Thursday 31 July 2014

தமிழன் தன்னை உணரும் நாள் வருமா?


தமிழின்,தமிழர்களின் வரலாறு குறைந்த அளவு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழுக்கு முதலில் இலக்கணம் கண்ட தொல்காப்பியர்அவர் காலத்திற்கு முன் எண்ணற்ற இலக்கியங்கள் இருந்ததாக தொல்காப்பியரே குறிப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.

தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் சான்றுகளை வைத்து நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னரே பண்பாட்டு செறிவுகளோடும்ஆய்வு நெறிகளோடும்நாகரீகச் செம்மையோடும்வளர் விதிகளோடும்வாழ்வியலை வகுத்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று காய்தல் - உவத்தல் அற்ற கண்ணியம் மிக்க பேராளர்கள் பலர் ஓங்கி அறைகிறார்கள்.

இராமச்சந்திர தீட்சதரின் “தமிழர் தோற்றமும் பரவலும்” எனும் நூலில் இன்றுள்ள தென்னகத்தில் தோன்றி உலகெங்கும் படர்ந்து பரவி பல்வேறு இனங்களாககுழுக்களாகமாறிப் போனார்கள் என்று ஆய்ந்து அறிந்து உரத்து முழங்குகிறார்.

இந்தியா முழுவதும் தமிழர்கள் பரவி இருந்தார்கள் என்னும் இனிக்கும் செய்தியை இந்திய பாராளுமன்றத்தின் ஆற்றல்மிகு அறிவாளர் வங்கத்தைச் சேர்ந்த பொதுஉடைமைத் தலைவர் சோதிர்மயிபாசு சொல்கிறார்,

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை என்று சொன்னால் இந்தியா முழுமைக்கும் தமிழர்களுக்கே தர வேண்டும் என்கிறார்.

சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து சிந்துவெளி தமிழர்கள்பாய்மரப் படகுகளில்கடலில் பயணித்து ஆறு மாதங்கள் கழித்துஅமெரிக்காவை அடைந்தார்கள்அவர்கள் தான் அங்குள்ள செவ்விந்தியர்கள் என்று இரஷ்ய கீழ்த்திசை ஆராய்ச்சி மையம் பாய்மரப்படகுகளில் பயணம் செய்துஆய்வு செய்து முடிவுகளை சொன்னார்கள்.

தென்கண்ட பனி உருகிய காலத்தில் ஆசியாஆப்பிரிக்காஆஸ்திரேலேயா நிலப் பகுதிகள் நெருங்கி இருந்த நிலையில் அங்கெல்லாம் சென்று வாழ்க்கையைத் தொடங்கினர் தமிழர்கள் என்று பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன.

ஆயினும் அறிவியல் முடிவுகள் வேறு சில கருத்துக்களை முன் வைக்கின்றன என்றாலும்அது முடிந்த முடிவல்ல சார்பியல் தான் என்று அறிவியல் கூறுவதும் இங்கு நினைக்கத்தக்கது ஆகும்எடுத்துக்காட்டாக ஒன்றைக் கருதிப் பார்ப்போம்கரியமில வேதியல் ஆய்ந்த பொருள் ஒன்றுக்கு இரண்டாயிரம் வயது என்றால் அதை யுரேனியத்தின் ஆய்வில் பலமடங்கு வயதைத் தொடும் என்கிறார்கள்ஆகவே ஒரு கல்லைஒரு எலும்பைஆய்வு செய்த அறிவியல் முறையில் வயதில் வேறுபட காண்கிறோம்.

அருமைத் தமிழ் மக்கள் கலையும்கவிதையும் இணைந்த காவிய உணர்வுகளுடன் தங்களின் பொருட்களை அழகுபடுத்தி வாழ்ந்தார்கள் என்பது அறிந்து நமது உள்ளம் செம்மாந்து நிமிர்கிறது.

ஆதிநாளில் தமிழர்கள் தங்களின் பொருட்களில் எல்லாம் வண்ணம் பூசி அழகு மிளிர பார்த்து ரசித்து பரவசமடைந்திருந்தார்கள் என்பதை அறிந்து இதயம் எழுச்சி கொள்கிறது.

ஆரியர்கள் தங்களின் பொருட்களின் மீது சாம்பலைத் தடவி வாழ்க்கை நிலையாமையை எண்ணி ஏங்கிக் கிடந்தார்கள்ஆனால் தமிழர்களிள் தங்களின் பொருட்களின் மீது தன்னை கவர்ந்து மகிழ்ஊட்டும் கருப்புசிவப்பு வண்ணம் பூசி கலை வடிவக் காட்சிகண்டு களிப்புற்று வாழ்ந்தார்கள்.

சிந்துவெளித் தீரத்திலும்செங்கடல் ஓரத்திலும்இந்தியாவின் பிற பகுதிகளிலும்தென்னகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அகழ்ந்து எடுத்து கிடைத்த பொருட்களில் எல்லாம் கருப்பும்சிவப்பும் தன் கலைவண்ணம் காட்டி மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

ஆதிகால மனிதர்களின் குடியிருப்புகளை ஆய்ந்து பார்த்தால் மேற்காணும் நிலைகளோடு தமிழர்களின் அடையாளங்கள் ஆரத் தழுவி தம்மை அகம் மகிழச் செய்யும்.

ஒரு மொழி பிறந்து படிப்படியாக வளர்ந்து இலக்கியச் செறிவடைந்து படைப்புகள் வெளியாகிஅது பல்கிப் பெருகிஅதற்கு பின் இலக்கணம் கண்டுபின் இலக்கண விதிப்படி இலக்கியங்கள் தோன்றி அது கால ஓட்டத்தில் கருத்துக்கள் வளர்ந்துபின் அதற்கேற்றாற்போல புது இலக்கணங்கள் புனையப் பெற்று அது நிலைபெறுவதற்கு நிச்சயம் ஏழாயிரதிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்கிறார் ஓர் இனிய பேராசிரியர்.

இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் இளமைகுன்றாதஎழுச்சியும்மகிழ்ச்சியும்குறையாத எழிலும்அழகும் இமைப்பொழுதும் பிரியாதஏற்றத்தையும்மாற்றத்தையும் வற்றாத ஆற்றலையும் வழங்கும் நிலை கொண்டவரிவடிவங்கள் மாறிவிடினும் பொருள்தரும் சொல்வடிவும் சில மாறி மறைந்திடினும்எழிலார்ந்த ஏற்றந்தந்த மொழிகள் பல அழிந்த போதும்தன் நாவில் தேன்தமிழை தேக்கிவைத்து சிந்தை மகிழ பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்கின்ற தமிழன் உலகத்தின் வாழ்த்துக்குரியவன்தான்.

பண்பாட்டு படையெடுப்புகள் பல்லாயிரம் ஆண்டுகள் நிகழ்ந்த பின்னும்அந்நியக் கருத்துக்கள் ஆயிரம் ஆண்டுகள் அடிமைகொண்ட பின்னும்அரசியல் ஆதிக்கம் அழுத்திச் சிதைத்த பின்னும்தன் அன்பு மொழியைஅருமைத் தமிழை தன் காதலுக்கும்கைக்குழந்தையை கொஞ்சுவதற்கும்தன் உறவுகளை ஒன்றாக்குவதற்கும்கலையாக்கத்திற்கும்கவிதை திறத்திற்கும்வழிபாட்டிற்கும் தனித்தமிழைகன்னித்தமிழை பயன்படுத்தும் தமிழனை பாராட்டியே தீரவேண்டும்.

உணர்ச்சி வயப்படும் சூழலில் வெறுப்பைக் காட்டுவதற்கும்பகைமை பாராட்டும் போதும்பயன்படுத்தும் கொச்சைச் சொற்களில் கூட தமிழ் வாழக் காணலாம்.

தாலாட்டையும்இரங்கல் ஒப்பாரியையும்உணர்வுகளை அளந்து காட்டும் நாட்டுப்புறத் தெம்மாங்கு (தென்பாங்கு), பாடல்களையும் தொலைத்துவிட்ட தமிழனையும்தமிழச்சியையும் திட்டித்தான் தீர்க்க வேண்டும்.

ஊமையாய் உலகின் பல பாகங்களில் மனிதர்கள் வாழ்ந்த நாட்களில் மொழிகண்டுகலை கண்டுகவிதையாத்துஅறிவின் செவிவுணர்ந்துசீருடன் வாழ்ந்த தமிழனின் வாழ்வியல் சிந்தனைகள்விண்வெளியில் பிற கோள்களில் மனிதன் குடியேறும் காலத்திலும்ஏற்றுக் கொள்ளும் இனிய முறையாகும்.

தாய்மனம் கொண்ட தமிழ்கூறும் நல்லுலகச் செய்திகள்இதயத்திற்கு இனிமை தரும்ஏற்றமிகு செய்திகளாகும்தமிழ் கவிஞன் கனியன் பூங்குன்றன் வழங்கிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பாத்தொடர் முழுவதும் மாந்தர் இனம்எந்த உலகிலும்எந்த நிலையிலும்வாழ்ந்தாலும் சமத்துவத்தை போதிக்கும் சத்தாக சாரமாக திகழும் என்பது திண்ணமாகும்.

ஆனால் தமிழை தமிழனை உலகம் உணர்ந்து மகிழ்ந்தாலும்அவன் தன்னை உணரவில்லை என்பதும்உணர மறுப்பதும்வேதனை ஆனதாகும்.


இதுபோன்ற செய்திகளை ஏடுகளும்இதழ்களும்எழுத்தாளர்களும்ஊடகங்களும் நாளும் நாளும் உலகிற்கு சொல்லும் நாள் வருமா?