்நாடு
49. போர் நெறிகளை போற்றியது தமிழ்நாடு
50. புறப்பொருள் எதுவென சொன்ன தமிழ்நாடு
51. மதம் சாரா வாழ்வுக்கு வழிகாட்டிய தமிழ்நாடு
52. முத்தமிழ் வளர்த்த முதுகுடி தமிழ்நாடு
53. செந்தமிழை சிந்தையில் நிறுத்திய தமிழ்நாடு
54. கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த தமிழ்நாடு
55. படை நடை போட்டு பார் சிறக்க வாழ்ந்த தமிழ்நாடு
56. பாயும் புலி என்றாலும் பயமறியா தமிழ்நாடு
57. நிலம் அய்ந்து, சுவை ஆறு, இசை ஏழு என்ற தமிழ்நாடு
58. உயிர் வகை ஆறு, ஓவிய வண்ணம் ஏழு  என்றது தமிழ்நாடு
59. ஒளி சிந்தும் எழுத்தாளர்கள் உலவிய தமிழ்நாடு
60. உலகின் தாயகம் உன்னதத் தமிழ்நாடு
61. சுயமரியாதைச் சுடரொளி வீசிய தமிழ்நாடு
62. இமயத்தில் வெற்றிக்கொடி பொறித்த தமிழ்நாடு
63. இமயமலையை ஓர் எல்லையெனக் கொண்ட தமிழ்நாடு
64. மூன்று கடலை பிற எல்லை என்ற தமிழ்நாடு
65. வில், புலி, கயல் காட்டி வீரம் விளைத்த தமிழ்நாடு 
66. ஈரமிகு இதயம் கொண்ட எழிலான தமிழ்நாடு
67. சீரும் செழுமையும் கொண்ட சிந்தைமிகு தமிழ்நாடு
68. பீடுமிகு வரலாற்றுச் சிறப்பு கொண்ட தமிழ்நாடு
69  அறிவியல் மொழி தமிழை அகத்தில் கொண்ட தமிழ்நாடு
70. ஈடில்லா திரைப்பட நடிகர்களைத் தந்த தமிழ்நாடு
71. தேன் சிந்தும் தெம்மாங்கு பாடிய தமிழ்நாடு
72. நாட்டுப்புற மருத்துவத்தால் நலம் தந்த தமிழ்நாடு
73. குவலையம் சிறக்கக் குறள் தந்த தமிழ்நாடு
74. மொழிப்புரட்சி நடத்திய தமிழ்நாடு
75.தமிழ் காக்கத் தணலில் மெழுகான தமிழ்நாடு
76. தன் மொழி மீது விழுந்த தாக்குதலை தாங்கிய தமிழ்நாடு
77. மாற்றானின் கருத்துகளையும் மதித்தது தமிழ்நாடு
78. மஹாத்மா காந்தியை கவர்ந்தது தமிழ்நாடு
79. முத்தமிழ் முக்கொடி மூவேந்தர்களைத் தந்த தமிழ்நாடு
80. வேற்றார் என்றாலும் வெறுக்காத தமிழ்நாடு
81. மனித நேயத்தை போற்றும் மாண்புள்ள தமிழ்நாடு
82. புதுமைக்கவி, புரட்சிக்கவிகளைத் தந்த தமிழ்நாடு  
83. சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட தமிழ்நாடு
84. தாய்மொழி காப்பது பிறப்புரிமை என்ற தமிழ்நாடு
85. தன்மானம் தம் குருதியில் உறைந்த தமிழ்நாடு
86. பகுத்தறிவுச் செய்திகளைப் பாருக்கு பறை சாற்றிய தமிழ்நாடு
87. மதம் சாரா அறிவுச் செல்வத்தை தந்த தமிழ்நாடு
88. மணிமேகலையை உலகிற்கு வழங்கிய தமிழ்நாடு
89. பத்தினிக்குச் சிலை வைத்து மகிழ்ந்த தமிழ்நாடு
90. பெரிபுளூஸ், தாலமியின் வாழ்த்தைப் பெற்ற தமிழ்நாடு
91. கடல் அலையாய் கவிதைகளைப் படைத்த தமிழ்நாடு
92. கலைஞரின் ஆட்சியில் வளர்ச்சி கண்ட தமிழ்நாடு
93. கலைஞரால் திருப்புமுனைகள் பல கண்ட தமிழ்நாடு
94. வையகத்தில் சிறந்த வாழ்விடம் தமிழ்நாடு
95. அழகும் இளமையும் உள்ள மொழி கண்ட தமிழ்நாடு
96. இனிமை கூறும் மொழியில் ஈடற்றது தமிழ்நாடு
97. இன்னல் செய்திட்டவரையும் வாழ்த்தியது தமிழ்நாடு
98. வறுமையும், பிணியும், பகையும் கூடாதென்ற தமிழ்நாடு
99. சீரமையும், செழுமையும் சிந்தனையில்  வேண்டுமென்ற தமிழ்நாடு

100. வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தமிழ்நாடு

No comments:

Post a Comment