Monday 7 November 2016

எரிந்து போன இலக்கியங்கள் கரைந்து போன காவியங்கள்

எரிந்து போன இலக்கியங்கள் கரைந்து
போன காவியங்கள்
மனித குலத்தின் மகத்தான முன்னேற்றம் என்பது மூளை வளர்ச்சிதான். அது மொழி தோன்றிய பின்னர்தான் முறைகள் தோன்றியது. முறைகளின் வழியேதான் மலர்ச்சியும் மாற்றங்களும் முகிழ்த்தன. அதிலும் எழுத்துக்கள் உருவெடுத்தற்குப் பின் தான் எழுச்சி தோன்றியது ஏற்றம் கண்டது மனித சமுதாயம். மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபட்டு உயர்வது இந்த எழுத்துத்தான் உலகில் பேச்சு மொழி உள்ள அளவுக்கு எழுத்துக்கள் அந்த மொழிகளில் தோன்ற முடியவில்லை.
எண்ணத்தில் தோன்றுவதை எழுதி வைத்த பின்னரே இயங்குவது எளிதாகி மனிதன் ஏற்றம் பெற தொடங்கினான். அந்த எழுத்துக்களில் வளம் சிறந்த மொழிகளில்தான் இலக்கணம் இலக்கிய விதிகள் தோன்றி உலகிற்கு எழிலூட்டத் தொடங்கியது. உலகில் உள்ள அய்ந்தாறு மொழிகளில்தான் ஆதிநாளில் கலை, இலக்கியம், காவியம் உள்ளிட்ட முறையான செய்திகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டன. செவியில் ஓதிய, கதைகள், காவியங்கள், பாடல்கள் எல்லாம் எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டு இதயத்தை  நெகிழ்விப்பதோடு உலக நிலைகளை ஒப்பாய்வு செய்து உயிர் நிறைவை அளித்தது.
உலகில் உள்ள ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளின் பிறப்பிடம் ஆறு மொழிகள் என்றும் அந்த மொழிகளின் உயிர் தோன்றியது தமிழில்தான் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறி உலகின் முதல் மொழிதான் தமிழ் என்ற கருத்தின் வழியே உலக மொழி ஆய்வாளர்கள் விவாதித்து வருகிறார்கள். அந்தத் தமிழில் மிகச் சிறந்த செய்திகள் கருத்துகள் எல்லாம் தோன்றி கவிதைகளாக, காவியங்களாக உலகை உய்வித்து வருகிறது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு, அய்ம்பெருங் காப்பியங்கள் என அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றி தொடர்ந்து மக்கள் மனதிலும், நாவிலும் மறையாது விந்தைப் பெருவெளியாய் வியப்பின் விரிவானமாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த அருமைத் தமிழில் ஆக்கிய காவியங்களும் கவிதைகளும் காணாமல் போன பட்டியலை இங்கே நாம் பார்ப்போம். நூற்றுக்கணக்கான நூல்களும் பல லட்சம் வரிகளின் கவிதைகளும் எப்படி அழிந்தது என்று எண்ணுகின்றபோது இதயமே இடி விழுந்ததுபோல் கருகிப் போகிறது. அருமையான படைப்புகளை வடித்தவர்களின் வழித் தோன்றல்கள் மூடர்களாகவும், முட்டாள்களாகவும் இருந்ததால் ஏற்பட்ட நிலையாகும். பண்பாட்டுப் பகைவர்களால், தமிழை அழிக்க முனைந்தவர்களின் சதிச் செயலால் ஏற்பட்ட இழப்பாகும் இது.
ஆடிப்பெருக்கில் ஆற்றில் அள்ளி வீசியும், எரியும் கார்த்திகை தீபச் சொக்கப்பானில் எடுத்தெறிந்து எரிய விட்டும் போகி என்ற நாளில் பழையது என்று குப்பையில் குவித்தும், பழையன கழிதலும் புதியன புகுத்தலும் என்பதின் பொருள் புரியாததாலும் ஏற்பட்ட இழப்புகள் இதயத்தை வேதனைக்குள்ளாக்குகிறது. தன் இனம், தன் மொழி, தன் கலை, தன் காவியம், தன் வரலாறு எதுவென்று தெரியாது இருந்த தமிழன் இருந்த இலக்கிய வடிவங்களை எரி நெருப்பிலும் ஓடும் தண்ணீரிலும் போட்டு விட்டு ஆய்வாளர்களை அறிஞர்களை அழுது புலம்ப விட்டு இன்றும் அப்பாவியாய்த்தான் இருக்கிறான். எரிந்து கரைந்து காணாமல் போன நூல்கள் இங்கே தரப்படுகின்றன. இதை கண்ட பிறகு இனிவரும் தலைமுறை இருப்பதை இழக்காது இருக்க வேண்டுகிறோம்.
காணாமல் போன நூல்கள்
இலக்கிய நூல்கள்
1. அகப்பொருள்
அகத்தினை
அசதிகோவை
அண்ணாமலை கோவை
அரையர் கோவை
அறம் வளர்த்த முதலியார் கலம்பகம்
இராமிசுக் கோவை
இன்னிசைமாலை
கச்சிக் கலம்பகம்
கண்டவை விகாரம்
காரி கோவை
காரைக்குறவஞ்சி
கிளவித் தெளிவு
கிளவி மாலை
கிளவி விளக்கம்
குண நாற்பது
குமார சேனைகிரியர் கோவை
கோயிலந்தாதி
சிற்றெட்டகம்
தமிழ் முத்தரையர் கோவை
திருவதிகைக் கலம்பகம்
திருமறைக் காட்டந்தாதி
தில்லையந்தாதி
நந்திக் கோவை
நறையூரந்தாதி
நாலாயிரக் கோவை
பல்சந்த மாலை
பொருளியல்
மழலை எழுபது
வங்கர் கோவை
வச்சத் தொற்றாயினம்
வல்லையந்தாதி
விஞ்சைக் கோவை
2. புறப்பொருள்
ஆசிரிய மாலை
தகடூர் யாத்திரை
பெரும்பொருள் விளக்கம்
கூடலசங்கமத்துப் பரணி
சொப்பத்துப் பரணி
தென்றமில் தெய்வப் பரணி
வேறுபரணி நூல்கள் (பல்வேறு மனிதர்களைப் பாடியது)
வீர மாலை
பேர் வஞ்சி
3. காவியம்
பழைய இராமாயணம்
ஜைன இராமாயணம்
சங்க காலத்துப் பாரதம்
பெருந் தேவனப் பாரதம்
வத்சராசன் பாரதம்
குண்டலகேசி
வளையாபதி
புராண சாகரம்
விழுபசாரக்கதை
4. ஏனைய நூல்கள்
அந்தாதிமாலை
அமித்தபதி
அந்தாதி கலம்பகம்
அளவைநூல்
அவினந்தமாலை
அரசுச் சட்டம்
விருத்தமாலை
அறிவுடைநம்பியார் சித்தம்
ஆயிரப்பாடல்
ஆரியப்படலம்
இசைஆயிரம்
இராசராசவிஜயம்
இராமாயணம் வெண்பா
இரும்பல் காஞ்சி
இளந்திரையம்
இளவானறையூர்ப் புராணம்
ஓவியநூல்
கன்னிவன புராணம்
அஷ்டதசபுராணம்
கலைக் கோட்டு தண்டு
கால்கோயன் பிள்ளைக்கவி
காசியாத்திரை விளக்கம்
கிளி விருத்தம்
எலி விருத்தம்
குலோத்துங்க சோழ சரிதை
கோட்டீச்சர் உலா
கோல்நற்குழல் பதிகம்
சதகண்ட சரித்திரம்
சாதவாகனம்
சாந்திபுராணம்
சிந்தாந்தத் தொகை
சூத்ரக சரிதம்
செஞ்சிக் கலம்பகம்
சேயூர் முருகன் உலா
சதவிடுதூது
தண்டிகாரணிய மகிமை
தன்னையமக அந்தாதி
திருக்காப்பலூர் குமரன் உலா
திருப்பட்டீசுரப் புராணம்
திருப்பதிகம்
திருப்பானலப்பந்தல்
திருமேற்றளிப் புராணம்
திருவலஞ் சுழிப்புராணம்
திரையக் காணம்
துரியோதனன் கலம்பகம்
தேசிகமாலை
நல்லநாயக்கன் மணிமாலை
நாரதசசரிகை
பரமத திமிரபானு
பரிப்பெருமாள் காமநூல்
பரிபாடை
பிங்கல சரிதை
வாமன சரிதை
பிங்ககேசி
அஞ்சனமுகசி
காலகேசி
தத்துவ சரிதம்
புட் கானார் மந்திரநூல்
மஞ்சரிப்பா
மல்லிநாதர் புராணம்
மாடலம்
மார்க் கண்டேயனார் காஞ்சி
மாறவர்மன் பிள்ளைக்கவி
முப்பேட்டுச் செய்யுள்
மூவடி முப்புத
வாசுதேவனார் சிந்தம்
வீரணுக் கனசயம்
*   இசைத் தமிழ் நூல்கள்
இசைத் தமிழ்ச் செய்யுட்டு முறைக் கோவை
இசைநுணுக்கம்
இந்திர காளியம்
குலத்துங்கன் இசைநூல்
சிற்றிசைபேரிசை
பஞ்சபாரதியம்
பஞ்சமரபு
பதினாறு படலம்
பெருநரை - பெருங்குறுகு
வாய்ப்பியம்
*   நாடகத்தமிழ் நூல்கள்
அகத்தியம்
இராஜராஜேசுவர நாடகம்
காரைக்குறவஞ்சி
குணநூல்
குருசேத்திர நாடகம்
கூத்த நூல்
சந்தம்
சயந்தம்
செயனடிமுறை
செயற்றியம்
சோமகேசரி நாடகம்
ஞானங்கலங்கார நாடகம்
திருநாடகம்
நூல்
பாரதம்
பரத சேனாபதியம்
பரிமந்தா நாடகம்
மதிவாணர் நாடகநூல்
முறுவல்
பூம் புலியூர் நாடகம்
கடகண்
வஞ்சிப் பாட்டு
மோதிரப்பாட்டு
விளக்கத்தார் கூத்து
*   இலக்கண நூல்கள்
அகத்தியம்
அகதியர் பாட்டியல்
அணியியல்
அவிநயம்
அவிநயஉரை
இன்மணியாரம்
நாலடி நாற்பது என்னும் அவிநயம் நன்மை
கடிய நன்னியார் கைக்கிளை சூத்திரம்
கவிமயக்கற
காக்கைப் பாடினி
குருவேட்டுவச் செய்யுள்
லோகவிசாலனி
பெருவள்நல்லூர் பாசண்டம்
சையனார் யாப்பியம்
சங்கயாப்பு
சிறுகாக்கைப் பாடினியம்
செய்யுளியல்
செய்யுள் வனகம்
தக்கானியம்
தத்தாதிரேயப் பாட்டியல்
நக்கீரர் அடிநூல்
நக்கீரர் நாலடி நானூறு
நத்தத்தனார் இயற்றிய நத்தத்தம்
நல்லாறன் மொழிவரி
பரிப்பொருள் இலக்கணநூல்
பரிமாணனார் படைப்பிலக்கணம்
பல் காப்பியம்
பல்காப்பிய புறநடை
பல்காயம்
பனம்பாரம்
பன்னிருபடலம்
பாடலம்
பாட்டியல் மரபு
புணர்ப்பாவை
போக்கியம்
சிரணியம்
வதுவிச்சை
பெரியவம்சம்
பெரிய இப்பழம்
பேராசிரியர் (மயேச்சுவரா)
மாபுராணம்
பூதபுராணம்
முள்ளியார் கவித்தொகை
யாப்பியல்
வாருணப் பாட்டியல்
*   உடலின் உறுப்புகளை மனிதன் இழந்ததுபோல சிதைந்து போன நூல்கள்
அய்ங்குறுநூறு
அய்ந்திணை எழுபது
கைக்கிளை
திணை மொழி அய்ம்பது
திருவிங்கோய்மலை
தேவாரம்
நற்றினை
நீலமேகம்
பதிற்றுப்பத்து
பரதசாத்திரம்
பாரத வெண்பா
பரத சேனாபதியம்
பரிபாடல்
புறநானாறு
பெருங்கதை
மாபாரதம்
மாபரத சூடாமணி
முத்தொள்ளாயிரம்
முத்த பிள்ளையார் மும்மணிக்கோவை

பெயர் தெரியாத சில குறிப்புள்ள நூல்கள் பலப்பல. எந்தக் குறிப்பும் கிடைக்காததால் தெரியாமல் போனவை எத்தனையோ. கார்த்திகை தீயில் எரிந்தும், ஆடிப்பெருக்கில் நனைந்து அமிழ்ந்து போன நூல்களில் என்னென்ன செய்திகள், கருத்துக்கள் இருந்தனவோ, தமிழக மக்கள் அறிவுடமை மாநிலத்து மண்ணுயிற்குகெல்லாம் இனிது என்றான். இதை என்றானை ஒருவன் அவன் கருத்தை உணராமல் அடுத்தடுத்த தலைமுறை அறிவிழந்ததாக ஆற்றல் அற்றதாக ஆனதால் இழந்த நூல்கள் எண்ணற்றவை. அந்த நூல்களில் உள்ள செய்திகள் எவை என அறிய முடியாதவை ஏராளம் இனிவரும் தலைமுறையாவது இருப்பதை காக்கும் உணர்வைப் பெறுமா?

No comments:

Post a Comment