Thursday 7 August 2014

சாசனப் பட்டயம்

 சாசனப் பட்டயம்


"ஊட்டிக் கல்லூரியை சென்னையிலிருந்து திறக்கிறாரே செல்வி. ஜெயலலிதா'' - இது கேள்வி.
""சீரெங்கத்திலிருந்து சொர்க்க வாசலை திறப்பதில்லையா?'' இது கலைஞர் பதில்!

இப்படி பட்டெனப் பதில் கூறி, சட்டெனப் புரிய வைக்கும், பகுத்தறிவு ஆற்றல் பெற்ற அண்ணன் கலைஞர் முன்னொரு தடவை உதிர்த்த சொல் மலர்கள் இதயமெங்கும் மணமூட்டி, மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.

"புதுக்கோட்டை இடைத்தேர்தலில் கூட்டணி உருவாகுமா?'' - இது செய்தியாளர் கேள்வி. "
                "அது மேகத்தின் கனத்தையும், காற்றின் வேகத்தையும் பொறுத்தது'' - இது கலைஞர் பதில்.


"புதுக்கோட்டை தேர்தலில் காமன் கேன்டிடேட் உண்டா'' - இது செய்தியாளர் கேள்வி.

"
காமனுமில்லை, ரதியுமில்லை'' - இது கலைஞர் பதில்!

"சாணக்கியன் என்பது ஒன்றும் சான்று அல்ல, சகுனி என்பதைப் போலத்தான்''

இது சங்கரமடமல்ல, சனநாயக இயக்கம்.

அடடா... இதயம் இனிக்கும் இது போன்ற கலைஞர் கையாளும் செய்திகளையும், சொற்களையும் எழுதினால் ஏடு கொள்ளாது.

கேள்வி
கேட்பது எளிது, பதிலுரைப்பது கடினம் என்பதுதான் இயற்கை நியதி. ஆனால், இங்கே திராவிட இயக்கத்தென்றலாய் தீந்தமிழின் பூமணமாய், தவழ்கின்ற அண்ணன் கலைஞரின் பதில்கள் எவ்வளவு எளிதாய், இதயத்தில் பதிவதாய் இருக்கிறது.
தந்தை பெரியாரிடம் ஒருமுறை செய்தியாளர்கள் கேட்டார்கள்.

"கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, கடவுள்  நேரில் வந்து விட்டால், என்ன செய்வீர்கள்'' என்று.
"இருக்கிறது என்று சொல்லி விட்டுப் போகிறேன். வரச் சொல்லுங்கள் கடவுளை'' என்றார் பெரியார்.

பேரறிஞர் அண்ணாவிடம், எதிர்க்கட்சித் தலைவர் விநாயகம்

"உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன'' என்று நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் இதயமற்றுக் கேட்டார்.
"என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன'' என்றார் அண்ணா.


பெரியார், அண்ணா கொள்கைகளின், உணர்வுகளின் பெருமைக்குரிய வழித்தோன்றல் கலைஞர் என்பதற்கு வரலாற்று சாசனப் பட்டயமே மேற்கண்ட கலைஞரின் பதில்கள்தான். வேறு சான்று என்ன வேண்டும்

தொடரும்....

No comments:

Post a Comment