Sunday 16 August 2015

ஏடுகள் இதழ்கள்

ஏடுகள் இதழ்கள்

ஏடுகள் நாடுகள் தோறும் பல நல்ல விளைவுகளை தோற்றுவிக்கும் ஒரு ஆற்றல் வாய்ந்த கருவி பத்திரிக்கைகள் மனிதர்களின் மனத்திற்கு குளிர்ச்சியூட்டும் மலையருவி. உணர்ச்சிகளுக்கு எழுச்சியூட்டி உணர்வுக்கு இட்டுச் செல்லும் ஏணி! வழியின்றி தவிப்போரை கரைசேர்க்கும் அறிவுத்தோணி என்றெல்லாம் இதழ்களின் சிறப்பை ஏடுகளில் தனிப் பெருமைகளை பலர் எடுத்துச் சொல்லுகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் தேடித் திரட்டி, சீரிய முறையில் பதிப்பித்து மக்களுக்கு சொல்லுகின்ற மகத்தான பணி பத்திரிகைகளுக்கு உண்டு. ஆகையில் நல்லார்வத்தில் நாட்டு மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற இலட்சிய விருப்பத்தில் பல்வேறு இடர்ப்பாடுகள், இன்னல்கள், சிரமங்கள், சிக்கல்கள் அரசின் அடக்கு முறைகள் ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு தம் கைம்பொருளையும் இழந்து தொடர்ந்து பத்திரிகை நடத்த இயலாது பாதியிலேயே தன் பயணத்தை நிறுத்திக் கொண்டோர் இங்கு மட்டுமல்ல; பாரின் பல பகுதிகளிலும் பலப்பலர் உண்டு. பத்திரிக்கைகள் பல பாரிகை சீரமைத்ததும் உண்டு. புழுதியில் புரண்டு கிடந்தோர்க்கு புத்தியில் தெளிவூட்டி புரட்சிக் கருத்துக்களை புகட்டி புதுமை எண்ணங்களை ஊட்டி, எழுச்சி கொள்ள வைத்து நம் நாட்டு விடுதலைக்கு போராடும் போர் மறவர்களாக மாற்றியதுமுண்டு. நலிந்து கிடந்தோர்க்கு நல்லுணர்வூட்டி நல்லறிவு கூட்டி சமுதாய மாற்றத்திற்கு பாட்டியமைத்த பத்திரிகைகளும் சில உண்டு. ஒரு பத்திரிகைகளும் சில உண்டு. ஒரு பத்திரிக்கையை நடத்துவதற்கு பலவித துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது தெரிந்ததே பலர் இதழ்களை தொடங்குகின்றனர். சிலர் வெற்றி பெருகின்றனர். சிலர் வீழ்ச்சியடைகின்றனர். எப்படியிருப்பினும் இதழ் நடத்துவோரின் உள்ளமும் நட்பும் உண்மையானதாக இருக்க வேண்டும். காய்தல், உவத்தல் இல்லாத மனதில் கண்ணியம் குடி கொண்டிருக்க வேண்டும்.

பொறாமை இல்லாத இதயத்தில் புதுமை எண்ணங்கள் நிறைந்திருக்க வேண்டும். வளர்ச்சிப் பாதையில் மக்களை வழிநடத்த தம் எண்ணமும் எழுத்தும் பயன் பட வேண்டும். எனும் இலக்கிய நோக்கம் இதயத்தில் படர்ந்திருக்க வேண்டும். நாட்டின் நலிவிற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்று இதழ் நடத்துவோரின் நெஞ்சம் நடுங்கிய வண்ணம் இருக்க வேண்டும். இதைத்தான் பத்திரிக்கை தர்மம் அதாவது இதழ்களின் நெறிமுறை என்று கூறுகிறார்கள். ஆனால் இன்று வெளிவருகின்ற இதழ்கள் பல அப்படிப்பட்ட குணங்களை கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்வியை கேட்போர் காணும் காட்சி அவலங்கள் நிறைதிநந்ததாகவே தான் இருக்கிறது. அன்பினைச் சொல்லும் இதழ்கள், அறிவினை மழுங்கடிக்கும் இதழ்கள், ஆராய்ச்சி உணர்வினை சாகடிக்கும் பத்திரிகைகள், மூடநம்பிக்கையை நிலைப்படுத்தும் ஏடுகள், முட்டாள்தனம் என்றால் நாட்டில் நிறைந்திருக்க விழிப்புடன் பாடுபடும் இதழ்கள், வேசித்தனத்தை விளம்பரப்படுத்த இதழ் முழுக்க செய்திகளை நிரப்பும் ஏடுகள் என்றுதான் நடத்துகின்றனர் இங்கே. ஒரு மாநிலத்தின் மொழியில் இதழ் நடத்துவோர் அந்த மொழியை அழிக்கின்ற - அல்லது அந்த மொழியை இழிவுபடுத்துகின்ற வகையில் கட்டுரைகள் செய்திகளை வெளியிடுகின்ற கொடுமையையும் இங்கே இருக்கிறது.  எந்த மக்களின் பணத்தின்மீது தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்களோ அந்த மக்களின் வளர்ச்சியை கெடுக்கும் நோக்கில் சில பத்திரிக்கைகள் நடநத் கொள்கின்றன. ஒருங்கிணைந்து ஒரு மொழியின் கீழ் ஒரு இனக்கூறாய் வாழ்பவரிடையே பேதங்கள் மூட்டி பிரிவினை ஏற்படுத்தி தாழ்வுப் படுகுழியில் தள்ளும் செயலை நெடுங்காலமாய் செய்கின்ற இதழ்கள் பலவும் இங்கே இருக்கின்றன! சீரிய காவியங்கள், சிறந்த இலக்கியங்கள் அறிவூட்டும் கலைச் செல்வங்கள் ஆகியவற்றை மறைத்துவிட்டு தங்களைச் சார்ந்த அறிவுக் கொல்லாத இலக்கியங்களை! இதிகாசக் கருத்துக்களை வானவில் வண்ணங்களில் படங்களாக காட்டும் இதழ்கள் இங்கே நிறைய உண்டு.

இந்த வகையில் இந்து - தினமணி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - மெயில் - கல்வி - கலைமகள் - அமுதசுரபி - ஆனந்த விகடன் - சதேசிமித்திரன் - தினமலர் மற்றும் பல இதழ்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்கின்றன; தூய நிலையில் வாழ்கின்ற ஒரு மொழியில் பலமொழி சொற்களை கலந்து துன்பப்படுத்துகின்ற துயரப்படுத்துகின்ற, ஏடுகளும் எழுத்தாளர்களும் இங்குகே ஏராளம் உண்டு. இதழ்களில் வருகின்ற படங்களோ பாலுணர்வு இச்சையை தோற்றுவிக்கும் படங்களாகவோ வருகின்றன. பெண்களின் அங்கங்களில் தங்கவண்ணம் தடவி இளைஞர்களின் இதயத்தை சாகடிக்கும் வகையில் காட்டப்படுகின்றன. திரைப்பட நடிகையரின் உடலை வெளிச்சமிட்டுக் காட்டி இளைஞர்களின் ஆற்றலில் இருள்மூடச் செய்கின்றனர். சட்டப்பூர்வமாக வருகின்ற சில இதழ்கல் ‘எயிட்ஸ்’ சை பரப்பியே தீருவது என்று இதயத்தில் சபதமிட்டு இருக்கின்றன. திரைப்படத்தில் அரிதாப் பொடி பூசி நடித்த சில மனிதர்களை நாட்டின் தலைவர்களாக, நல்லறிஞர்களாக என் அற்புதங்களாக ஏன் மகான்காளாக கூட உயர்த்திய பத்திரிக்கைகளும் கூட நம் நாட்டில் உண்டு.  இவையெல்லாம் இதழ் நடத்தும் நெறிமுறைக்கு மாறாவது என்றாலும் மனித நேயத்திற்கு புறம்பானது என்றாலும் நம் மக்கள் இவைகளையே வாங்கிப் படிக்கின்றனர். இப்போது துப்பறியும் பத்திரிக்கைத்தனம் என்ற பெயரில் சில இதழ்கள், இவைகள் வெளியிடுகின்ற செய்திகளும் சொற்களும் சிறிதும் கண்ணியமற்றவைகளாக இருக்கின்றன. நாட்டுக்கு, மொழிக்கு பாடுபட்டோரை இழிவு படுத்தும் முறையில் நடைபோடுகின்றன.

அறிவொளி பரப்பிய ஐஸ்டின், குடிஅரசு, விடுதலை, திராவிட நாடு, முரசொலி ஆகிய ஏடுகள் நடமாடிய நாட்டில் இத்தகைய இதழ்களா? இதயம் வேதனை கொள்கிறது. வெம்பித்துடிக்கிறது. சாதனைச் சிகரத்தில் ஏறவேண்டிய இதழ்கல் சாக்கடையில் மூழ்குவதேன்? ஏற்றச் சாரலில் மக்கலை தூக்கிலிட வேண்டிய இதழ்கள் இறக்கச் சரவில் உருண்டு விடுவது ஏன்? எண்ணிப்பாருங்கள். அவர்கள் பரப்புகின்ற தீய நாற்றம், அவர்கள் பற்ற வைக்கின்ற கெடு நெருப்பு, அவர்களையும் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் வழித் தொற்றல்களையும் கருத்தினிவிடும் இதழாருக்கும், ஏடு நடத்துவோருக்கும் இது எச்சரிக்கையல்ல. எடுத்துக்காட்டு. அவர்கள் இதயங்களில் பதிவு வைக்கப்பட வேண்டிய இலட்சியப்பாட்டு

No comments:

Post a Comment