Sunday 21 September 2014

இனிக்கின்றது இதயம் நெகிழ்கின்றது நெஞ்சம்

இனிக்கின்றது இதயம்
நெகிழ்கின்றது நெஞ்சம்


இந்திய விண்வெளி ஆணையம் மிக காலத் தாழ்வாக சில சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நிலவில் கருவிகளை இறக்கியது. செவ்வாய் கோளில் ஆய்வுக்கருவிகளை நிலை நிறுத்தும் முயற்சியில் சந்திராயனை போல மங்கள்யான் எனப் பெயரிட்டு செயற்கைக்கோளை செலுத்தி மகிழ்வித்திருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கிய, அவரின் உணர்வுகளை இயன்றவரை இதயத்தில் ஏந்திய, இனிய தமிழன் அண்ணாதுரை மயில்சாமி அவர்களின் அதிக ஈடுபாட்டுடன் இனிக்கும் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிவியல் செய்திகளை அதிக அளவு பதிவு செய்த அறிஞர் அண்ணா, எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய ஒரு கருத்தை "இருளகல" எனும் தலைப்பில், இனிக்கும் எழுத்தோவியத்தை தந்து எழுச்சியூட்டினார். நிலாவில் நிறையாற்றலால் எத்தகைய காட்சிகள் தெரிகின்றன என்று விளக்கினார்.

அந்த அருமை பெருமகன் பிறந்திட்ட செப்டம்பர் திங்களில் மங்கள்யான் செவ்வாயில் தரையிறங்கும் செய்தி தமிழனாய் தன்னை உணரும் ஒவ்வொருவருக்கும் உள்ளம் பெருமிதம் அடையும் என்பது என் எண்ணம்.  ஆயிரம் வழிகளில் அறிவியல் ஆராய்ச்சியை தடுக்கும் ஆரிய ஆதிக்கத்தின் இருளையும் தாண்டி திராவிட(தமிழ்) கருத்துக்கள் ஒளி வீசும் என்பதற்கு சான்றாக இதை கருதலாம்.

செப்டம்பர் 26ம் நாள் என்பதற்க்கு பதிலாக செப்டம்பர் 15 என அண்ணாதுரை மயிலசாமி அவர்கள் திட்டமிட்டிருந்தால் உலகில் தமிழினம் அந்த நாளை உவகையுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கும்.


எப்படியோ இன்னல் இடையூறுகள் தடைக்கற்கள் பலவற்றை தாண்டி தமிழும் தமிழர்களும் அவர்களின் உணர்வும் கருத்தும் உயர்நிலை காணுகின்ற போது நெஞ்சம் சற்று நிறைவடைகிறது.

No comments:

Post a Comment