Monday 16 March 2015

அறிவாளரோடு உறவாடும் மடல் 1




அன்பார்ந்த இயக்குநர் அவர்களுக்கு, வணக்கம்! வாழ்த்துக்கள்!
வணிகர் - வாங்குவோர் என இருவரின் எண்ணங்களில் இழையோடுவதை எடுத்துச் சொல்ல வைத்து நீயா? நானா? வைப் பாராட்டுவது கடமையாகிறது.
வாங்குவோரை வளைத்திடும் வல்லøமை, கொண்டவர்கள் வணிகர் என்பதை நீயா? நானா?விலும் காண முடிந்தது. இங்கு வாங்குவோர் அந்த வணிகர்கள் மீது வாஞ்சை கொண்டார்கள்.
நிறையச் சொல்லி நெஞ்சில் பலர் நிறைந்தார்கள் என்றாலும் அந்த இளநீர் வணிகர்களின் செயலை வானமளவு பாராட்டலாம். வணிகர்களும் வாங்குவோரும் வலைப்பின்னல் மூலமாக வல்லமைக் காரர்களின் விழும் பூச்சிகளாவார்கள் என்ற உண்மை இங்கே ஒளிகாட்டி நின்றது.
வணிகர்களான வள்ளல்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள் ஆனால் பெயர் குறிப்பிட்டிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.
நூறு நூறு மலர்களே மலருங்கள் என்று சிறு சிறு வணிகர்களை வாழ்த்திய சீனத் தலைவன் மாசேதுங்கையும் தன் பிழைப்புக்காக வணிகம் செய்தாலும் வளமிகுந்த இடங்களில் இருந்தெல்லாம் பொருள்களைக் கொண்டுவந்து வறுமையுற்றவர்களின் வறுமையைப் போக்கியவர்கள் என்று தந்தை பெரியார் பாராட்டினார்.
தந்தை பெரியாரின் சிறப்பு வணிகத்தால் பெற்று, தனது தந்தை வழிச் சொத்துக்களையும் பொதுவுக்கிற்கே வழங்கிய வள்ளல் ஆவார். வணிகத்தால் பெற்ற வளங்களை  கல்விக்கு ஈந்த வள்ளல் அழகப்ப செட்டியார், அண்ணாமலைச் செட்டியார், தியாகராஜ செட்டியார், பச்சையப்ப முதலியார் இவர்களையெல்லாம் கூட குறிப்பிட்டுருக்கிலாம்.
நிறைவாக நீயா? நானா? ஒரு நல்ல நிகழ்வை வழங்கியதற்காக வாழ்த்தி மகிழ்கிறேன்.
குறிப்பு: மின்தடையால் சிறிது நேரம் நிகழ்ச்சியைக் காண இயலவில்லை. அந்த நேரத்தில் சொல்லி இருந்தால் சொன்னவர்களை பாராட்டுகிறேன்.
நன்றி
பெறுநர்
அந்தோணி அவர்கள்,
இயக்குர், நீயா? நானா?
விஜய் டி.வி, சென்னை.

No comments:

Post a Comment