Tuesday 29 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

5. தலை சிறந்து வாழ்க!
எழிலே! எங்கள் உயிரே!
மாண்புகள் சிறந்திட மலர்ந்த விழியே!
மாசுகள் மறைந்திட சுடரும் ஒளியே!
வளர்ந்திட நீ சிறந்திட வாழ்த்துகள்!
நான்கு கிராம் எடையிலிருந்தே
நலன் காக்கும் கடமையிலே
நாளெல்லாம் வினைபுரிந்தார்
நல்லோராம் உன் தாய், தந்தை!
வீரர் வழி வந்தவர்கள்
விவேகம் சிறந்தவர்கள்
கற்றறிந்த கலை மலர்கள்!
கவிதை மனம் கொண்ட
உன் அன்னை, தந்தை!
அன்பு நெறி உரைப்பார்!
அறிவின் தொகை சொல்வார்!
ஆற்றலை வளர்த்திடுவார்!
ஆசை பொங்க உனை வளர்ப்பார்!
இயல், இசை கலை தருவார்!
இனிய தமிழ் மொழி உரைப்பார்!
இன்னல்கள் தீர்க்கும் வழி
எதுவென்று எடுத்துரைப்பார்!
சீர்தரும் செழுமை சொல்வார்!
சிந்தனையின் நெறி காட்டுவார்!
சிறுமையை அழித்தொழிக்கும்
சித்தாந்த முறை வழங்குவார்!
உலகத்தைக் காட்டிடுவார்!
உண்மையின் பொருள் உரைப்பார்!
ஊருக்கு உழைத்தோரின்
உள்ளத்தைப் படம் பிடிப்பார்!
அடிமை விலங்கொடித்த
ஆப்ரகாம் லிங்கனையும்!
எப்போதும் பேசுகின்ற
ஏதன்ஸ் சாக்ரடிசையும்!
வாளின் கூர்மையை விட
பேனாவின் முனை கூர்மை என்ற
வைர நெஞ்சம் கொண்ட
வால்டேர் பெருமகனையும்!
சமத்துவம், சுதந்திரம்,
சகோதரத்துவம் பெற
சங்க நாதம் எழுப்பிய
சான்றோன் ரூசோவையும்!
துருக்கியைத் தூய்மை செய்ய
துணிந்து செயல் புரிந்த
முகமது கமால் பாட்சாவையும்
முன்னிறுத்தி பதிய வைப்பார்!
தாய்த் தமிழ்ச்செல்வியும்!
தந்தை உதயமாறனும்!
மாசற்ற மனம் படைத்த - போர்
மறவர் குலத் தோன்றல்கள்!
கல்லூரி கண்டவர்கள்!
கலைப் பாடம் கற்றவர்கள்!
வளம் சிறக்க வாழ்வதற்கு
வழிவகை தெரிந்தவர்கள்!
உலகின் தலைமகனாக
உனை வளர்த்து நிலையுயர்த்த
உழைப்பார்கள், மகிழ்வார்கள்!
உண்மை நெஞ்சம் கொண்டவர்கள்!
கிரேக்கத்தின் கீர்த்தி சொல்வார்!
கிளித் தமிழில் வாழ்த்து சொல்வார்!
கிஞ்சிற்றும் அச்சம் கொள்ளார்!
கிழக்கில் தோன்றும் வெளிச்சம் போல!
புரட்சிகளுக்கு வித்திட்ட
புதுமைக் கவிஞன் செல்லியின்!
புகழ்மிக்க கவிதை சொல்வார்!
புத்துலகை நீ படைத்தளிக்க!
நாடு, மொழி, இனம் என்று
நாகரீக நிலை என்று
நல்லோரின் பாதையிலே
நடைபோடச் செய்திடுவார்!
ஏடென்றும், இதழென்றும்
இன்னும் பல நூலென்றும்
நெஞ்சத்தைப் பண்படுத்த
நீட்டோலை தீட்டிடுவார்!
காடு, மலை, கானக வெளிகளில்
கானம்பாடும் புள்ளினங்கள்!
கண் சிமிட்டும் பூ மலர்கள்!
இசை பாடும் வண்டினங்கள்
இனிய காட்சி காட்டிடுவார்!
மழையருவி தரும் அழகு
மாலை நேரப் பேரழகு
சிலை காட்டும் சீரழகு
செம்மலரே உன்னில் பதிப்பார்!
கொஞ்சு தமிழ்க் கோலச் செல்வனே!
கொள்கைவழிச் சீலனே!
அறிவின் வழி நடக்கும் அன்னை, தந்தை
அனைத்தையும் அறிமுகப்படுத்துவர்!
அறிவியல் அறிஞர்கள்,
அரசியல் மேதைகள்,
ஆன்றோர், சான்றோர்,
அறவழிச் செல்வர்கள்,
ஆற்றல்மிகு மனிதர்கள்,
இயல், இசை வேந்தர்கள்
எழிற்கலை ஆசிரியர்கள்
இலட்சிய வீரர்கள்,
இனிய உலகைப் படைத்த ஏந்தல்கள்,
இனிவரும் உலகை ஆள்பவர்கள்,
எல்லோராக் குகைச் சிற்பங்கள்,
ஏற்றம் தரும் விஞ்ஞானிகள்
எழுத்துலக வேந்தர்கள்
இனிய சொல்லேரு உழவர்கள்
கலை வடிவான காவிய மன்னர்கள்,
காலத்தை வென்ற கவிதைக் குயில்கள்,
காற்றையும் விஞ்சும் கற்பனையாளர்கள்,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மிக்கவர்கள்,
கவிச்சோலை அமைத்தவர்கள்
கடல்களில் எழில் கலங்கள்
சமைத்தவர்கள்
வானில் வழி கண்டு வாகனம்
விட்டவர்கள்,
வாயுக்களை வகைப்படுத்தி வளம்
கண்டவர்கள்
வண்ணமிகு எண்ணங்களை வாரி
வழங்கியவர்கள்
வற்றாத பேரறிவை, உழைப்பை
வழங்கிய வள்ளல்கள்,
புதுமைச் சித்தர்கள்,
புகழ்கொடி வேந்தர்கள்,
ரோமாபுரிச் சீசரையும்,
பாம்பே சல்லா அந்தோணியும்
பேராளன், அழகுப்பேச்சாளன்,
அரசியல் நெறி வழங்கிய சிசரோவும்!
நாடு செழிக்க நாடகங்கள் தந்தவன்,
ஏடு நிறைய எழுதிக் குவித்தவன்,
ஆங்கில மக்களின் அன்பைப் பெற்றவன்,
அழியாத புகழ்வாணன்,
ஆற்றல்நிறை சேக்ஸ்பியரும்!
ஆதிகால ஆய்வாளன் அறிஞன்
ஆற்றலின் வடிவம் ஆர்க்கிமிடீஸ்!
அரசியல், கல்வி மேம்பட
வழி கண்டு வடிவம் தந்த
கீர்த்திமிகு கிரேக்கத்து பிளேட்டோ!
அரசர்களின் அரசியல் வழிகாட்டி,
ஆற்றல்நிறை அலெக்சாண்டரின் ஆசான்,
ஆய்வுக் கருத்துக்களை அள்ளி வழங்கியவன்,
அரிஸ்ட்டாட்டில் பெருமகனையும்!
இதயத்திற்கு அச்சமூட்டும் அரசியல் நெறிசொன்ன
இத்தாலிய மாக்கியவல்லி!
எகிப்திய பாரோ மன்னர்கள்!
எழிலரசி கிளியோபட்ரோ!
இன்னும் பல மாமனிதர்களை உன்
இதயத்தில் பதிப்பார்கள்!
எழிலே உன்னை வளர்ப்பார்கள்!
மதம் கண்ட மகான்கள்
மதம் கொன்ற மகான்கள்
மாசற்ற மேதைகளையும்
மனதிலே பதிய வைப்பார்கள்!
வேலெடுக்கும் மரபினர்
வீரம் செறிந்த மாண்பினர்
வெற்றிகளைக் குவித்தவர்களை
விளக்கி உன்னில் பதிய வைப்பர்!
காடு கொன்று கழனிகளாக்கி
ஏர் கொண்டு நிலம் உழுது
வேளாண்மை விளை பெருக்கிய
வித்தகர்களை பதிவு செய்வர்!
ஏர் கண்ட சீர் மனிதன்,
உருளை கண்ட உயர் அறிஞன்,
உலகம் வாழ உயிர் தந்தவன்,
உண்மையாளர்களை உன்னில் பதிப்பர்!
நாடு கண்டு நல்லறம் செய்தவன்!
ஏடு கண்டு ஏற்றம்பெற உழைத்தவன்!
நெறிகண்டு வழி கண்ட நேர்மையாளர்
நெஞ்சில் வஞ்சமில்லா பாசம் உள்ளவர்!
வகை பிரித்து வலைத்தளம் போல் உன்
வாஞ்சைமிகு உள்ளத்தில் பதிய வைப்பர்!
உலகம் உருண்டை என்றும்,
உருண்டு கொண்டே இருக்கும் என்றும்
உண்மை அறிவை உனக்குரைப்பர்!
உலகத்தைப் புரிய வைப்பர்!
புரட்சிக்குப் பூபாளம் இசைத்தோர்
புதுமைக்கு பூக்கோலம் போட்டோர்
புத்துலகம் காண்பதற்கு உழைத்தவர்கள்
புகழ்வாழ்வு கண்டவரை புரிய வைப்பர்!
சிந்திக்கும் மரபில் வந்த செம்மலரே!
சிறு வயது முடியும் முன்னே செந்தமிழ் பயில்வாய்
கணிதமும், தாய் மொழியும்
கண்போலக் காத்திடு!
கல்விக் கூட வாழ்வை களிப்புடன் ஏற்றிடு!
தமிழரின் படைப்புகளை
தரணி போற்றும் எண்ணங்களை
தளிரே, எழிலே உன்னில் பதிய வைப்பர்!
அய்வகை நிலம் பிரித்து
அதன் ஆற்றலை வகுத்தளித்து
இயற்கையின் இயல்பு சொல்லி
இலக்கணம் எழுதிக் காட்டும்
தோன்று புகழ் தொல்காப்பியம்
தொடர்ந்து வந்த சங்கத் தமிழ் தரும்
நற்றினை, நல்ல குறுந்தொகை,
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
கற்றோர் ஏத்தும் கலித் தொகை
அய்ங்குறுநூறு, அகம், புறம் என
எட்டுத் தொகை எழிலும்
பட்டிணப்பாலை, நெடுநல்வாடை,
மதுரைக்காஞ்சி, முல்லைப் பாட்டு,
குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம்,
பெரும்பாணாற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை,
திருமுருகாற்றுப்படை,
கூத்தராற்றுப்படை
பத்துப்பாட்டின் பயன் அறியவும்!
எப்பொருளிலும் மெய்ப்பொருள்
காணத் தூண்டும் திருக்குறள்,
சிலப்பதிகாரம், மணிமேகலை,
சீவகசிந்தாமணி, குண்டலகேசி,
வளையாபதி என வாழும்
அய்ம்பெருங் காப்பியங்கள்
அடுத்தடுத்து வந்த அற்புத
இலக்கியங்கள், எண்ண வரைவுகள்,
நன்னூல் இலக்கணமும்,
நாலடியார் கவிதைகளும்,
புறப்பொருள் வெண்பாவும்,
புதுப்பொலிவாய் அடர்ந்து வந்த
புலவர்களின் கவிதைச் சாரல்
இதயத்தில் பதிய வைத்து
எழுச்சியூட்டி வளர்த்திடுவர்!
இலக்கிய உலகு காட்டிடுவர்!
புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடரும்....

Monday 28 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

4. எழில் சிறந்து வாழ்க!
உதயக் கதிர் விரிந்தால் உலக
உறக்கம் கலையும்!
உண்மை சிறந்து வாழ்ந்தால் உலகில் உயர்வு விளையும்!
அன்பும், அருளும் சுரந்தால்
அது அன்னை மனமாகும்!
தன்னை வென்று தகைமை கொண்டால் தரணி சிறந்து நிற்கும்!
உதயாவின் உயிரும் உண்மைத் தமிழ்ச் செல்வியின் உயிரும்!
இணைந்து வந்த எங்கள் குல விளக்கே!
எளிமை, இனிமை, இதய வலிமை கொண்ட ஏந்தலே!
எங்கும் தமிழ் சிறக்க இனிமைகள் சுரக்க
எழுகதிராய் எழுந்து வந்த எங்கள் எழிலே!
வழிவழி மறத்தமிழர் மாண்பு காக்க வந்த
மாப்புகழே! மணத்தமிழே! வருக! வருக!!
இனம், மொழி, பண்பாடு, இனிய வரலாறு
இமயமாய் வளர்ந்திடவே, சிறந்திடவே
வந்துதித்த இளந்தளிரே பெரும் புகழே!
உதயனின் இன்னொரு வடிவமாய் வந்த
எழில் என்று பெயர் கொண்ட புலிப்போத்தே!
சீயத்தின் குருளையே சிறந்து நீ வாழ்க!
உயர வளர்ந்திடுவாய், ஊர் மகிழ வாழ்த்திடுவாய்!
உலகை அறிந்து நடக்கும் உயர் அறிவு பெற்றிடுவாய்!
கலைகள் அறிந்திடுவாய்! கல்வியில் சிறந்திடுவாய்!
நல்லோரின் பார்வையிலே நாளும் நடந்திடுவாய்!
ஏழையின் உயர்வுக்கு எந்நாளும் உழைத்திடுவாய்!
ஏற்றம் கண்டிடுவாய்! எழில் வாழ்வைப் பெற்றிடுவாய்!
தமிழினம், தமிழ் மொழி, தமிழர் வாழ்வு சிறந்திட பணிபுரிவாய்!
அருந்தமிழர் நிலை உயர ஆற்றலைக் குவித்திடுவாய்!
அன்னைத் தமிழ் சிறந்திடவே ஆன மட்டும் நீ உழைப்பாய்!
5. தலை சிறந்து வாழ்க!
எழிலே! எங்கள் உயிரே!
மாண்புகள் சிறந்திட மலர்ந்த விழியே!
மாசுகள் மறைந்திட சுடரும் ஒளியே!
வளர்ந்திட நீ சிறந்திட வாழ்த்துகள்!
நான்கு கிராம் எடையிலிருந்தே
நலன் காக்கும் கடமையிலே
நாளெல்லாம் வினைபுரிந்தார்
நல்லோராம் உன் தாய், தந்தை!
வீரர் வழி வந்தவர்கள்
விவேகம் சிறந்தவர்கள்
கற்றறிந்த கலை மலர்கள்!
கவிதை மனம் கொண்ட
உன் அன்னை, தந்தை!
அன்பு நெறி உரைப்பார்!
அறிவின் தொகை சொல்வார்!
ஆற்றலை வளர்த்திடுவார்!
ஆசை பொங்க உனை வளர்ப்பார்!
இயல், இசை கலை தருவார்!
இனிய தமிழ் மொழி உரைப்பார்!
இன்னல்கள் தீர்க்கும் வழி
எதுவென்று எடுத்துரைப்பார்!
சீர்தரும் செழுமை சொல்வார்!
சிந்தனையின் நெறி காட்டுவார்!
சிறுமையை அழித்தொழிக்கும்
சித்தாந்த முறை வழங்குவார்!
உலகத்தைக் காட்டிடுவார்!
உண்மையின் பொருள் உரைப்பார்!
ஊருக்கு உழைத்தோரின்
உள்ளத்தைப் படம் பிடிப்பார்!
புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடரும்.....

Saturday 26 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

2. வளம் குவிந்து வாழ்க!
வண்ண நிலவாய் முகிழ்த்து,
வைரமுத்தாய் ஒளிர்ந்து,
வந்துதித்தாய் பொன்மலரே!
வரலாற்றுப் பேரொளியாய்!
வாசமிகு பூங்காற்றாய்,
வானத்து பெருவெளியாய்,
வையத்திருவிளக்காய்,
வருக! வாழ்க! பல்லாண்டு!
இனிக்கும் பொருளாய்,
இலக்கியத் திருவாய்,
இதயத்தில் நிறைந்தாய்,
இனிமைகண்டு வாழ்க!
வீரத்தின் விளைநிலமாய்,
சீர்நிறைந்து செழுமை கொண்டு,
சிந்தனைச் சுரங்கமாய்
செந்தமிழாய் வாழ்க சிறந்து!
எந்நாளும் புகழ் சிறக்க
ஏறுபோல் நடை நடந்து,
எத்திசையும் வாழ்த்தி நிற்க,
எழிற்கோவே வாழ்க! வெல்க
வழி வழி மறப்புகழ் சிறக்க,
வள்ளுவன் குறள் வழி நடக்க,
வானம்பாடி போல் பறந்து
கானம்பாடி வாழ்க! வாழ்க!
வளமிகு நிலையடைந்து
வரலாறு பேசுகின்ற
வாழ்வினை பெற்றிடுவாய

3. வரலாறாகி வாழ்க!
வாழ்க! வாழ்க!
வரலாறாகி வாழ்க!
எழில் சிறந்து வாழ்க!
தலைசிறந்து வாழ்க!
இயற்கையின் இயக்கம்!
ஒளியின் பேராற்றல்!
காற்றின் பயன்பாடு!
புவியின் புகழ் பாடுவோம்!
விண்வெளியில் விளையாடு!
ஆற்று வழி அறிந்திடுவோம்!
கண்டங்களில் கண் பதிப்போம்!
அரசுகளின் நிலை அறிவோம்!
கவிதைகள் காவியங்கள்!
மொழிகள்!
வரலாறு!
மனித இனங்கள்!
பதினாறும் பெற்று பெருவாழ்வுப்
பேறு பெற வாழ்த்துகின்ற
பேரெழில் வழக்கம் தமிழில் உண்டு!
பதினாறு தலைப்புகளில்
பல்வேறு செய்தி சொன்னேன்! மேலும்
பைந்தமிழில் வாழ்த்து சொன்னேன்!
பாராட்டி மகிழ்வடைந்தேன்!
நானென்ன, நாட்டில் உள்ள
யார் சொன்ன சொல்லானாலும்
எவர் மொழிந்த கருத்தானாலும் உன்
இயல்பான பகுத்தறிவால்
எண்ணிப் பார்?
எதையும் ஏன்? எதற்கு? என்று கேள்?
மெய்ப்பொருள் காணும் மேதமையைப் பெற்று
மேதினியில் சிறந்திட வாழ்த்துகிறேன்!
வளம் சிறக்க வாழ்க வாழ்க!
எங்கெங்கும் புகழ் மணம் வீச!
எழிலெல்லாம் தழுவி நிற்க!
இலக்கிய பேரழகாய்
எந்நாளும் வாழ்க! வாழ்க!
புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடரும்....

Friday 25 November 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர்

புதிய தலைமுறை புத்தெழில் மலர்
(இது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது)

முன்னுரை
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் அவர்கள்.
ஏதுமற்ற ஏழைக்குடியில் பிறந்து உழைப்பால் சற்று உயர்ந்து என் இரு பிள்ளைகளான உதயமாறன், இதயமாறன் ஆகிய இருவரையும் கலைப்படிப்பு வரை படிக்க வைத்தது மட்டுமல்லாது நான் இதயத்தில் கொண்ட திராவிட இயக்கச் சிந்தனைகளையும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேருழைப்பையும் பெருமை, பெருமதிப்பையும் பதிய வைத்தேன்.
அதுபோலவே அறிவார்ந்த இந்த இனமானம் இயக்கம் எனக்குள் பதிந்ததையெல்லாம் உதயமாறன் தமிழ்ச் செல்வியின் அருமைச் செல்வன் அதாவது எனது பேரன் எழிலுக்கும், இதயமாறன் - மைதிலியின் அன்புச் செல்வி அதாவது எனது பேத்தி மதிமலருக்கும் பதிய வைக்கும் முயற்சிதான் இந்த இனிய நூலாகும்.
இது எனது பேரன் பேத்திக்கானது மட்டுமல்ல. இந்த நூலைப் படிப்போர் தங்கள் பிள்ளைகளுக்கும் தங்களது பேரன் பேத்திகளுக்கும் கூறியதாகக் கருதிச் கொள்ளலாம். ஏனெனில் வளரும் தலைமுறைகளுக்குத் தேவையான செய்திகளெல்லாம் இதில் இருக்கிறது என்று கருதுகிறேன். புதிய தலைமுறைப் புத்தெழில் மலர் உங்கள் வழித் தலைமுறையிலும் பகுத்தறிவு மலர்கள் உருவாக வாழ்த்துகிறேன்.

உறவுகளின் வாழ்த்துகள்
வளரும் இமயமாய் வாழ்ந்திட வாழ்த்துவோம்!
அன்பின் எழிலே மதிமலரே - உயிரே எழுக!
இனிதாய் உணர்வை அறிவைப் பெறுக!
கனிவாய் பணிவாய் துணிவாய் ஒளிர்க!
அறமாய் பொருளாய் இன்பமாய் அமைக!
இயலாய் இசையாய் கலையாய் வாழ்க!
எண்ணங்கள் வண்ணமாய் வளர்ந்திடுக!
ஏற்றம் தரும் செயல்களை ஏற்றிடுக!
துன்பங்களை துடைத்திடும் தொண்டுபுரிக!
தூய்மையும் வாய்மையும் தோழமை கொள்க!
எளிமையும் வலிமையும் இதயத்தில் ஓங்குக!
ஏற்றத்தையும் வளர்மாற்றத்தையும் போற்றிடுக!
இலட்சியம் குறிக்கோளை குருதியில் பயிரிடுக!
நலம் பலவாய் பெருகிவரும் வாழ்முறையை அறிந்திடுக!
வளம் குவிக்கும் நல்முறையை வற்றாது குவித்திடுக!
உயர்வின் பாதைகளை ஊருக்கு உரைத்திடுக!
தரணி போற்றும் தமிழ்வாழ வாழ்ந்திடுக!
தாழாத-தாழ்த்தாத மனதைத் தவறாது பெற்றிடுக!
தன்மானப் போர்க்களத்தில் தளராது போரிடுக!
உண்மை எதுவென்று உலகோர்க்கு உணர்த்திடுக!
ஊமைகளை பேசவைக்கும் உணர்ச்சிப் புயலாய் வீசிடுக!
உரிமையை பாதுகாக்கும் உன்னதப் பணிபுரிக!
துள்ளிவரும் வேலாய் துரோகத்தை வீழ்த்திடுக!
ஆவேசத்தை அள்ளிவரும் வாளாய் பகையை சாய்த்திடுக!
உலகம் ஒன்று எனும் உண்மையை உணரச் செய்க!
தமிழர்க்கு என்றும் தன்மான உணர்வூட்டுக!
தளிராய் ஒளிரும் தங்கத் தமிழே! எழிலே! மதி மலரே!
வையம் சிறந்து செழித்து மலர்ந்திட
வளரும் இமயமாய் வளர்ந்திட வாழ்த்துவோம்.
1. வாழ்க
வண்ணக் கலையமுதே!
வாழ்க்கை சீர் அமுதே!
வரலாற்றுப் பேரமுதே!
வாசப் பூ மலரே வருக!
எங்கள் தமிழ் வளமே!
எழிற்பெருங் கலையே!
ஏடு கொள்ளாக் கவிதையே!
எந்நாளும் வாழ்க சிறந்து!
இளங்கோவின் தமிழே!
இலக்கியப் பொருளே!
இன்னிசைப் பெருமழையே!
எழிலமுதே வாழ்க நன்று!
புத்துலகம் பல கண்டு,
புதுமைக் கோலம் பூண்டு,
பூமாலைகள் புகழ் சொரிய,
பெரியாராய் வாழ்க!
அறிவின் தொகை கண்டு,
ஆற்றலின் வகையறிந்து,
அன்பில் நிலை கொண்டு,
அண்ணாவாய் வாழ்க!
சாதனைச் சிகரமாய்,
சரித்திரப் புதுமையாய்,
சங்கத் தமிழ் சீர் கொண்ட
சத்தியக் கலைஞராய் வாழ்க!
தமிழின் வழிநின்று
தகுதிகளில் சிறந்து
பகுத்தறிவுப் பாதையிலே
பார்சிறக்க வாழ்க என்றும்!
பாசத்தை சுமந்து சென்று
பண்பாட்டுக் கொடியேற்றி
பார்போற்றும் சீர்மகனாய்
பைந்தமிழே வாழ்க! வாழ்க!

புதிய தலைமுறை புத்தெழில் மலர் öuõh¸®....


Thursday 24 November 2016

அன்றொருநாள் இதே ஊர்...

அன்றொருநாள் இதே ஊர்...
இராசபாளையம்.... வணிகமும் தொழிலும், வேளாண் பெருக்கமும் கொண்டு வளமிகு ஊராக விளங்குகிறது. பஞ்சாலைகளும், நூற்பாலைகளும் மற்றும் பற்பல சிறு, குறு தொழில்களாலும், வணிக வளாகங்களாலும் அதனால் விளைந்த பொருள் வளத்தாலும், மாளிகை போன்ற வீடுகளும், வண்டி, வாகன வசதிகளும், பல்வேறு வணிக வளத்தால் பெரும்பான்மை மக்கள் பெருமித வாழ்வு வாழ்கின்ற சூழ்நிலையை காண முடிகிறது. நகரின் நாலாபக்கமும் தொழில் கூடங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்ற ஒளிமிகுந்த காட்சிகள் நம்மை மகிழ வைக்கிறது. ஊரைச் சுற்றிலும் பள்ளி கல்லூரிகள் தோன்றி புதிய சமுதாயத்திற்கு உரமூட்டி வருகின்றன
மாமன்னன் இராசஇராசன் கூட வாழாத வசதிகளுடன், இன்றைய கூலித் தொழிலாளி வாழ்கின்ற வகை காண மனம் மகிழ்ச்சியின் உச்சியில் நின்று கூத்தாடுகின்றது. மின்சாரம் தந்த பயனால் விசையில் ஓடும் வண்டிகள், டி.வி, டெக், ரேடியோ, டிரான்சிஸ்டர், கணிணி, பிரிட்ஸ், வாசிங்மெசின்கள், போம் மெத்தை போன்ற வசதிகளுடன் இராசஇராசன் வாழ்ந்தான் என்று வரலாறு கூறவில்லை. சுவிட்சைப் போட்டால் தொலைதூரகக் காட்சிகளை பார்க்கவும், அங்கிருப்போரின் பேச்சைக் கேட்கவும் இராச இராசனுக்கும் வாய்ப்பில்லை. தன் மகனோடு தொடர்பு கொள்ள ஆறுமாதங்கள் ஆனது. ஆனால் இன்று உலகின் எந்தப் பகுதியையும் உடனடியாக பார்க்கின்ற வாய்ப்பை இங்குள்ள ஏழைகள் கூடப் பெற்றிருக்கின்றார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பயன்மிகு பற்பல பாடசாலைகள், பயிற்சிக் கூடங்கள், இருபத்து நாலு மணிநேரமும் இயங்குகின்ற மதுக்கடைகள், கறிகோழி, மீன் உணவுடன் புரோட்டாக் கடைகள், இரவு பகல் இயங்கும் ஆணையும் பெண்ணையும் எந்த நேரமும் வேலை வாங்கி தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன.
இன்றைக்கு இருக்கின்ற இராசை நகரம் பழைய நிலை எப்படியிருந்திருக்கும், சற்று வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்போம்...
இன்றைய இராசபாளையத்தின் பெயர் அன்றிருக்கவில்லை. இவ்வளவு பரந்து விரிந்த ஊர்கள் அன்று இல்லை. ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் சிறு சிறு பகுதிகள். ஆவரம்பட்டி, சம்மந்தபுரம், தோப்புப்பட்டி, சங்கரலிங்காபுரம் ஆகிய பெயர்களில் இருந்தது. அன்று கார், வண்டி, இரயில் இல்லை,  சினிமா இல்லை, மாளிகை போன்ற வீடுகள் இல்லை. அடுக்குமாடி வீடுகள் அறவே இல்லை. தண்ணீர் குழாய், ஜெட் மோட்டார்கள் எதுவுமே இல்லை. நாளும் நல்ல சுவைமிகு உணவுகளை பெரும்பாலோர் உண்டதாக செய்திகள் இல்லை. அரிசி, சோளம், நீரில் நனைத்து ஆட்டுவதற்கு ஆட்டுஉரலும், பொடியாக அரைப்பதற்கு திருகையும், குத்தி அரிசியாக்குவற்கு உரலும் உலக்கையும் தவிர வேறு எந்த கருவியும் இல்லை. கிரைண்டர், மிக்ஸி என்பதெல்லாம் கற்பனையில் கூட காணாத நாள் அந்ந நாளாகும். இன்று கிடைக்கின்ற அனைத்து வசதிகளும் சிறிதும் இல்லையென்றாலும் சக்திமிக்க தெய்வங்கள் மக்கள் நம்பிய மகத்தான கடவுள்கள் அவர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் பல உறவுகளோடு ஆலயங்களில் அடைந்தே இருந்தார்கள். ஆறுகால பூசையும், உற்சவம், ஊர்வலம் போன்ற கோலாகலங்கள் நடந்து கொண்டு இருந்தது.
அப்போது இந்த ஊர் இருக்கும் பகுதிகள், வெள்ளையர்களுக்கு வரிவசூல் செய்து கொடுக்கும் ஜமீன்தார்கள் ஆட்சியின் கீழ்தான் மக்கள் வாழ்ந்தார்கள். வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற விரக்தி எண்ணங்களோடு தான் மக்கள் வாழ்ந்தார்கள். இந்த ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள சில இடங்களின் பெயர்களை வைத்து வாழ்ந்து மறைந்த வயதான பெரியவர்கள் கதை ஒன்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இது கதை அல்ல உண்மை நிகழ்வென்றே சொன்னார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த ஊரின் தென்பகுதி சேத்தூர் ஜமீனையும், வடபகுதி வேப்பங்குளம் ஜமீனையும் சார்ந்தது என்றும் சொன்னார்கள். அதில் வேப்பங்குளம் ஜமீனில் இரண்டு அல்லது மூன்று அண்ணன் தம்பிகள் என்றும், அண்ணன் தம்பிகளுக்கிடையில் வேற்றுமனம் கொண்டவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பகையை மூட்டி விட்டார்கள். அதன் விளைவு அந்தச் சகோதரர்களிடையே சண்டை மூண்டது.
அப்போது கார், பைக் கிடையாதல்லவா? மாட்டு வண்டி, குதிரை, கழுதைகளில்தானே பயணிக்க வேண்டும். துப்பாக்கி இல்லாத நாட்கள் அது. அரிவாள், கத்திகளால்தானே தாக்க வேண்டும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த அந்தச் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்காக போராடுகிறார்கள். உடல் வலிமைகுறைந்தவன் உயிரைக் காத்துக்கொள்ள ஒடினான், ஓடினான், ஆன மட்டும் ஓடினான். உடன்பிறந்தவனைக் கொல்வதற்கு விரட்டினான் - விரட்டினான் வேகம் கொண்டு விரட்டினான். ஒருவனை துரத்திய சகோதரன் அவனைக் குத்துவதற்கு பாய்ந்த இடம் தான் இன்று ஊரின் பக்கத்தில் உள்ள குத்தப்பாஞ்சான் என்ற இடம். அதிலிருந்து தப்பி ஓடிய சகோதரன் மறித்துக் கட்டி போரிட்டான். அந்த இடம் மறிச்சிக்கட்டி என்று வழங்கப்படுகிறது. உயிருக்குப் பயந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் ஓடினான். ஓடியவனை ஓரிடத்தில் பிடித்து குத்தி அவன் குடலெடுத்து அவனுக்கே மாலையாகப் போட்டான். என்னே கொடூரம்? குடலை மாலையாகப் போட்ட இடம் இன்று மாலையிட்டான் என்று வழங்கப்படுகிறது. இதுபோன்ற காரணப்பெயர் கொண்ட இடங்கள் ஆங்காங்கே இருப்பதாக கூறுகிறார்கள்.
சிறுசிறு பகுதியாக இருந்து பற்பல பகுதிகளாகி தெருக்களும் சிறு சாலைகளாகவும் பெரு குடியிருப்புகள் நிறைந்த ஒரு நகராட்சியானபின் கூட இது ஒரு கிராம அடிப்படையிலே இருக்கக் காண்கிறோம். திட்டுத்திட்டாய் தீவுகள் போல் ஒவ்வொரு சாதிக்காரர்கள் அருகருகே அமர்ந்து அவர்களுக்கென்று ஊர்ச் சாவடிகளை அமைத்துக் கொண்டிருப்பதைக் காணும்போது வளர்ந்த நகராக இல்லாது மாறாக சிற்றூர் போலவே தோன்றுகிறது. எல்லாக் கட்சியிலிருந்து தனி, பொது தொகுதிகளில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தாலும் அவரவர் சாதியை பெரிதாகக் கருதும் மனோ பாவம் மட்டும் நீங்கியதாகத் தெரியவில்லை. இதில் புதுமை என்னவென்றால் கிராமப் புறங்களில் இருந்து வந்தவர்கள் எல்லாக் கட்சிகளிலும் நகர அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உண்மை.

சாதிகளுக்குள் சண்டை என்று சில ஆண்டுகள் இராசபாளையம் அல்லோலப் பட்டுக் கிடந்தது. இந்நகரின் சாதிய மோதல்கள் தமிழ்நாடு பூராவிலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது சாதிகளுக்கிடையே சாதி காரணமான நடந்த சண்டையல்ல. சாதிகளில் உள்ள இரவுடிகள் -சல்லிகள் சண்டை என்பதுதான் உண்மை. ஆனால் சாதி மேல் கொண்டபாசம், பற்றுக் காரணமாக எல்லோரும் பயமும் கவலையும் கொள்ள நேரிட்டது. இன்று எல்லா வகுப்புகளும் சற்று தெளிவடைந்திருப்பதால் சாதியக் கட்டுகள் அறுந்து வருவதை எல்லாச் சாதிகளிலும் காண முடிகிறது. பொதுவாக ஒரு சண்டை மோதல்கள் தோன்றியபின் சமத்துவத்தை உருவாக்கும் என்பார்கள். அது ஓரளவு சரியாக இருக்கிறது.

Wednesday 23 November 2016

மணம்... திருமணம்...

மணம்... திருமணம்...
திருமணம் எப்போது தோன்றியது என்று ஆராய்ந்தால்...
பொய்யும் வழுவும் தோன்றியபின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்று
            - தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது.
அதாவது பொய்யும் ஏமாற்றுச் சிந்தையும் புரையோடிய காலத்தில் அய்யர் (பெரிய மனிதர்கள்) திருமண முறைகளை உருவாக்கினார் என்று தொல்காப்பியர் விளக்குகிறார்.
மாமுது பார்ப்பான் மறைமொழி ஓத தீவலம் வந்து மங்கள நாண் சூடி மணமுடித்துக் கொண்டனர் என்று கோவலன் கண்ணகியின் மணவிழாவைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்.
இவை இரண்டிற்குமுன் திருமண வழக்குகளை இலக்கியங்கள் இயம்பவில்லை. சங்க இலக்கியங்களில் களவு மணம், கற்பு மணம், உடன்போக்கு என்றெல்லாம் இணைந்து வாழ்ந்ததை பேசப்படுகிறது.
இதயங்கள் இணைந்து இல்வாழ்க்கை தொடங்குவதை ஊரார் உற்றாரிடம் சொல்ல, உறவும் நட்பும் ஒன்றாகக் கூடி, ஆடிப்பாடி அவர்களை வாழ்த்தி ‘மொய்’ செய்து தனி வீட்டில் குடிவைக்கும் முறை சங்ககால மக்களிடம் சிறந்து இருந்தது. உலகில் நாத்திகம் தோன்றா நாளில் பகுத்தறிவு பயன்படா சூழலில் உறவு முறைகளை உணரா சூழலில் ஆண் பெண் இருவரும் யாரும் யாருடனும் கூடி சுகம் பெற்றார்கள் என்பதை மாமேதை இராகுலசாங்கிருத்தியாயன் வால்கா-விலிருந்து கங்கை வரை என்ற நூலில் விளக்குகிறார். அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பிகளை மணப்பது அரச குலங்களில் வழங்கமாக இருந்தது. உலக பேரழகி கிளியோபாட்ரா தன் இரு உடன் பிறந்த தம்பிகளை மணந்ததாக எகிப்திய வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
அரசர்களுக்கு சாதியில்லை உறவு முறை இல்லை என்பதெல்லாம் இங்குள்ள நடைமுறையாகும். கேரளத்து அரசர் குலங்களில் திருமணம் நடந்த பின் அந்தப்பெண் முதலில் கூடுவது திருமணத்தை நடத்தி வைத்த நம்பூதியிடம் என்பது கேரளத்து வரலாகும். முண்டு அவிழ்த்தல் எனும் சடங்கோடு முதலிரவில் நம்பூதிரிதான் இன்பத்தை அனுபவிப்பான்.
திருமணங்கள் எல்லாம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று மதங்கள் கூறுகின்றன. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணத்தை செய்தவர்களின் வாழ்க்கை நிறைவாகத்தானே இருக்க வேண்டும், சுகமாகத்தானே பொழுது போகவேண்டும். ஆனால் நடப்பும், நிலையும் அதுபோல் இல்லை.
திருமணத்திற்குப்பின் அது ஆணோ பெண்ணோ அவர்கள் படும் பாடும், கொடுமையும் சிக்கலும் சீரழிவும் கொஞ்ச நஞ்சமல்ல. மணமாலை சூடி மகிழ்வோடு உறவும் நட்பும் சூழ நின்று வாழ்த்தளிக்க மூன்று முடிச்சி போடுபவனும் அதை தாங்கி நிற்பவளும் எழிலும் அழகும் தாலாட்ட இதய நிறைவு கொண்டு நாளும் நாளும் மகிழ்கின்றார்களா?
பெரும்பாலான திருமணமானவர்களின் வாழ்க்கையில் பொழுதைக் கழிப்பற்கே போராட வேண்டியிருக்கிறது. மகிழ்வோடு இணைந்தவர்களுக்குள் ஏற்பட்ட மன வேறுபாடுகள், புரிந்து கொள்ளும் திறனின்மை, பலவித வேதனைகளை ஏற்படுத்துவதை காண்கிறோம். அறிவியல் வளர்ந்து, பொருள் குவியாக் காலங்களில் இல்லற வாழ்க்கையில் எரிச்சல் கொண்டு, காவி கட்டி சாமியார் ஆகி, கமண்டலமும் திருவோடும் ஏந்தியவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஒரு முறை மணமுடித்தவர்களின் நிலை என்றாலும் மனிதர்களுக்கு அருள் வழங்குவதாக நம்பப்படும் ஆண்டவர்களுக்கு ஆண்டுதோறும் திருமணம் நடத்தும் நிகழ்வுகள் ஆலயங்களில் அல்லோல கல்லோலப் படுகிறது.
சீதாராமக் கல்யாணம், சீனிவாசக் கல்யாணம், சொக்கர் மீனாட்சி கல்யாணம் என்றெல்லாம் நடத்தி, பக்தர்களைப் பரவசப் படுத்துவோர்கள் சென்ற ஆண்டு கல்யாணம் நடத்தினால் இந்த ஆண்டு குழந்தைகள் உண்டா மனிதர்களைக் கேட்பார்கள். ஆண்டவனைக் கேட்கும் உணர்வுக் கூர்மை தோன்றவில்லை. மதம் தந்த சாதிகளில் திருமணங்கள் பலவிதங்களாக நடக்கின்றன. சடங்குகளும், சம்பிராயங்களும் விருந்தும் வரவேற்பும் கூட பலவித நிலைகளில் நடக்க காண்கிறோம். திருமணத்தில் பெண்ணுக்கு கட்டுகின்ற தாலிகள் கூட சாதிகளுக்கு உகந்தவாறு பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. யானை மண்டை தாலி, சிறு தாலி, சொக்கர் மீனாட்சி தாலி என்றெல்லாம் மணமகளுக்கு சூட்டப்படுகின்றன. தாலி பற்றிய சிந்தனை இல்லாத பகுத்தறிவாதிகள் கூட ஏதாவது ஓர் அடையாளச் சின்னத்தை பெண்ணுக்கு அணிவிக்கிறார்கள். மணமகளுக்கு தாலியைப் பூட்டுகின்ற போதே தாலியைப் புனிதமென்று கூறி அவளை சிறையில் பூட்டி விடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டுதோறும் திருமணங்கள் ஆண்டவனுக்கு நடந்தாலும், நாள்தோளும் இறைவனை இறைவியை புனித நீராட்டி பூப்பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்று பள்ளியறையில் பால் பழம் வைத்து படுக்கச் செய்கின்ற நிகழ்சிகள் ஆலயங்களில் நடக்கக் காணலாம்.
உலகம் முழுவதும் திருமணங்கள் பல்வேறு நிலைகளில் நடக்கின்றன. பதிவு திருமணம், பால்ய விவாகம், காதல் மணம், கலப்பு மணம், மறுமணம். அறுபதாம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு திருமணம் என்றெல்லாம் நடத்தி இனிமை கொள்கிறார்கள்.
நாடெங்கிலும் இப்போது திருமண மண்டபங்கள் கொத்துக்கொத்தாய் உருவாகி விட்டன. சிற்றூர்களிலிருந்து வந்து நகரங்களில் திருமணங்கள் நடக்கின்றன. திருமண மண்டபங்கள் பெருகும்போது மகப்பேறு மருத்துவமனைகளும் பெருகி வருவதைக் காண்கிறோம்.
எளிய நிகழ்ச்சிகள் மூலம் இருவரையும் இணைத்து வைக்கலாம் என்றாலும் ஆடம்பரங்களோடு பொருள் இழப்பையும் ஏற்படுத்தும் நிகழ்வும் பல்கிப் பெருகி பரவி வருவது இந்தியா போன்ற ஏழ்மையில் இருந்து விடுபடும் நாடுகளுக்கு ஆகாது ஒன்றாகும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது மேலைநாட்டு மதவாதியின் கருத்து. ஆனால் திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடு சொர்க்கம் உன்னிடம் தஞ்சம் அடையும் என்பது தமிழ் பாவலனின் கருத்தாகும்.
மென்தோல் தழுவி, மேனி சுகம் காண்பதை விட சொர்க்கம் என்ன பெரிதா என்றான் இனிய தமிழ் கவிஞன் ஒருவன்.
மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க பல்வேறு வழிகளில் முயலும் அரசு திருமண ஆடம்பரங்களை தவிர்க்க முயன்றால் வருமானம் குறைந்தவர்களின் கையிருப்பு வலுப்படும். திருமணச் செலவுகளை எண்ணி இதயம் திறந்த கவிஞர் வைரமுத்து
“செல்வந்தராய் மண மண்டபத்திற்குள் நுழைகிறான்
 ஏழையாய் வெளியேறுகிறான்” என்றார்.
மேற்கண்ட கவிதையில் கண் விழிப்போம், கவலைகளைத் துடைப்போம்.

மணக்களுக்கு இருமாலைகள், வாழ்த்த ஒரு பேச்சாளர் இதுபோதும் திருமணத்திற்கு என்றார் பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர்  அவர்கள். இந்த முறையைக் கடைப்பிடித்துப் பார்ப்பாமோ.

Monday 21 November 2016

ஊழலோ ஊழல்

ஊழலோ ஊழல்
ஊழல்... இந்தச் சொல் வழங்கும் இடங்களையெல்லாம் எழுதுவதென்றால் உலகில் உற்பத்தியாகும், தாளும் மையும் இதற்கே செலவாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். உள்ளாட்சி மன்றத்தின் கடைசிப் பணியாளரில் இருந்து உயர்நிலைப் பதவிகளில் இருக்கின்ற பெரும்பான்மை மனிதர்களின் உள்ளங்களில் குடியேறி உல்லாச வாழ்வைப் பெற்றிருக்கின்ற ஒன்றுதான் இந்த ஊழலாகும்.
ஊழல் என்பது முறையற்றச் செயல்களால் தன் நலம் தான் சார்ந்த நலம் என்று நியாயமற்ற நலன் தேடும் தவறான வழியென்பது தான் உண்மை. உள்ளூர் தெருக்களின் அமைப்புகளிருந்து உலகமன்றங்கள் வரை ஊழல் உறவாடாத இடங்கள் மிக குறைவானது என்றே நல்லவர்கள் நாளெல்லாம் ஓலமிடுகிறார்கள். ஓங்கியறைகிறார்கள்.
நாடே நடுங்கிப் போன நகர்வால ஊழல், அசகாய சூரன் அர்ஜத் மேத்தாவின் ஆகாயமளவு கொண்ட பங்குச்சந்தை ஊழல், தற்போது நாறிப் போய் நடமாடும் கிரிக்கெட் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுத்திடல் ஊழல் என்று எங்கெங்கும் ஊழல் ஊஞ்சலாடி மகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஊழலில் ஒருவகை கையூட்டுக் கொடுத்து காரியம் சாதிப்பது என்பதாகும். அந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால் எழுதும் நீட்யோலைகள் எண்ணற்றுப் பெருகிவிடும். அமைப்புகளின் அலுவலகங்கள் மட்டுமல்ல ஆட்சின் அலுவலகங்களில் எல்லாம் இந்த வகை ஊழல் நீக்கமற நிறைந்து நிற்கின்ற நிலையைக் காணலாம். யாரைப் பார்ப்பதென்றாலும் அன்பளிப்பு இல்லாமல் சென்றால் அது நாகரிகமில்லாத செயல் என்று எண்ணுகின்ற நிலை எல்லாரிடமும் இருக்கின்றது.
சால்வை துண்டு, வேட்டி, திருநெல்வேலி அல்வா, திருவில்லிபுத்தூர் பால்கோவா, இராசபாளையம் மாம்பழம், பண்ருட்டி பலாப்பழம் என்றெல்லாம் கொடுத்து பெறவேண்டும் என்ற எண்ணிய காரியங்கள் நடக்கின்றன.
இலஞ்சம் வாங்கியதாக ஒருவர் குற்றச் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர் அதற்கான சான்று பெற எதாவது கொடுத்துத்தான் பெறுகின்ற இழிநிலை இங்குள்ள நீதிமன்றங்களில் நிலவக் காணலாம். உழுபவனின் உழைப்பவனின் பொருளைத்தான் உண்டு உடுத்தி உயர் வாழ்வை பெற்றிருக்கிறோம் என்பதை உணராதவர்கள்தான் இத்தகைய ஊழல் செயல்களில் ஈடுபட்டு மேலும் மேலும் நல்லவர்களுக்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு மட்டுமல்ல உலகில் சிறந்த நாடான அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழல் என்று அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சனும் அவரது ஆலோசகர் ஹென்றி கீசீங்கரும் உலகம் முழுவதும் உவலைப்பட்டுக் கிடந்தார்கள். வல்லமைமிக்க வடஇந்திய அரசியல் வாதிகளும் தொழில் அதிபர்களும் மகா மெகா ஊழல்களில் ஈடுபடுவதில் இணையற்றவர்களாக விளங்குவதைக் காணலாம்.
இங்குள்ள நீதிமன்றங்களில் சாதாரணமாக ஒரு கெட்டவனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனைகள் வழங்குவதைப் பார்க்கிறோம். ஆனால் இலட்சக்கணக்கான மக்களை உயிரோடு வதைக்கும் பொருளாதாரக் குற்றவாளிகளை பல்லாண்டுகள் வழக்கை நடத்தி தண்டனைகள் வழங்கிய பின்னர் ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது பெற்றுக் கொண்டு அவர்களை விடுவிக்கும் நிலை நெஞ்சை வேதனைக்குள்ளாக்குகிறது.
நீதியற்ற நீதிமன்றங்களும் நேர்மையற்ற நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தைச் சேர்ந்த நெஞ்சமுள்ளவர்கள் சொல்கின்றபோது ஓவென்று அழாமல் வேறு என்ன செய்வது?
நாளும் நாளும் ஏடுகளில் இதழ்களில் வரும் செய்திகளை நாமறிவோம். ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என்றெல்லாம் ஊழல் செய்து சேர்த்தவர்களை கைது செய்தார்கள் என்று செய்திகள் நமது கண்களில் விழுந்து மகிழ வைக்கிறது. ஆனால் அவர்களும் வழக்குகளில் இருந்து வெளிவந்து வெட்கமின்றி நடமாடும் நிலையிருப்பது நாட்டுக்கு கேடல்லவா? நாட்டின் அறிவாளர்கள் ஆய்வாளர்கள் பொது நலச் சிந்தனைப் பொறுப்பு உள்ளவர்களின் உள்ளங்களில் இழையோடும் கருத்து எண்ணிப் பார்க்கும் கருத்தும் கேள்வியும் இதுதான்.
என்னாடு, பொன்னாடு, எழில் நிறைந்த நாடு, இந்து மதம் ஆளும் நாடு, புவியில் சிறந்த புகழ்நாடு, ஆரியம் வாழும் அழகுத் திருநாடு, ஆன்றோர்கள் வாழ்ந்த நாடு, காவியுடை கண்ட நாடு, அருள் தரும் முனிவர்கள் சிறந்தநாடு, புனிதங்கள் நிறைந்த நாடு, காவியமும் கலையும் நிறைந்த நாடு. பலப்பலப் பொருள்களைப் பாடிய பாவலர்களைக் கொண்ட நாடு. வால்மீகியும் வியாசரும், வாத்சாயனரும், காளிதாசனும், ஆர்யபட்டரும், அபிராமி பட்டரும் வாழ்ந்த நாடு என்றெல்லாம் பெருமை கொண்ட நாடு.
இந்த நாட்டில் ஒரு புள்ளி விபரம், இன்று அறிவியல் உச்சக் கட்டத்தில் உள்ள நிலையில் நம்மை வேதனைகுள்ளாக்குகிறது. உலகில் அதிக நோயாளிகள் இங்குதான். கல்வியறிவுயற்றவர்களும் இங்குதான், கல்வியறிவு பெற்றவர்களில் புதுமையோ, பொதுச் சிந்தனையோ, பொறுப்போ இல்லாவர்களும் இங்குதான். ஆலயங்களும், கோவில்களும், ஆகாயத்தை தொடும் கோபுரங்களும், ஆன்மீக வாதிகளும் இங்குதான்  ஆறுகுளங்களில் நீராடி, நித்தம் நித்தம் வழிபாடுகள் நடத்தி நேர்த்திக் கடனும் செலுத்தி நாளெல்லாம் நல்லவை நடக்க ஊரிலுள்ள கடவுளை உள்ளம் உருகி வேண்டி நின்றும் நிலைமாற்றம் நிகழாததும் இங்குதான்.
உலகளந்த கடவுள், உடுக்கை அடித்து உலகை நடத்தம் கடவுள். தந்தைக்கே மந்திரம் சொன்ன அறிவார்ந்த அழகுக் கடவுள், அண்டத்தையே ஆட்டிப் படைக்கும் ஆதிபராசக்தியெனும், அம்மன் கடவுள் என்றெல்லாம் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு ஆற்றல்மிகு கடவுள்களை வழிபாடு செய்த பின்னரும் இந்த நாட்டில் நோயும் நொடியும் இலஞ்ச லாவன்ய ஊழலும் அறியாமையும் அப்பாவித்தனமும் முறையற்ற செயல்களும் தவறுகளும் நடப்பது சரியா? நடப்பது ஏன்? தெளிவுள்ளோர் சிந்திக்க வேண்டும்.
இங்கு ஊழல் ஒழிந்தபாடில்லை, உயர் எண்ணங்கள் மலர்வதில்லை. கொள்ளையிடும் நிகழ்வுகள் நீடித்து நின்று நிலைபெறும் காட்சிகளைக் காணமுடிகிறது. காரணம் அதை ஒழிக்கும் ஆற்றல் எதற்கும் இல்லை என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல இங்கு போதிக்கப்படும் எல்லாமே பொய்மையானது - போலியானது - உண்மையில்லாதது -ஏதும் செய்ய இயலாதது என்பதுதான் உண்மையாகும். 

மாசில்லாததாக மனம் மாறதவரை, உள்ளத்தை உண்மையும் ஊரார் நன்மையும் சூழாதவரை, ஊழலும் லஞ்சமும் ஒழியாது என்பதும் உண்மைதான்.

Friday 18 November 2016

விளையாட்டுகள்

விளையாட்டுகள்
மனிதர் மட்டுமல்ல உயிரினம் தோன்றிய நாளிலிருந்தே விளையாட்டு என்பது வாழ்வோடு இணைந்த இனிமையான ஒன்றாகவே காணலாம். உள்ளம் மகிழும் போது அதனதன் உடல் வாகுக்கு உகந்தவாறு உணர்வுகளை வெளிப்படுத்துவது உயிரினங்களின் வாடிக்கையாகும். மயில் ஆடுவதும் குயில் பாடுவதும் கிளி பேசுவதும் மானும் குதிரையும் காளையும் துள்ளுவதும் யானை அசைவதும் பறவைகள் குக்கூ கிக்கீ என்று இசை மீட்டுவதும் அதனதன் இயல்பான விளையாட்டுத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். விளையாட்டுகள் பலவகை என்றாலும் குறிப்பாக பந்தை மய்யமாக வைத்து விளையாடுவதுதான் பார் முழுக்கப் பரவியிருந்ததென்று அறியப்படுகிறது.
இயல்பான விளையாட்டாக இருந்த நிலை மாறி அதில் ஆற்றல் திறனைத் காட்டுகின்ற போட்டிகள் தோன்றி முறைப்படுத்தப்பட்ட ஒன்றாக விளையாட்டு மாறி மகிழ்வித்தது.  உலகில் சிறந்திருந்த இருபகுதிகளில் உள்ள நிலையை எண்ணிப் பார்ப்போம் பண்பாட்டுச் சிகரங்களாகத் திகழ்ந்த கிழக்கு மேற்கு நாடுகளைக் காண்போம். நமது தமிழகம் ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியிருந்தது. ஆரியர்கள் இந்நாட்டிற்குள் நுழையுமுன்னர் நுண்மாண் நுழைபுலம் என்பார்களே. அதுபோல அறிவும் ஆற்றலும் நிரம்பியதாக இருந்தது. தமிழும் அதன் திசைமொழிகளும் ஆண்ட அனைத்துப் பகுதிகளிலும் அன்றிருந்த உலகின் சிறந்த நிலமாக எல்லா திசைகளிலும் சிறந்திருந்தது. ஆணையிடும் அதிகாரம் திட்டமிடும் நிர்வாகம் தூய்மை கொண்டு வாழ்கின்ற நெறிகள் எல்லாம் நிறைந்த இடமாக அமைந்திருந்தது.
மக்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் அலை பாய்ந்தது. உழைக்கும் நேரத்தில் கூட இசைபாடி மகிழ்ந்தவன். ஊருக்குள் வந்து ஓய்வெடுத்து உறங்குமுன்னர் விளையாட்டுகளோடு இணைந்த பின்னரே வீட்டிற்குள் சென்றான் விழிமூடி தூங்கினான். சிற்றூர் பேரூர் நகரங்களின் தெருக்கள் தோறும்,வீதிகள் எங்கும் நாளும் நலன் தரும் விளையாட்டுகள் நடந்தபடியே இருந்தது. நிலாக் காலங்களில் நெஞ்சை மகிழ்வித்துத் தாலாட்டும் நேர்த்திமிக்க விளையாட்டுகளில் ஈடுபட்டு இளைஞர்களும் இளம் மங்கையர்களும் இதயம் களித்திருந்தார்கள். ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனி விளையாட்டுகள் சிறப்புற்றிருந்தது. பந்து விளையாட்டில் எத்தனை வகையிருந்தாலும் பெண்களின் தலைக் கொண்டையால் பந்தைத் தட்டி விளையாடும் விளையாட்டை குற்றாலக் குறவஞ்சி நமக்கு விளக்குகிறது. பாட்டுப் பாடிக் கொண்டே அதன் தாளத்திற்கு தகுந்தவாறு பந்தை அடிக்கும் விளையாட்டு பாவையருக்கு பரவசத்தை உருவாக்குமாம். சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து தொன்னூற்றாறு விளையாட்டுகள் அறியப்படுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அவை ஒருகாலத்தில் தமிழர்களிடம் தழைத்துச் செழித்து கிடந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தமிழர்களின் வீர விளையாட்டுகள் என்று அறிஞர் ரா. பி.சேதுப்பிள்ளை நூலொன்றைத் தந்து நம்மை மகிழ்விக்கிறார். சோழமன்னன் இளஞ்சேட் சென்னி (கரிகாலனின் தந்தை) குதிரைபூட்டிய தேரை காற்றைப்போல் செலுத்தி போட்டியில் வெற்றி பெற்றான் என்று வரலாறு வாழ்த்துகிறது.
கிரிக்கெட், ஹாக்கி, கோல்ப், அலைச்சறுக்கு, படகு விளையாட்டு, குத்துச் சண்டை, மல்யுத்தம் மற்றும் பல விளையாட்டுகளுக்கு தாயகம் தமிழகம் என்கிறது ஆய்வாளர் குறிப்புகள். இன்னும் சொல்வதென்றால் இங்கிருந்துதான் எங்கெங்கும் ஏற்றுமதியாகி இருக்கும் என்பதற்கு சான்றாக பெரிப்புளுசு எனும் உலகப் பயண நூல் கிரேக்கத்தின் தாய் பாண்டிய நாடு என்பதால் விளையாட்டிற்கும் தாயகம் தமிழமாகத்தான் இருக்க வேண்டும். தமிழகத்தைப் பற்றி பேரறிஞர் அண்ணா குறிப்பிடும் போது சொல்கிறார். “மருத்துவம் உள்ளிட்ட எல்லாம் இருந்தது. ஆனால் அது கச்சாப் பொருளாகவே இருந்தது” என்கிறார். சீனாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் புத்தத்துறவிகள் மூலம் பரவிய கலைகள்தான் குங்பூவும், கராத்தேயும், சிலம்பு, வர்வம் ஆகிய கலைகளின் மறுவடிவமே மேற்கண்ட இரு கலைகளும் என்கிறார்கள்.

புகழ்பெற்ற மாமன்னன் கரிகாலன் மகள் ஆதிமந்தியும் ஆடற்கலைவல்லான் ஆட்டனத்தியும் நீர் விளையாட்டில் ஈடுபட்ட போது காவிரி வெள்ளம் அடித்துச் சென்றதாக வரலாறு கூறுகிறது. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி ஆய்ந்தறிந்து, அழகுபடுத்தி விதிவகுத்து பதிவு செய்து நுட்பமாக வளர்ப்பதில் அய்ரோப்பியத் தாயகமான கிரேக்கம் மிகக் கீர்த்தியுடன் விளங்கியது. கி.மு. 500க்கு முன்னரே மற்றத் துறைகளைப் போல விளையாட்டுத் துறையையும் விரிவாக விருத்தி செய்தது கிரேக்கம். கிரேக்கத்திலுள்ள ஒலிம்பஸ் மலையடிவாரத்தில் ஒலிம்பஸ் மலைத் தெய்வமான ஒலிம்பியாவின் பெயரால் எல்லாவித கலைகளையும் அரங்கேற்றம் செய்வது வழக்கமாக இருந்தது. குருட்டுக் கவிஞன் ஹோமர் தனது காவியங்களான “இலியட்”, “ஒடிசி” இரண்டையும் இங்கேதான் பாடி அரங்கேற்றினான். அதுபோல் எல்லாத் திறமையாளர்களும் இங்கேதான் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இன்றைய உலகிற்கு எல்லாம் தந்த அய்ரோப்பா இன்றிருக்கின்ற விளையாட்டையும் தந்தது. எல்லாவற்றையும் வணிகமாக மாற்றிய அய்ரோப்பாதான் விளையாட்டுகளையும் வணிகமாக மாற்றியது. ஆலயங்களைக்கூட நிறுவனமாக்கிய அய்ரோப்பா ஆக்கமிகு சூழலோடு அவலங்களைப் புறக்காரணமாகி விட்டது. மனித குலத்தை வாழ்விக்கும் வழிகளையும், முறைகளையும் கொடையாக வழங்கிய தமிழகம் எல்லாவற்றையும் வணிக வலைகளுக்குள் சிக்கவைத்து சீரழிகிறது.  தன்மொழி, தன்நாடு தன்அரசு, தன்இனம் எதுவென்று தெரியாது. தலைசிறந்த தன்வரலாறு தலைதாழ்ந்த நிலை அறியாத, தன்கலைகளின் சிறப்பை தீர்க்கமாக பாராது, இன்று ஒளிரும் எல்லா கலைகளும், நிலைகளும் ஈராயிரம் ஆண்டிற்கு முன்னர் தன்இனத்தான் வடித்தான் என்பதை உணராது கல்வி கற்றவனும் மற்றவனும் கஞ்சிகாய்ச்சி குடிப்பது, கழிவறைக்குச் செல்வது. குட்டிப் போட்டு குடும்பத்தை பெருக்குவது என்றே வாழ்ந்திடும் தமிழினிடம் உலகில் ஒளிரும் விளையாட்டெல்லாம் உன் சொத்து என்றால் சொரணையுடன் நிமிரவா போகிறான்?