Saturday 30 April 2016

பள்ளி, பல்கலைக்கழக பாடமாக வேண்டும்

பள்ளி, பல்கலைக்கழக பாடமாக வேண்டும்

1949ல் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு பிரச்சார உத்திகளோடும் சனநாயக உணர்வுகளுக்காக வகைவகையான போராட்டங்களை நடத்தி மக்களாட்சி மாண்புகளுக்கு மாறான அடக்கு முறைகளுக்கு உள்ளாகி இலட்சக்கணக்கான தொண்டர்களோடு தலைவர்களும் சிறைக்கோட்டம் சென்று பல்வேறு இழப்புகளை ஏற்று மக்களை தன்பக்கம் ஈர்த்து 1967ல் ஆட்சியில் அமர்ந்த திமுக, அண்ணா - கலைஞர் தலைமையில் தனது ஆட்சித் திறத்தால் நிர்வாகச் சீர்மையால் சீரிய திட்டங்களால் பெருகிவந்த தமிழ் மக்களுக்கு அளப்பரிய வாழ்க்கை வசதிகளை வாரித் தந்தது.

சங்ககாலம், இடைக்காலம் பின்னர் வந்த கால வரலாற்றுத் தரவுகளோடு 17ம் நூற்றாண்டில் விளைந்த விஞ்ஞானப் புதுமைகளையும் அகத்துறை சார்ந்த பல செழுமைகளையும் விளக்கிய திமுக, ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து தமிழர்களின் புறவாழ்வு, பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் நிலைகளை உருவாக்கி நெஞ்சினிக்கும் வளங்களை வழங்கி வரலாற்றில் நிமிர்ந்து நிற்கிறது.

பெரியார் அண்ணா வழி நடந்த கலைஞர் அவர்கள், கட்சியையும் ஆட்சியையும் இயக்கியமுறை விஞ்ஞானிகளையே வியக்க வைக்கும். மாவட்ட - மாநிலத் திட்டக் குழுக்களை ஏற்படுத்தி ஆங்காங்கேயுள்ள மூலப்பொருட்களை கண்டறிந்து அதற்கேற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வந்தார்.

அடுத்தடுத்து அவரது ஆட்சி தொடர்ந்திருந்தால் தமிழகம் அய்ரோப்பா போல அமெரிக்காபோல ஆகியிருக்கும் ஏன் அதற்கு மேலேயும் சென்றிருக்கும். தமிழர்கள் இடையிடையே ஆக்கமில்லாதவர்களையும் ஆசைமனம் கொண்டவர்களையும் உழைக்காத உல்லாச மனிதர்களையும் நம்பி ஆட்சியைக் கொடுத்ததால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.

அளப்பரிய முன்னேற்றம் காண வேண்டிய தமிழகம் அய்தாண்டுக்கு ஒரு முறை அய்ம்பதாண்டு பின்னடைவைச் சந்தித்து வந்திருக்கிறது. கடந்த அய்ந்தாண்டுகளில் ஏற்பட்ட இழப்பை எண்ணிப் பார்த்தால் நாட்டு நலனில் அக்கறை கொண்டோர் நெஞ்சம் நடுங்கவே செய்யும். பொய்களை நம்பும் தமிழர்கள் உண்மைகளை உணர்வதில்லை, உள்வாங்குவதில்லை, உற்றுப் பார்ப்பதில்லை. இனியாவது ஊனமுற்றவர்களையும், , உதவாக்கரைகளையும் புறக்கணித்து உழைப்பவர்களை ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்.

கடந்த கால நலிவுகளை நீக்கும் வகையில் 2016 தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டிருக்கிறது. வெளியிட்ட தலைவர் கலைஞரின் விளக்கத்தை உணர்ந்து உள்வாங்குவது அனைவரின் கடமையாகும்.

அந்த தேர்தல் அறிக்கையை நோக்கினால் உள்ளம் உவந்து மலர்ந்து உற்சாகம் கொள்ளும். அந்த அறிக்கையில் கலைஞரின் முன்னுரையோடு மொழிப் பயன்பாட்டில் நாலு தலைப்புகள், ஈழத் தமிழர் நல்வாழ்வு, மதுவிலக்கு, நிர்வாகச் சீர்திருத்தம், வேளாண்மை, நீர் மேலாண்மை, காவிரி நீர்ப் பங்கீடு, சேதுசமுத்திரத் திட்டம், கச்சத்தீவு எனத் தொடங்கி இறுதியில் பொது எனும் தலைப்பில் ஒட்டு மொத்த தமிழக நலன்கள் விரித்து, விவரித்து விளக்கப்படுகிறது. அறிவின் வெளிப்பாடாகத் திகழும் இந்த அறிக்கை திமுகவின் இயல்புக்கேற்றவாறு அமைந்திருக்கிறது.

விஞ்ஞானப் பார்வையில் வெளி வந்திருக்கும் இந்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறையும், உயர் கல்வித் துறையும் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் எதிர்காலத் தமிழர்களின் வாழ்வு மேலும் மேலும் மேலோங்கி வரும்.
அய்.நாவின் அறிவுப்புகளை இணைத்து வழங்கியிருக்கிறது இந்த தேர்தல் அறிக்கை. விஞ்ஞான பேரவையின் விரிவான விளக்கத்தையும் விஞ்சியிருப்பதாகவே கருதத் தோன்றுகிறது.

திமுகவை குறைசொல்லும் யாராக இருந்தாலும் திமுகவின் தரவுகளோடு அதன் பாணியோடு தங்களை வெளிப்படுத்தி பொது வாழ்வுக்கு வந்தார்கள். பின் திசைமாறிய பறவைகளாய் ஆனார்கள். கண்ணியமற்ற வெளிப்பாடுகளால் தங்களைக் களங்கப்படுத்திக் கொண்டார்கள்.  தங்களைத் தாழ்த்திய சாதிமத உணர்வுகளை தன் தலைமேல் வைத்துத் தரம் தாழ்ந்தவர்கள் தலை கவிழ்ந்தார்கள். பொறுப்பற்ற நிலைகளுக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொணடார்கள்.

தரம் தாழ்ந்தவர்களின் பட்டியலை வெளியிடுவதென்றால் நீட்டோலைகள் நிறைந்துவிடும். இங்குள்ளோரில் அகமும் புறமும் தூய்மை துலங்குகிறது என்றால் அது திமுகவால் ஏற்பட்டதாகும். பொய்மையும் புண்மையும் தழுவி நிற்கிறது என்றால் அது ஆயிரமாண்டு சமய அழுக்குகள் இவர்களைவிட்டு அகலவில்லை என்றே தோன்றுகிறது.
தன் கையில் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் வெளிப்படையாய் வெளிப்படுத்தும் கலைஞர் மீது களங்கம் சுமத்துவது சரியா? படத்துறையில் முக்கால் நூறு படங்களுக்கு உரையாடல் எழுதியவர். அம்பதாண்டுகளுக்கு முன்னர் படத் தயாரிப்பாளராகி படங்களைத் தயாரித்து எம்ஜியாருக்கும் செயலலிதாவுக்கும் ஊதியம் வழங்கியவர் தன் குடும்பத்தைக் காக்க ஊழல் செய்வாரா? என்று சிந்திக்க வேண்டாமா.

கலைஞர் வாழ்க்கை உழைப்பால் இணைந்தது. ஊருக்கு உழைப்பதை உயிரணுக்களில் இணைத்து வைத்து சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்க வேண்டிய நிலையில், ஊரூராய் ஓடிச்சென்று உழைக்கும் உள்ளத்தை போற்றவில்லையென்றால் அது உள்ளம் அல்ல. ஊனமுற்ற ஒரு உறுப்புதான் என்பது உண்மையாகும்.


இந்திய அரசியல் சட்டத்தின் சிறு சுண்டக்காய் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மத்திய அரசின் முழு ஆதரவோடு இயங்கும் மாநில அரசுகளோடு தமிழகத்தை இணைத்த கலைஞர் சாதனையாளர் அல்லவா? எண்ணிப் பார்க்க வேண்டியது இங்குள்ளோரது கடமையாகும்.

Thursday 21 April 2016

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சிறுமைக் குணங்கள்

செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சிறுமைக் குணங்கள்
அண்ணா தி.மு.க என்பதை ஆரியக் கட்சி ஆக்கினார்.
அவலங்களின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.
அங்கெங்கினாதபடி எங்கும் ஊழலை வளர்த்தார்
அலட்சியப் பேருருவாக உருக்கொண்டார்
ஊழலில் முதலிடத்திற்கு தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார்.
இருபது மணிநேர மின்வெட்டை ஏற்படுத்தினார்.
தொழிற்கூடங்களைத் தொலைத்துக் கட்டினார்.
அய்ந்தாண்டு ஆட்சியில்  அய்ம்பதாண்டு வளர்ச்சியைக் கெடுத்தார்
அம்மா என்ற புனிதத்தை அசிங்கப்படுத்தினார்
அடிமைகளின் கூடாரமாய் அதிமுகவை ஆக்கினார்
பொருளாதார செழுமைகளை புதைத்து மகிழ்ந்தார்
உழைக்காத உல்லாசியாய்  ஊராய் ஆண்டார்.
மக்களாட்சி புனிதத்தை மாசுபடித்தினார்.
வேலை இல்லாதார் எண்ணிக்கையைக் கூட்டினார்.
மதுக்கடையால் மகளிர் தாலியைப் பறித்தார்.
குன்றேறி உயர்ந்த தமிழகத்தை குழிக்குள் புதைத்தார்
ஊழலுக்காக இருமுறை சிறை  ஏகினார்
முதலிடத்தில் இருந்து தமிழகத்தை
கடைசியில் வைத்தார்.
பிரம்மன் முகத்தில் பிறந்தவர்களின் கைப்பாவையானார்
பாப்பாத்திதான் நானென்று பறையறைந்தார்
பிரபாகரனைத் தூக்கிலிடுங்கள் என்றார்
பணத்தால் எதையும் செய்யமுடியும் என்றார்
பண்பாட்டுச் செழுமை இல்லாதவர்
ஆணவம், அலட்சியம், அகங்காரம் உள்ளவர்
இலட்சம் அரசு ஊழியர்களை தெருவில் நிறுத்தினார்
நாவலரை கழிந்த ரோமம் என்றவர்
எம்.ஜி.ஆரை இதயத்தில் இழிவாக வைத்திருந்தார்
யாரையும் மதிக்காத மனப்போக்கு உள்ளவர்
தன்னுடைய குலத்தாரைக் கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தினார்
சோபன் பாபுடன் இணைந்திருந்தேன் என்றார்
எம்.ஜி.ஆரோடு உடன்கட்டை ஏறுவேன் என்றார்
பொய் சொல்ல விதி நூற்றுப்பத்தை பயன்படுத்தினார்
தி.மு.கவின் சாதனைகளை தன்னுடையது என்றார்.
ஊர்கெடுத்தவரையெல்லாம் கட்சியின் உறுப்பினராக்கினார்
உதவாக்கரைகளை ஊராள வைத்தார்.
பினாமிகள் மூலம் ஊரார் நிலங்களை வளைத்தார்.
உருவாகி இருந்த வளங்களை உருக்குலைத்தார்.
உண்மை பேசுவதில்லை என்று உறுதியேற்றார்
ஊடகங்களை மிரட்டி ஊமையாக்கினார்.
அண்ணாவின் பெயரை மறைக்க முயன்றார்
தமிழை படிக்க விடாமல் தடுத்து நின்றார்
கமிஷன், கரெக்ஷன், கலெக்ஷனை வளர்த்தார்.
மக்களுக்காக போராடி சிறை செல்லாதவர்.
நிலத்தில் கால்பதிக்காத மேட்டுக்குடியைச் சார்ந்தவர்
          பெரியோர்களே! தாய்மார்களே! நடுநிலையாளர்களே! மாணவ, மாணவிகளே? தூய மனம் படைத்தவர்களே இலட்சிய வடிவான இளைஞர் உலகமே, எண்ணிப் பாருங்கள். நடந்த ஆட்சியின் நலிவுகளை நெஞ்சில் கொண்டு நல்ல சூழல்களை உருவாக்குங்கள். கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்டது போல் எம்.ஜி.ஆர். உருவாக்கி அகிமுக வில் அண்ணாவின் பெயர்கொண்ட கட்சியை ஆரிமாலா கைப்பற்றியதை நினைவில் நிறுத்தி வாக்களிக்கும் நேரத்தில் ஒளிதரும் உதயசூரியனில் முத்திரை இட்டு தமிழக நிலை உயர்த்தும் நிலைகாண வேண்டுகிறேன்.

தித்திக்கும் தி.மு.க

தித்திக்கும் தி.மு.க
அண்ணாவின் அறிவில் முகழ்த்தது தி.மு.க
அண்ணா வழி நடக்கும் அருமைத் தி.மு.க
அன்னைக் குலத்திற்கு நன்மைகள் செய்த தி.மு.க
அன்றாடம் உழைக்கும் உண்மைத் தி.மு.க
அன்றாடக் காய்ச்சிகளின் காவலன் தி.மு.க
அரிய பல சாதனைகளைப் படைத்தது தி.மு.க
அளப்பறிய திட்டங்களை செயல்படுத்திய தி.மு.க
கண்ணொளி வழங்கிய பார்வைதந்த தி.மு.க
கருணை இல்லங்களை உருவாக்கிய தி.மு.க
கல்வியில் பல உயர்வுகளை வழங்கிய தி.மு.க
கல்விக் கூடங்களை பெருக்கியது தி.மு.க
கருத்துப் புரட்சியை இங்கே ஏற்படுத்திய தி.மு.க
கல்லையும் கவிபாட வைத்த கலையரங்கு தி.மு.க
சரித்திர சாதனைகளைப் படைத்தது தி.மு.க
சமச்சீர் கல்வியைத் தந்து படிப்போரைக் காத்த தி.மு.க
சர்வாதிகாரிகளை வென்ற தி.மு.க
சங்கத் தமிழை போற்றி வளர்த்த தி.மு.க
சமயத்துவம் சுதந்திரம், சகோதரத்துவ தி.மு.க
தமிழ்நாடு பெயர்தந்து பெருமைப் படுத்திய தி.மு.க
தந்தை பெரியாரின் கொள்கையைப் பேசும் தி.மு.க
தன்மான அரசியலை நடத்திவரும் தி.மு.க
தமிழ்மொழியை இயக்கத்தின் இதயமாக்கிய தி.மு.க
தமிழர்களின் இன்றைய உயர்வுக்குரியது தி.மு.க
நல்லதைச் சொல்லி நன்மைகள் செய்யது தி.மு.க
நடுநிலையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற தி.மு.க
நல்லோரின் வாழ்த்துகளைப் பெற்ற தி.மு.க
நலிவுகளை நீக்கி நலம் செய்த தி.மு.க
நறுமணப்  பூவிதழையொத்த நல்ல கட்சி தி.மு.க
நன்றிகொல்லாத நாகரீக நிலை கொண்ட தி.மு.க
பண்பாடு போற்றுகின்ற பகுத்தறிவுத் தி.மு.க
பற்பல போராட்டங்களை நடத்துகின்ற தி.மு.க
பந்தபாச உணர்வோடு உறவாடிய தி.மு.க
பண முதலாளிகளை பந்தாடி வரலாறு படைதாத தி.மு.க
பக்தர்களைப் புண்படுத்தாத பண்புடைய தி.மு.க.
பயனுடைய செயல்களால் பரவசப் படுத்திய தி.மு.க
மறுமலர்ச்சியைப் படைத்து பயன்கண்ட தி.மு.க.
மங்காத வரலாறுகளைப் படைத்த கட்சி தி.மு.க
மணக்கும் கொள்கைகளை செயல்படுத்திய தி.மு.க
மதவாத ஆதிக்கத்தை மங்கச் செய்த தி.மு.க
மனித நேயத்தை மறக்காது செயல்படும் தி.மு.க
மறக்கமுடியாது - கூடாத மாபெரும் கட்சி தி.மு.க
வண்ண மலர்களின் வாசத்தைப் போன்றது தி.மு.க
வரலாற்றுச் செய்திகளை வாரித் தந்த தி.மு.க
வளம் தரும் தமிழ்ச் செல்வங்களை வழங்கிய தி.மு.க
வற்றாத வளங்களை தமிழர்களுக்குத் தந்த தி.மு.க
வருமையில்லாத நிலை ஏற்படுத்திய தி.மு.க
வங்கிகளை தேசிய மயமாக்க வலியுறுத்திய தி.மு.க
   அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! நடுநிலையாளர்களே! மாணவ, மாணவிகளே? தூய மனம் படைத்தவர்களே இலட்சிய வடிவான இளைஞர் உலகமே, எண்ணிப் பாருங்கள். உழைப்பவர்கள் யார், உதவாக்கரைகள் யார்? ஊருக்கு நல்லது செய்தவர்கள் யார்? என்பதை நெஞ்சில் நிறுத்தி, நிறுத்துப் பார்த்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்காலத்தை இருட்டறையில் அடைத்து வைத்த - வைக்கும் பொறுப்பற்றவரை ஒதுக்கி விட்டு உதசூரியனுக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்து தங்கள் மனத்தெளிவைக் காட்டுமாறு வேண்டுகிறேன்.

Wednesday 20 April 2016

தித்திக்கும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும் செழுமைமிகு தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையும்



தித்திக்கும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையும்
செழுமைமிகு தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையும்

பேரன்புடையீர், வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். 

     தி.மு.கவின் தொடக்க காலத்திலிருந்தே தென்னக நலன் பேணவும் தென்னிந்தியாவின் ஒருமையைக் காக்கவும் மூடநம்பிக்கையில் முற்றாக மூழ்கியிருந்த சமூகத்தின் மாசுகளைத் துடைக்கவும், தெளிந்த சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் தீர்வுதரும் கொள்கை, கோட்பாடு, இலட்சியங்களையும் உள்ளடக்கி அதன் வெற்றிக்காக செயல்திறத்துடன் எல்லாவகையான உத்திகளோடு இன்றுவரை உழைக்கின்ற உயர்வான இயக்கம் தி.மு.க.
    இனம், மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், மண்வாசனை சார்ந்த வரலாறு ஆகியவற்றின் செழுமைகளை சிந்தையில் கொண்டு உழைத்த தி.மு.க. இந்திய சூழலில் உள்ள நிலைகளையும் நெஞ்சில் கொண்டு இயங்கியது.
     தேர்தலே வேண்டாம் என்ற பெரியாரின் நிலையிலிருந்து விலகி, ஓர் அரசியல் அமைப்பாக உருவான நாள்முதலாய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது தி.மு.க. தேர்தலில் ஈடுபாடு காட்டாத 1952ல் கூட தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தேர்தலில் ஈடுபட பொதுமக்களின் அனுமதியை கோரி பெற்று, 1957ல் இருந்து புதுமையான தேர்தல் அறிக்கையை வெளிப்படுத்தி வியப்படைய வைத்தது தி.மு.க. 1967ல் இருந்து தேர்தல் அறிக்கை போலவே அரசின் நிதிநிலை அறிக்கையும் புதுமையையும் புரட்சியையும் செய்தது.
     ஓர் அரசியல் கட்சியின் நோக்கம், மக்களின் புறத்தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இயங்குவதுதான் இங்கு வழக்கமாக இருந்தது. உணவு, உடை, உறைவிட வசதிகளை ஏற்படுத்தித் தருவது அந்தக் கட்சிகளின் கடைமையென்று உணர்த்தப்பட்டது. ஆனால் அதைக்கூட செய்ய இயலாத கட்சிகள் இங்கே இயங்கின, இயங்கி வருகின்றன.
      இதில் தி.மு.க. திட்டமும் வலியுறுத்தலும் வழிகாட்டலும் அதன் ஆட்சியில் மக்களுக்கு பெருமளவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் இத்துடன் அறிவுக் கூடங்கள், பள்ளிக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், பலப்பல கலாசாலைகள் செய்ததை, செய்யவேண்டிதை எல்லாம் தன் இதயத்தில் கொண்டு இயங்கியது தி.மு.க.
மக்களை அணுகி தன் கொள்கை திட்டங்களை பதிவு செய்ய மாலைநேர அரசியல் பேச்சு மேடைகள், மாலை நேர கல்லூரியாக மாவட்ட மாநில மாநாடுகள் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பல்வேறு பாடத்திட்டங்களைப்போல் இன்னும் சொல்வதென்றால் அந்தக் கலைக்கூடங்களையும் தாண்டிய ஆய்வரங்கங்களாக செயல்பட்டது.
திரைப்படங்கள், ஏடுகள், இதழ்கள், நூல்கள், கலைக்குழுக்களின் வழியாக பல்சுவைச் செய்திகள் மக்களிடம் பதிவு செய்யப்பட்டு பல்வேறு அணிகளின் வழியாக துறைதோறும் துறைதோறும் சொல்லப்படவேண்டி தூய நிலைகள் பயிர் செய்யப்பட்டது.
       நூறு ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்ட தமிழ்ச் செழுமைகளை அறிந்து உள்வாங்கி விதையைப் பயிராக்க, நீர் வார்தது உரமிட்டு வளர்த்ததில் தி.மு.க வின் உழைப்பு உயர்வானது, உன்னதமானது. தமிழ் தமிழர்களின் நலனுக்காக தி.மு.க சொன்னதையும் செய்ததையும் வேறு யாராலும் சொல்ல முடியாது. செய்யவும் இயலாது.
பேச்சாலும், எழுத்தாலும், உழைப்பாலும், போராட்டத் தியாகத்தாலும் இன்றைய தமிழர்களின் எல்லாவகை உயர்வுக்கும் சான்றாக, சாட்சியாக, காட்சியாக இருப்பது தி.மு.க ஒன்றுதான்.
       குறிப்பாக மேற்கண்டவற்றோடு அந்த இயக்கதின் தேர்தல் அறிக்கையும் தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையும் எண்ணிப்பார்க்க வேண்டிய இதயத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
     அறிவுசார்ந்த, ஆய்வு செறிந்த, விஞ்ஞான உணர்வு நிறைந்த அந்த அறிக்கைகளை தி.மு.க வெளியிட்டதில் 75 விழுக்காடு கலைஞர் தலைமையில் வெளியிட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்.
      தித்திக்கும் தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை கழக அரசின் நிதிநிலை அறிக்கைகளை பெரியார் அண்ணா ஆகியோரின் உணர்வுகளைத் தாங்கி அவர்களின் அடியொற்றி நடக்கும் தலைவர் கலைஞர் வெளியிட்டார்.
       சொன்னதைச் செய்தார், இன்று சொல்வதையும் செய்வார். அருமைசார்ந்த அந்த அறிக்கைகளின் செயல்பாட்டு வடிவமே மூணே முக்கால் கோடித் தமிழர்கள் இன்று ஏழரைக் கோடியான நிலையிலும் வாழ்க்கை நிலை பலநூறு மடங்கு வளங்களை வாரித் தந்திருக்கிறது என்பதை கற்றறிந்தோர், கலைபடித்தோர், நடுநிலையாளர்கள், நல்லறிவாளர்கள், ஏடுகள், இதழ்கள், ஊடகங்கள், பல்சுவை ஆற்றலாளர்கள் மக்களிடம் இந்த இருவகையான அறிக்கைகளை எடுத்துக்காட்டி இன்று இருக்கின்ற எல்லாவகை உயர்வுக்கும் காரணம் இதுவென்றே உணர்த்த வேண்டியது கடமையாகும் என்று வலியுறுத்துகின்றோம்.

Wednesday 6 April 2016

கடிதம்

பேரன்புடையீர், வணக்கம், நலம்சூழ வாழ்த்துக்கள். கடந்து போன நாட்களில் மூன்று கடிதங்களில், பல்வேறு செய்திகளைத் தெரிவித்திருந்தேன். தங்கள் நினைவில் தங்கி நிற்கும் என்று கருதுகிறேன்.
நல்ல நோக்கங்களை முன்வைத்து கடின உழைப்பினால், தென்னிந்தியச் சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்திருக்கின்ற அய்வர் அணி. சங்கக் கட்டிடத்திற்காக நிதி சேர்க்கும் முயற்சியின் தொடக்கமாக சன் டிவியில் தங்களின் திரைக்குடும்பத்தின் சங்கமமாக ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்றுக் களிப்படைந்தேன்.
திரையில் மின்னிய பற்பல தாரகைகள் பலரையும் நீண்ட இடைவெளிக்குப் பின் முதிய நிலையில் ஒரே இடத்தில் பார்க்கின்ற வாய்ப்பு இரசிகர்களையும் பரவசமடைய செய்திருக்கும்.
திரையுலகைத் தித்திக்க வைத்த தி.மு.கவிற்கு பரப்புரை செய்ததற்காக யாருக்கோ அஞ்சி, நல்ல நடிகர் தம்பி வடிவேலுவை திரையுலகம் ஒதுக்கி வைத்தது. அந்த வடிவேலை முன்னிருத்தி நிகழ்ச்சியை செழுமையுற முழுமையுற வைத்த தங்களுக்கு என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விந்தியத்தின் விரிநிலமாய் விளங்கி செழுமைகொண்ட பண்பாட்டுத் தளமாகவும் விளங்கிய மண் தென்னிந்தியா. பண்பாட்டில் நுழைந்த ஆரியச் சிந்தனை அழுக்குகளையும் அவலங்களையும் மாற்ற முயன்ற தமிழ் அறங்களை மூளையில் முடக்கி வைத்துவிட்டு மூளியான தன் முகத்தை ஒப்பனைகள் ஆரியம் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி ஆளுமை செய்தது. அதில் அதிகம் தென்னிந்திய திரையுலகம் அடிமைப் பட்டுக் கிடந்த காலத்தில்தான் பேரறிஞர் அண்ணாவின் திரையுலக நுழைவு சமூக, சமத்துவ தரவுகளை ஆய்வு செய்து மக்களின் அகத்தைத் தூய்மைசெய்யும் வேலைக்காரி எனும் சமூகப் படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இன்றுவரை ஒளிர்கின்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருந்தது என்பதை தாங்களும் தங்கள் குழுவினரும் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.
நான் அறிந்தவரை கலைவாணர் அவர்களே நடிகர் சங்கத்திற்கான நிலத்தை வாங்கித் தந்து நல்லதொரு வளநிலைக்கு அடித்தளமிட்டவர். அதற்குப் பின் தி.மு.க வில் உழைத்து உயர்ந்தவர்களின் முயற்சியே இன்றைய ஏற்றநிலைக்கு காரணமாகி மகிழ வைத்திருக்கிறது.
கட்டிட வரைபடத்தைக் காட்டி, நடிகர்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, இரசிகர்களின் மனங்களிலும் மகிழ்ச்சியைத் தூவியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். இதில் அழுத்தமான ஒன்றை நெஞ்சில் வைக்க வேண்டுகிறேன். சங்கம் மேன்மைக்கு பெரிதும் உழைத்து பாடுபட்ட, மெரிலேண்ட் திரு. கே. சுப்பிரமணியம் அவர்கள், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், திரு. எம்.ஜி.ஆர். அவர்கள், திரு. சிவாஜிகணேசன் அவர்கள், திரு. எஸ்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் உள்ளிட்டவர்களை சிறப்பான முறையில் நினைவு படுத்த வேண்டுகிறேன்.
கட்டிட வரைபடத்தில் நான் ஏற்கனவே வேண்டியிருந்த நூலகம் ஒன்று இல்லையென்பது நினைவுகூறத் தக்கதாகும். வீட்டுக்கொரு நூலகம் என்ற அண்ணாவின் நினைவில் ஒரு நூலகத்தை நிறுவலாம். ஏனெனில் செலவு மிகுதியாகும் புராண, இதிகாச, சரித்திரப் படங்கள் வந்த நாட்களில் செலவு குறைவான அதிலும் புதுமையும், புரட்சியும் பூக்க வைக்கும் சமூக திரைப்படத்தின் வெற்றித் தொடக்கமாக வேலைக்காரியைத் தந்தவர் அண்ணா அவர்கள்.
மறைந்த திரைத்தாரகைகளை வடிவேலு, மனோபாலா, ரோகிணி மற்றும் திறமைமிக்கவர்களைக் கொண்டு நினைவுபடுத்தி எல்லா நெஞ்சிலும் நினைவுச் செழுமையை உருவாக்க வேண்டுகிறேன். இறுதியாக ஒன்று எளிமையுடன் இதயத்தை இனிப்பாக்கி வைத்திருக்கும் தாங்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்கள் தொலைபேசி செய்திகளுக்கு தங்கள் உதவியாளர் மூலம் தொலைபேசியிலோ, ஓர் அய்ம்பது பைசா அஞ்சல் அட்டையிலோ, கிடைத்தது நன்றி தெரிவிக்கின்ற நாட்டில் இல்லாத நாகரிக நிலை ஒன்றை கடைப்பிடித்து உள்ளத்தை உவகையில் ஊஞ்சலாட வைக்க வேண்டுகிறேன். தோழர் என விளிக்கும் தங்களின் தூய சமத்துவ உணர்வோடு தோழமை கொண்டதால் இதைச் சொல்ல நினைத்தேன் வேறொன்றுமில்லை.
நன்றி!
இவண்
பெறுநர்,
நடிகர் நாசர் அவர்கள்,
தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்,
போக்ரோடு, அபிபுல்லா சாலை, தியாகராய நகர், சென்னை.