Sunday 3 August 2014

கலைத்துறை நூற்றாண்டு விழா நிகழ்வை பற்றிய மடல்


இந்திய சினிமாவில் நூற்றாண்டுவிழா நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சராய் முகங்காட்டி நிற்கும் மூளி அலங்காரி ஜெயலலிதா பேசியதைக் கேட்டோரின் முகம் சுழித்து முப்பது வகையான கோணங்களை வெளிப்படுத்தியது.

\நூறாண்டுகால சினிமா வரலாற்றைப் பேசுகின்ற நுட்பமும் அறிவும் மனத்தூய்மையும் ஜெயலலிதாவுக்கு இல்லை என்பது இங்குள்ள சிறுவர்களுக்கு கூட தெரியும்.

தன்னகங்காரமும் தான்தோன்றித் தனமும் கொண்டோரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்ததை நினைத்து வாக்களித்தவர்கள் வருத்தப்படவே செய்வார்கள்.

கலைஞர் பெயரை பெருமையாக குறிப்பிடாத தவறோடு மறைமுகமாக சாடுவதை வேடிக்கை பார்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளை ஏற்படுத்தலாமா?

ஜெயலலிதா என்ன வானத்திலிருந்து வந்துவிட்ட தேவதையா? சினிமா காரர்கள் ரூபாய் 10 கோடி பெற்ற காரணத்தால் பல்லிளித்து கிடப்பது பகுத்தறிவு மனிதர்களுக்கு அழகாமா? ஜெயலலிதா கலைஞரின் படநிறுவனத்தில் ஊதியம் பெற்ற ஊழியர்தானே. இதை சினிமாக் காரர்கள் உணரவில்லையோ.

ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டின் விழாவிற்கு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அழைக்காமல் கலைஞரை அழைத்து விழா நடத்திய எஸ்.எஸ். வாசனின் மைந்தனுக்கு இருந்த ஆண்மையும் துணிவும் இன்றைய சினிமாக்காரர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

ஓரு ஆட்சி மாற்றத்தின் விளைவாக ஒரு அருமையான நடிகன் வடிவேலுவை சினிமா சண்டாளர்கள் புறக்கணித்தது ஏற்றக் கொள்ளக்கூடியதா?

கூத்தாடிகள், குணக்கேடர்கள், குறைபிறவிகள் என்று இகழப்பெற்ற நாடக சினிமாக் காரர்களை கலைஞர்கள், அறிவு சார்ந்த அருமை மனிதர்கள் என்று வரலாற்றில் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர் கலைஞர் என்பதை இனிமை சார்ந்த உணர்வில் நீந்தி மகிழும் சினிமாவைச் சேர்ந்தவர்கள் எப்படி மறந்தார்கள்.

புராண இதிகாசப் புழுதிகளை வாரியடித்துக் கொண்டிருந்த வண்ணத் திரையில் பூந்தென்றலென புதுக்கருத்தைச் சொல்லும் சமூகப் படங்களை படைத்துத் தந்து வெற்றிபெறச் செய்த பிதாமகன் அண்ணாவும் அவர் வழி நடந்த கலைஞரும் என்பதை இன்றைய சினிமாவைச் சேர்ந்தவர்கள் மறந்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமல்லவா?

பதவியிலிருப்பவர்களிடம் பல்லிழித்து படம் போட்டு பணம் பெற்று உழைப்பது சரி என்றால் அவனுக்குப் பெயர் கலைஞனல்ல. ஏன் மனிதனே கூட இல்லை என்றால் அது சரிதானா?

கலைத்துறை வரலாற்றில் கலைஞருக்கு சிறந்த அத்தியாயம் உண்டு என்பதை உணராதவர்களும் உரைக்காதவர்களும் உளல் மொழியும் ஊழல் நிலையும் ஊமைத் தனமும் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர ஓர்மையுள்ளவர்களாக இருக்க முடியாதுதானே.

ஜெயலலிதா சிலாகித்துப் பேசிகின்ற எம்.ஜி.ஆர், சிவாசியும் பெரும் புகழ் பெற்றது கலைஞர் உரையாடல் தீட்டிய இராசகுமாரி, பராசக்தி, மனோகராவும் தானே?

எம்.ஜி.ஆரால் அரசியலில் வாழ்வு பெற்று முதலமைச்சர் பதவியில் பொம்மையாய் வீற்றிருக்கும் செல்வி ஜெயலலிதா ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். ஆம் அந்த எம்.ஜி.ஆரை கழகத்தில் இணைத்தவரே கலைஞர் தான் என்பதை அவர் மறந்தால் நன்றி உணர்வில் நஞ்சு கலந்து விட்டது என்று எண்ணலாம் அல்லவா?

எண்ணற்ற படைப்பாளிகளும் அறிவாளிகளும் ஆற்றலாளர்களும் நிறைந்திருக்கின்ற சினிமா துறையில் ஆண்மையுள்ள மான உணர்வு உள்ளவர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணத்தை மக்களிடம் தோற்றுவிக்காதா?

ஒரு வரலாற்று நிகழ்வில் பேசுவதற்கு காய்தல் உவத்தல் அற்ற கண்ணியத்தைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற உணர்வு ஒளிமிகுந்த சினிமா காரர்களுக்கு இல்லாது போனது வெட்கமல்லவா?

தமிழாய் வாழும் தலைவர் கலைஞர் என்றார் எம்.ஜி.ஆரின் மனைவி நடிகை வி.என்.ஜானகி அவர்கள், இலக்கிய கருத்தா என்று இதே ஜெயலலிதா கலைஞரைப் புகழ்ந்து பூச்சொரிந்தார். மணிமகுடம் படத்தில் கலைஞரின் வருணணைத் தமிழுக்கு வண்ணமுகம் காட்டி ஆடி அசைந்து அழகு காட்டிய இன்றைய முதலமைச்சர், அன்றைய நடிகை ஜெயலலிதா இப்போது கலைஞர் மீது காய்கின்ற காரணமென்ன? மக்கள் கேட்கமாட்டார்களா?


     கலையின் ஒரு பகுதி வடிவமான சினிமாவின் நூறாண்டு நிகழ்வு மலர் தழுவி 

மணம் சுமந்து வரும் தென்றலென மனதை தொட்டு மகிழச் செய்திருக்க வேண்டும்

ஆனால் புழுதி மனம் கொண்ட பொறுப்பற்றவர்களால் மனதை புண்ணாக்கும் 

நிகழ்வாக மாறிவிட்டதை இனியாவது சினிமாக்காரர்கள் உணர்வார்களா?

No comments:

Post a Comment