Tuesday 15 May 2018

எழுத்தாளர் சுஜாதா.

கனிணிப்பொறியரான எழுத்தாளர் திருச்சி ரெங்கராசன் என்ற சுஜாதா தலைமைசசெயலகம் என்ற நூலோடு மேலும் பல நூல்களை எழுதிப்புகழ் பெற்றவர்.

அந்த அருமையாளர் கூறுகிறார் கனிணிக்கு முழுவதும் ஏற்றமொழி பொருந்துகின்ற மொழி தமிழ் ஒன்றுதான் அந்தமொழிக்குத்தான் இடம்இருந்துகொண்டே இருக்கிறது.

அதன் எழுத்தின் அமைப்பு அத்துணை சிறப்பானது மட்டுமல்லாமல் இன்றும் முதுமைகொள்ளாத எழிலும் இளமையும் கொண்டதாக திகழுவது  நம்மை வியக்கவைக்கிறது.

தமிழ் எழுத்தில் சில திருத்தங்களை செய்துவிட்டால் அந்தமொழி எல்லாத்துறைகளுக்கு பொருந்தும் நிலை உலகோரை மகிழ்விப்பது உறுதி.கனிணியில் கையாள்வதற்கு எளிதாகவும் உச்சரிக்க சீரானதாகவும் இருக்கும் என்கிறார் இனிய எழுத்தாள சுஜாதா அவர்கள்.

அவர் சொல்வதின்அடிப்படையில் தமிழ் ஆய்வாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் பொறியியல் வல்லுநர்கள் பொருள்வளம்படைத்த தமிழர்கள் அனைவரும் கூட்டாக இந்த அரும்பணியில் ஈடுபாடுகாட்டினால் அன்னைத்தமிழ் அகிலத்தின் மொழியாக அழகுடன் திகழும்.

No comments:

Post a Comment