Wednesday 23 May 2018

சி.சுப்ரமணியத்தின் நூல்கள்.

இந்தியாவின் மற்றும் தமிழகத்தின் நிதியமைச்சர் திரு சி.சுப்ரமணியம்  நான்சென்ற சில நாடுகள்
உலகம் சுற்றினேன் என்றபயண நூல்களும்  தமிழால் முடியும் என்ற தமிழ்மொழியின் ஆற்றல் திறன்பற்றிய சிறந்த நூல் ஒன்றையும் எழுதி வாசிப்போரின் உள்ளம்மகிழும் வகையில்  நம்மிடையே வாழ்ந்தார்.

முதலில் எழுதிய. நான் சென்ற சிலநாடுகள் என்ற நூலில் கிழக்காசியா நாடுகளிலும் அய்ரோப்பாவில் சில நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த அவர் அந்தநாடுகளின் வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றின்திட்டங்களைஇந்தியாவுக்கு கொண்டுவருவோம்  என்று உறுதியளித்தார்.

தமிழால் முடியும் என்ற நூலில் தமிழினௌ ஆற்றலை திறமையை வியந்து போற்றி தமிழை அரசின் ஆட்சிமொழியாக உயர்த்தி அரசு அலுவலகங்ளில் பயன்படசெய்வோம். அன்று தமிழுக்கு எதிராக திகழ்ந்த காங்கிரசின் அமைச்சர் ஒருவர் தமிழை பெருமைப்படுத்தியதை வியந்து மகிழ்ந்தது ஏடுகள்.

Tuesday 15 May 2018

எழுத்தாளர் சுஜாதா.

கனிணிப்பொறியரான எழுத்தாளர் திருச்சி ரெங்கராசன் என்ற சுஜாதா தலைமைசசெயலகம் என்ற நூலோடு மேலும் பல நூல்களை எழுதிப்புகழ் பெற்றவர்.

அந்த அருமையாளர் கூறுகிறார் கனிணிக்கு முழுவதும் ஏற்றமொழி பொருந்துகின்ற மொழி தமிழ் ஒன்றுதான் அந்தமொழிக்குத்தான் இடம்இருந்துகொண்டே இருக்கிறது.

அதன் எழுத்தின் அமைப்பு அத்துணை சிறப்பானது மட்டுமல்லாமல் இன்றும் முதுமைகொள்ளாத எழிலும் இளமையும் கொண்டதாக திகழுவது  நம்மை வியக்கவைக்கிறது.

தமிழ் எழுத்தில் சில திருத்தங்களை செய்துவிட்டால் அந்தமொழி எல்லாத்துறைகளுக்கு பொருந்தும் நிலை உலகோரை மகிழ்விப்பது உறுதி.கனிணியில் கையாள்வதற்கு எளிதாகவும் உச்சரிக்க சீரானதாகவும் இருக்கும் என்கிறார் இனிய எழுத்தாள சுஜாதா அவர்கள்.

அவர் சொல்வதின்அடிப்படையில் தமிழ் ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் பொறியியல் வல்லுநர்கள் பொருள்வளம்படைத்த தமிழர்கள் அனைவரும் கூட்டாக இந்த அரும்பணியில் ஈடுபாடுகாட்டினால் அன்னைத்தமிழ் அகிலத்தின் மொழியாக அழகுடன் திகழும்.

Monday 14 May 2018

கலைஞர் சகாப்தம்.

பெரியார் ஓருசகாப்தம்காலகட்டம் என்றார் அண்ணா. அது கலைஞருக்கும் பொருந்தும்.
பெரியார் ஓர் அறுபதாண்டுகாலம் பொதுவாழ்வில் உழைத்தார்.
அதுபோலவே கலைஞரும் அறுபதாண்டுகள்  சென்ற ஆண்டுவரை தன் உழைப்பை நல்கினார்.

தந்தை பெரியார் போராட்டக்களத்தில் நின்று போராடி கராக்கிரக அதாவது சிறைக்கொட்டடியில் வாடினார்.

அதைப்போலவே கலைஞரும் தந்தையைப்பின்பற்றி பொதுச்சிறையில் மட்டுமல்லாது ததனிமைச்சிறையிலும் வதிந்தார். திராவிட இயக்கத்தை எதிரிகளின் சூழ்ச்சி வளையத்திலிருது கலைஞர் பாதுகாத்தது கூடுதல் நிலையாகும்.

பெரியாரின் இனமான தன்மான உணர்வுகளையும் அண்ணாவின் அரசியல் மக்களாட்சி மாண்புகளையும் நிலைநிறுத்த கலைஞர் மிகக்கடுமையாக போராடினார்.