Thursday 13 August 2015

சர்மா ஏன் சாடவில்லை?

சர்மா ஏன் சாடவில்லை?
வரலாற்றுச் செய்திகளை வாரி வழங்கிய எழுத்தாளர் திரு. வே.சாமிநாத சர்மா அவர்கள்.
மேலநாட்டு எழுத்தாளர் புளுடார்க் போல வரலாறு படைத்த மாமனிதர்களை வரைந்து காட்டி பொதுநல உணர்வாளரகளின் போற்றுதலைப் பெற்றவர் திரு. சாமிநாத சர்மா அவர்கள்.
அய்ரோப்பாவின் தாயகமான கிரேக்க மாவீரர்களின் சிறப்புகளையும் ரோமானியர்களின் திறன் பற்றியும் உலகின் கீழ்த்திசை நாடுகளான சீனாவின் சீர்மையாளர்களின் பெருமை வாழ்க்கை பற்றியும் இந்தியத் துணைக்கண்டததின் நிலைகள் பற்றியெல்லாம் எழுதிக் குவித்தவர் திரு. சர்மா அவர்கள்.
தற்போது என் விழிகளின் முன் திரு. சர்மா தீ“ட்டிய புராதன இந்தியாவின் அரசியல் என்ற நூல் தன் ஆய்வுமுகம் காட்டி நின்றது. இந்த நூலில் இந்தியாவில் கி.மு. நூற்றாண்டுகால சில செய்திகளையும் கி.பி. நூற்றாண்டுகால நிகழ்வுகளையும் நிறைய நிறையவே எழுதிக் காட்டுகிறார்.
அரசன், அரச குரு, குருமார்கள், அரசின் அமைசர்கள், இந்த அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கும் மற்றொரு அமைச்சர் குழுக்களும் இருந்தன என விளக்குகிறார். அரசை இயக்கும் தலைவனான அரசனிலிருந்து அடுத்தடுத்த அதிகாரம் படைத்தவர்களின் ஊதிய விவரங்களை எல்லாம் எடுத்துரைக்கிறார்.
இந்த முழு நூலும் தருகின்ற தரவுகளில் பல்வேறு முரண்பாடுகளும் வேறுபாடுகளும் விரவி நிற்கக் காண்கிறோம். இங்குள்ள எல்லாவற்றையும் உலகில் எழுந்த இயற்கையை ஆய்ந்து முடிவுகண்டு பயன்படும் நிலை கண்ட அறிவியலோடு இணைத்து வைத்து சமரசப் படுத்துகிறார். இவை பற்றியெல்லாம் பகுத்தறிவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து விளக்குவதென்றால் பல நூல்கள் தேவைப்படும்.
இந்த நூலில் புதுமையாக பின்னுரை என்று கடைசிப் பக்கங்களில் பல்வேறு இந்தியம் சார்ந்தவற்றை பட்டியலிடுகிறார். அது இதோ,
1. மந்திரி, 2.புரோகிதன், 3. யுவராஜன், 4. சேனாதிபதி, 5. துவாரபாலகன்,
6. அந்தப்புராதிகாரி, 7. சிறைச்சாலை அதிகாரி, 8. திரவியத்தை வாங்கி வைப்பவன்.
9. திரவியத்தை செலவழிப்பவன், 10. ஆக்ஞையை நடத்துபவன், 11. நகர அதிகாரி. 12. காரியங்களை விதிப்பவன், 13. தர்மாதிகாரி, 14, சபாத்தியட்சன், 15. தண்டபாலன், 16, துர்க்கபாலன், 17. ராஷ்ட்ராந்த பாலகன் என்னும் எல்லைக் காவலாளி. 18. அடவிபாலகன் என்னும் காட்டதிகாரி.
வேதங்கள் 4:
1)ருக் வேதம் 2) யஜுர் வேதம், 3) சாம வேதம் 4) அதர்ம வேதம்
வேதாங்கங்கள்-6: 
1) சிக்ஷை 2) கல்பம் 3) வியாகரணம் 4) நிருத்தம் 5) சந்தஸ் 6) ஜோதிஷம்
உபநிஷதங்கள் (முக்கியமானவை) - 10:
1) ஈசாவாஸ்ய உபநிஷதம்     2) கேன உபநிஷதம் 3) கட உபநிஷதம்
4) பிரச்ன உபநிஷதம்  5) முண்டக உபநிஷதம்   6) மாண்டூக்ய உபநிஷதம்
7) ஐயரேய உபநிஷதம்   8) தைத்திரீய உபநிஷதம்   9) பிருகதாரண்யக உபநிஷதம்
10) சுவேதாசுவதர உபநிஷதம்
புராணங்கள் - 18:
1) பிரும்ப புராணம்  2) பத்ம புராணம்  3) விஷ்ணு புராணம்
4) சிவ அல்லது வாயு புராணம்  5) பாகவத புராணம்    6) நாரத புராணம்
7) மார்க்கண்டேய புராணம்   8) அக்கினி புராணம்   9) பவிஷ்ய புராணம்
10) பிரம்ம வைவர்த்த புராணம்   11) லிங்க புராணம்  12) வராக புராணம்
13) ஸ்கந்த புராணம்   14) வாமன புராணம்    15) கூர்ம புராணம்
16) மத்ஸ்ய புராணம்  17) கருட புராணம்    18) பிரம்மாண்ட புராணம்
வித்தைகள் - 32:
வேதங்கள்-4,  வேதாங்கங்கள் -6,  ஆயுர்வேதம்-1,   வில் வித்தை-1, கந்தர்வ வித்தை -1, யந்திர வித்தை -1 (மந்திரவித்தையென்றும் தந்திர வித்தையென்றும் மாற்றிக் கூறுவதுமுண்டு), மீமாம்சை-1, தர்க்கம் -1, சாங்கிதம் -1, வேதாந்தம் -1,  யோகம்-1, இதிகாசம் -1, புராணம்-1, தர்ம சாஸ்திரம்-1, ஆத்ம வித்தை -1, அர்த்த சாஸ்திரம்-1, காம சாஸ்திரம்-1, சிற்ப சாஸ்திரம்-1, அலங்கார சாஸ்திரம்-1, காவியம்-1, சங்கேத பாஷாஞானம்-1, சமய பாஷா ஞானம்-1 (அதாவது சமயத்திற்குத் தக்கவாறு பேசுவது), பிற மதங்களைப் பற்றிய ஞானம் -1, லௌகிக ஞானம் -1 (உலகியலறிவு).


கலைகள் - 64:
1. சங்கீதம், 2. வாத்தியங்களில் வாசித்தல், 3. ஆடல், 4. சித்திரம் வரைதல்,
5. உருவங்கள் அமையுமாறு இலைகளைக் கத்தரித்தல். 6. அரிசி, புஷ்பம் இவைகளைப் பல உருவங்களாக அமைத்தல். 7. பொது மண்டபம் அல்லது தனிவீடு இப்படிப் பட்டவைகளைப் பூக்களினால் அலங்கரித்தால். 8. பற்கள், துணிகள், உடல் முதலியவைகளுக்குச் சாயமேற்றுதல். 9. தரையின் மீது வைரம் முதலிய நவரத்தினங்களை அழகுறப் பதித்தல். 10. படுக்கையை ஒழுங்குற அமைத்தல். 11. தண்ணீர் மீது அடித்து இசையெழுப்புதல். 12. நீரால் பிறரைத் தாக்குதல் 13. பலவித மூலிகைகளை ஒன்று கலத்தல். 14. பூமாலை தொடுத்தல். 15.சேகரம், ஆபீடம் என்பன இரண்டு தலையணிகள். இவை மாதிரி புஷ்பங்களைத் தொடுத்து தலையில் அணிவித்தல். 16. ஆடைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்தல். 17. தந்தம், சங்கு இவைகளினால் காதணிகள் செய்தல். 18. வாசனைச் சாமான்கள் தயாரித்தல். 19. புதிய நகைகளைச் செய்தல். 20. ஜாலவித்தை. 21. உடலுக்கு பலம் தரும் மருந்துகள் தயாரித்தல். 22. கைக்காரியங்களைச் சீக்கிரமாகவும், சுலபமாகவும் செய்தல். 23. ஆகார வகைகள் தயாரித்தல். 24. மதுபான வகைகள் தயாரித்தல். 25. தையல் வேலை முதலியன. 26. பொம்மலாட்டம். 27. வீணை, தமருகம் முதலிய வாத்தியங்களை வாசித்தல். 28. புதிர்கள் போடுதல், விடுவித்தல். 29. அந்தாதி பாடக் கற்றுக் கொளளுதல். 30. கடின உச்சரிப்பு, கடின அர்த்தமுடைய சுலோகங்களை நெருடாமல் சொல்லத் தெரிதல். 31. நூல்களை ஒழுங்காகக் படிக்கத் தெரிதல். 32. நாடகம், கதை இவைகளைப் பற்றிய அறிவு. 33. ஈற்றடி பெற்று மற்ற அடிகளைப் பாடுதல். 34. பிரம்பு முதலியவற்றால் பலவகை ஆசனங்கள், கட்டில்கள் செய்யத் தெரிதல். 35. மரத்தினாலும், உலோக வகைகளினாலும் பலவகை உருவங்கள் தயாரித்தல். 36. தச்சுவேலை. 37. வீடுகள் அமைக்கும் முறை. 38. நவரத்தினங்களை மதிப்பிடுதல். 39. ரசவாதம்.
40. நவரத்தினங்களுக்குச் சாயமேற்றல், சுரங்கங்களைக் கண்டுபிடித்தல் முதலியன.
41. மரங்கள், செடி, கொடிகள் முதலியவைகளைப் பற்றிய அறிவு, 42. ஆடு, கோழி முதலியவைகளைச் சண்டைக்குப் பயிற்றல். 43. கிளிகளுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தல். 44. தேகத்தினின்று அழுக்கெடுத்தல், தேகத்தைப் பிடித்தல், தலைமயிரை ஒழுங்குபடுத்துதல். 45. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். 46. சங்கேத பாக்ஷையில் பேசுதல். 47. பிறநாட்டு மொழிகளைக் கற்றல், 48. சகுனம் பார்த்தலைப் பற்றிய அறிவு.
49. புஷ்பங்களினால் வண்டி, பல்லக்கு, யானை, குதிரை போன்ற உருவங்களைச் செய்தல். 50. யந்திரங்களைப் பற்றிய அறிவு. 51. ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்ளல்.
52. ஒருவன் ஒரு கவிதையை ஒப்புவிக்க, அந்தக் கவியை முன்பின்னறியாத மற்றொருவன் அவன் கூடவே ஒப்புவித்துக் கொண்டு வரல். 53. ஒரு கவியிலோ, வாக்கியத்திலோ விடுபட்டுப் போன இடங்களைப் பூர்த்தி செய்தல். 54. செய்யுள் பாடக் கற்றுக் கொள்ளுதல். 55. அகராதி, சந்தம் முதலியவைகளைப் பற்றிய அறிவு. 56. காவியம், அலங்காரம், யாப்பு இவைகளைப் பற்றிய அறிவு. 57. பிறரைப் போல் குரலையும், வேடத்தையும் மாற்றிக் கொள்ளல். 58. அங்கங்களைத் தெரியவிடாமல் மறைக்கும் பயிற்சி. 59. சூதாட்டங்களைப் பற்றிய அறிவு. 60. சொக்கட்டானாட்டம். 61. குழந்தை விளையாட்டுகளைப் பற்றிய அறிவு. 62. நன்னடத்தைகளில் பயிற்சி. 63. சத்துருக்களின் மீது வெற்றி கொள்வதைப் பற்றிய அறிவு. 64. தேகப் பயிற்சியைப் பற்றிய அறிவு.
குறிப்பு: (இதுதான் இந்தியக் கலைகள் என்கிறார் சர்மா. இந்தக் கலைகள் பிறக்கும் குழந்தைகளுக்கும் பெருகும் மக்களுக்கும் வளரும் இளைஞர்களுக்கும் வயதான முதியோர்க்கும் உழுதவன் உழைப்பவனுக்கும் பெரிதும் தருவதென்ன?)
தேசங்கள் - 56:
1.அங்கம், 2. வங்கம், 3. கலிங்கம், 4. ஆந்திரம், 5. திராவிடம், 6. சோழம், 7. கேரளம், 8. கர்நாடகம், 8. சௌராஷ்டிரம், 9. கேகயம், 11. நிஷதம், 12. சூரசேனம், 13. சௌவீரம், 14.சிந்து, 15. காந்தாரம், 16. குளிந்தம், 17. கிராதம், 18. விதேகம், 19. கச்சம், 20. குந்தலம், 22. கொங்கணம், 23. மாளவம், 24. குகுரம், 25, உத்ஸவஸங்கேதம், 26. திரிகர்த்தம், 27. சால்வம். 28. புளிந்தம், 29. மூஷகம், 30. தக்கணம், 31. காஷ்மீரம், 32. காம்போஜம், 33.மல்லம், 34.பப்பரம், 35.கோசலம், 36.விதர்ப்பம், 37.அவந்தி, 38. கூர்ஜரம், 40.சிங்களம், 41. ஆபீரம், 42.கன்யகம், 43. அபீசாரம், 44. சைவலம். 45.பாஸ்லீகம், 46. ஜாங்கலம், 47.கரகம், 48.அங்காரம், 49. போடம், 50. அபராந்தம், 51. பாஞ்சாலம், 52. மிலேச்சம், 53.யவனம், 54.சீனம், 55.ஹுணம், 56.பாரசீகம். (இதை தவிர இன்னும் பல தேசங்கள் பாரத வர்ஷத்தைச் சேர்ந்தவையென்று மகாபாரதம் பீஷ்ம பர்வம் விரிவாகக் கூறியிருக்கிறது)
சர்மா வெளிப்படுத்தும் மேற்கண்ட பட்டியல்களின் பெயர்கள் எல்லாம் இங்கே மக்கள் பேசிய மொழிகளில் இல்லாமல் தங்கள் தாய்மொழியில் இல்லாத சில ஆயிரம் பெயரைப் படித்து பேசுகின்ற மொழியில் இருப்பது ஏன்? இந்தியச் சூழலில் இறுக்கமான ஆதிக்கத்தைப் பெற்று அதிகாரத் துறையில் இன்றளவும் நீடித்திருக்கின்ற சமஸ்கிருதத்தில் ஏன் படைத்தார்கள். மக்கள் கூட்டம் பேசாத தனி ஒரு மொழியான இந்த சமஸ்கிருதம் அதன் சொற்கள், இந்திய மொழிகளில் திணிக்கப்பட்டு அத்துணை மொழிகளையும் கலப்பு மொழியாக்கிய கயவர்கள் யார்?
மேற்காணும் பட்டியலில் உள்ளதெல்லாம் புனிதமானது, புண்ணியத்தைத் தரக்கூடியது. சொர்க்கத்திற்குக் கொண்டு சொன்று சுகங்களைத் தருவது என்று தான் இங்கே போதிக்கப்பட்டது, போதிக்கப்படுகிறது. இது உண்மையென்றால் இங்குள்ள எல்லாமே இனிமையாகவன்றோ அமைந்திருக்க வேண்டும். இல்லையே ஏன்.
இது வேதத்தின் நாடனென்றால் இந்த 56 தேசங்களிலும் வேறுபாடும் முரண்பாடும் தோன்றியது ஏன்? மேற்கண்ட பட்டியல்களில் உள்ளதெல்லாம் உயர்வானது என்றால் எல்லா மக்களின் வாழ்வுநிலை உயர்ந்து உச்சத்தை அடையாதது ஏன்? உழுதவனும் உழைத்தவனும் அடிமையானது ஏன்? அவர்களது உணவையும் உற்பத்தி சார்ந்த பொருட்களையும் உழைக்காமல் உண்டு துய்த்தவகளை மேன்மக்கள் என்றது ஏன்?
இதை நுண்மான் நுழைபுலம் கண்டு நுண்ணறிவு சார்ந்து நுனிகிய ஆய்வுகள் பலவற்றைச் செய்து நூல்வடித்த வெ. சாமிநாதசர்மா விளக்கிப் பொருள் தர வில்லை. அதுகூட பரவாயில்லை சாட வேண்டிய பல நிலைகளை சாடவில்லையே அது ஏன்?
குறிப்பு: (பழந்தமிழாட்சி என்று தமிழரசர்களின் ஆட்சி முறையை விளக்கித்
திரு. தேவநேயப் பாவாணர் ஒரு நூல் தந்திருக்கிறார். அறம் சார்ந்த அரசுத் துறைகளையும் பட்டியலிடுகிறார். ஆங்கில அரசுகளையும்விட அதிகத் துறைகளை (ஈஞுணீச்ணூtட்ஞுணt) கொண்டிருந்தது தமிழரசுகள் என்கிறார் பாவாணர். ஆனால் இதைப்பற்றி எல்லாம் தமிழ் ஆய்வாள்கள், தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ் மக்களுக்கு சொல்வதில்லை என்பதுதான் வேதனைக்கும் வெறுப்புக்கும் உரியதாகிறது.)

No comments:

Post a Comment