Monday 19 December 2016

புதிய தலைமுறை புத்தெழில் மலர் தொடர்ச்சி...

17. மனித இனங்கள்
நெஹ்தூர்த் எனும் நெஞ்சில் நிறைந்த
உருசிய எழுத்தாளர் உலகம் முழுவதும்
உள்ளமனிதர்களை ஆய்வு செய்தார்!
மனித இனங்கள் என்றதொரு
மணங்கமழும் நூல் ஒன்றை
விபரங்களுடன் வெளியிட்டார்!
பல்வேறு தோற்றங்களில்
தோன்றுவது ஏன் என்று
வினா எழுப்பி விளக்கம் தந்தார்!
வண்ணங்கள் பலவாக
வடிவங்கள் வேறாக
வாழ்கின்ற மனிதர்களை
அறிவியல் முறையினால்
ஆய்வு செய்தார் முடிவு சொன்னார்!
விழிகள், தலை முடிகள், தோலின்
நிறங்கள் வேறுபடும் நிலை சொன்னார்!
மங்கோலியர் மஞ்சளாகவும்
ஆப்பிரிக்கர் தோற்றம் கறுப்பாகவும்
அய்ரோப்பியர் வெள்ளையாகவும்
இருப்பதற்கு காரணங்களைக் கண்டறிந்தார்
உலகம் உருளுவதாலும் ஒளியின்
விளைவுகளாலும் தோன்றும்
விந்தைகளைப் படம் பிடித்தார்!
உள்ளுணர்வுகள் அதனால் தோன்றும்
வெளித் தோற்றங்களையும்
வெளிப்படுத்தி விளங்க வைத்தார்!
விழிகளில் வேற்றுமை ஏன்?
தலைம முடியில் பல வகை ஏனென்று
பழச் சுளை போல் பல செய்தி சொன்னார்!
கிளை கிளையாய் உலகைப் பிரித்து
நிலைமைகளை நிரல்படச் சொன்னார்!
வண்ணக் குழம்புகளை ஓரிடத்தில்
வான வில் போல வரிசைப்படுத்தி
அளந்தளந்து கலந்து காட்டி
மனிதர்களின் தோல் நிறம் தோன்றுவதை
அறிவியல் முறைகளோடு பதிவு செய்தார்!
குரங்கிலிருந்து மனிதனாக
வளர்ந்தான் என்றார் அறிஞர் டார்வின்!
உயிரியல் ஆய்வுகள் உயர்ந்து வருகிறது!
ஒரு லட்சம் ஆண்டுகளில் உருமாற்றம்
உருவாகி வருமென ஆய்வுகள் சொல்கிறது!
மனித உருவம் மாறி வரலாம்
மற்றோர் உருவம் மலரவும் கூடலாம்
வான்வெளி மனிதனாகவும் ஆகலாம்
உயிர் வளரும் பொருளையெல்லாம்
உற்று நோக்கி ஆய்தளித்த
உண்மை அறிஞர் டார்வினை
உளமார வாழ்த்துவோம்
உதயமாறன் பெற்றெடுத்த
உலகப் பெரும் புகழே
உண்மைகள் நிலை பெற
ஒளிவீசும் திருப்புகழே
மனிதனின் மாண்பு காக்க
மாசற்ற பணி புரிவாய்
மாற்றங்களில் மகிழ்ச்சி தங்க
மகத்தான தொண்டு செய்வாய்!

No comments:

Post a Comment